ஆண்களே! நீங்க சின்ன வயசுல இப்படி இருந்திருந்தா? உங்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுமாம்...ஜாக்கிரதை!

Male Infertility In Tamil: நம் உடல் எடை நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தோடு சம்பந்தப்பட்டுள்ளது. குழந்தை பருவத்தில் நீங்கள் ஒல்லியாக இருக்கலாம், தற்போது உடல் பருமனாக தோற்றமளிக்கலாம். அதேபோல, குழந்தை பருவத்தில் நீங்கள் பருமனாக இருக்கலாம், வளர்ந்த பின் உங்கள் எடையை குறைத்து இருக்கலாம். குழந்தை பருவமும் தற்போதுள்ள எடையையும் நம் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக வித்தியாசப்படும்.

அந்த வகையில்,ஆண்களின் குழந்தை பருவ எடை அவரது கருவுறுதலை பாதிக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ஆண்கள் தங்கள் கருவுறுதலை அதிகரிக்க பல வழிகளை முயற்சி செய்யலாம். இருப்பினும், குழந்தைப் பருவத்தில் சாதாரண உடல் எடையைக் கொண்டிருப்பது நல்லது என ஆய்வு கூறுகிறது.

Chilhood Weight Affects Male Infertility In Tamil

ஆண்கள், தங்களின் சிறுவயதில் இருந்தே ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். இருப்பினும், பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு பிரச்சினை ஆண்களின் பாலியல் ஆரோக்கியம். ஒரு ஆண், முப்பது வயதை நெருங்கும்போது, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தால், மலட்டுத்தன்மை பிரச்சனையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

மலட்டுத்தன்மை பிரச்சனையால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை இன்றைய நாளில் அதிகரித்து வருகிறது. இதனால், ஒரு குழந்தைக்குத் தந்தையாகும் வாய்ப்பு குறைவாக இருக்கலாம். ஆண்களின் கருவுறுதல் பிரச்சனை பற்றி பெண்களும் அறிந்திருக்க வேண்டும். ஏனெனில், 2023-லும் கருவூறாமை பிரச்சனைக்கு பெண்களே காரணம் என இந்த சமூகம் குறை கூறிவருகிறது. தம்பதியரின் கருத்தரிக்கும் திறனில் ஆணுக்கும் சமமான முக்கிய பங்கு இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

முதல் அறிகுறிகள் என்ன?
ஒரு தம்பதியினர் 12 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் முறையாக உடலுறவு கொண்ட பிறகும் கருத்தரிக்க முடியாவிட்டால் அல்லது கர்ப்பம் தரிக்கத் தவறினால், தம்பதியினர் மலட்டுத்தன்மையைக் கையாளுகிறார்கள் என்று அர்த்தம். இதற்கு உடனடி தொழில்முறை உதவியை நாட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

ஆண் மலட்டுத்தன்மை பற்றிய உண்மைகள்
ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான முக்கியமான காரணங்களாக இருப்பது மருத்துவ நிலை, சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள்.

மருத்துவ நிலை
சில மருத்துவ நிலைகள் ஆண்களின் கருவுறுதலை வெகுவாக பாதிக்கிறது. நரம்புகளின் வீக்கம் (வெரிகோசெல்), நோய்த்தொற்றுகள், கட்டிகள், ஹார்மோன் பிரச்சினைகள் அல்லது தரமில்லாத விந்தணுக்கள் ஆகியவற்றின் காரணமாக ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படலாம்.

வாழ்க்கை முறை
புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் போன்ற பழக்கங்கள் ஆண்களின் கருவுறுதலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஏனெனில் அவை விந்தணுகளின் எண்ணிக்கை மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைக்கும். அதிக எடை கூட ஆண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையை ஏற்படுத்துகிறது. மேலும், இது பாலியல் ஆசை குறைவதற்கும் வழிவகுக்கும்.

சுற்றுச்சூழல்
ஒரு ஆண் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு அல்லது வெப்பத்திற்கு ஆளானால், அவனது கருவுறுதல் பாதிக்கப்படலாம். செல்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் மடிக்கணினிகள் போன்ற நவீன மின்னணு சாதனங்கள் கூட ஆண்களுக்கு மலட்டுத்தன்மை பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

எடை மற்றும் ஆண் மலட்டுத்தன்மைக்கு இடையேயான தொடர்பை பற்றி புதிய ஆய்வு கூறுகிறது. இதேபோன்ற வளர்ச்சியில், குழந்தை பருவத்திலும் இளமை பருவத்திலும் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது உண்மையில் பிற்கால வாழ்க்கையில் ஆண் மலட்டுத்தன்மையைத் தடுக்கும் என்று புதிய ஆராய்ச்சி கூறியுள்ளது.

ஆய்வின்படி, குழந்தை பருவத்தில் அதிக எடை அல்லது உடல் பருமன் பிரச்சினைகள் உள்ள குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் அதிகளவு இன்சுலின் அல்லது இன்சுலின் எதிர்ப்பைக் கொண்டிருப்பதைத் தவிர, சாதாரண எடை மற்றும் இன்சுலின் அளவைக் கொண்ட குழந்தைகளுடன் ஒப்பிடும்போது குறைந்த விந்தணுக்களைக் கொண்டுள்ளனர்.

குழந்தைப் பருவம் மற்றும் இளமைப் பருவத்தில் உடல் எடையை மிகவும் கவனமாக நிர்வகிப்பது, பிற்கால வாழ்க்கையில் டெஸ்டிகுலர் செயல்பாட்டைப் பராமரிக்க உதவும். டெஸ்டிகுலர் வால்யூம் (டெஸ்டிகல் அளவின் அளவீடு) உண்மையில் விந்தணு எண்ணிக்கையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. எனவே, சிறிய விந்தணுக்கள் குறைவான விந்தணுக்களை உற்பத்தி செய்கின்றன.

அறிக்கையின்படி, 18-19 வயதிற்குட்பட்ட இளைஞர்களில் கால் பகுதியினர் குறைந்த டெஸ்டிகுலர் அளவு அல்லது வழக்கத்தை விட சிறிய விந்தணுக்களைக் கொண்டுள்ளனர், இது அவர்களின் எதிர்கால கருவுறுதலை ஆபத்தில் ஆழ்த்துகிறது. ஆதலால், ஆண்களே! உங்கள் உடல் எடையை சரியாக நிர்வகிப்பதில் கவனமாக இருங்கள்.

Story first published: Wednesday, April 19, 2023, 16:12 [IST]
Desktop Bottom Promotion