Latest Updates
-
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
குழந்தைகள் வெளியில் விளையாடுவது அவசியம்.. இல்லையெனில் இந்த பிரச்சனைகள் தீராது..!
நவீன தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இக்காலத்தில் , குழந்தைகள் வெளியில் விளையாடுவதற்குப் பதிலாக மொபைலில் அதிக நேரம் செலவிடத் தொடங்கியுள்ளனர். அவர்கள் பெரும்பாலும் உட்புற ( indoor games)விளையாட்டுகளில் கவனம் செலுத்துகிறார்கள். இது அவர்களுக்கு எதிர்காலத்தில் சிக்கலை ஏற்படுத்தலாம். இவ்வாறு செய்வதால் குழந்தையின் மன வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும்.
ஸ்மார்ட்போன்கள் அல்லது கணினிகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு கண் எரிச்சல் அதிகரிக்கும். அதனால் அவர்களுக்கு படிப்பது பிடிக்காது. தனியாகதான் இருக்க பிடிக்கும். மேலும், அவர்களால் மற்றவர்களுடன் பழக முடியாது. இத்தகைய சூழ்நிலையில் குழந்தைகளை வெளியில் மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடும் விளையாட்டுகளை விளையாட வைக்க வேண்டும்.. அதனால் அவர்களத் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே குழந்தைகளை வெளியில் விளையாட ஊக்குவிப்பது மிகவும் அவசியம்.

குழந்தைகள் வெளியில் சென்று விளையாடும்போது மனதளவிலும், உடலளவிலும் நன்கு வளர்ச்சி அடைகின்றனர். வெளிப்புற விளையாட்டுகளை விளையாடுவது அவர்களின் ஆளுமையையும் மேம்படுத்துகிறது. அவர்கள் மற்ற குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். இது அவர்களின் சமூக நடத்தையை மேம்படுத்தும். இன்று குழந்தைகளுக்கு எவ்வளவு வெளிப்புற செயல்பாடுகள் தேவை? அதற்கு பெற்றோர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய தகவல்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க...
வெளியில் விளையாடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
இன்று குழந்தைகள் கூட சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், டென்ஷன் போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். ஆனால், வெளிப்புற விளையாட்டுகளை விளையாடுவதால், இதுபோன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன. திறந்தவெளியில் ஓடும்போது குழந்தைகள் பருமனாக மாறுவதில்லை. அதனால் அவர்களது உடல் ஆரோக்கியமாக இருக்கும்...
வெளிப்புற விளையாட்டுகளில், குழந்தைகள் கோ-கோ, பேட்மிண்டன், கிரிக்கெட், கபடி, கில்லி தண்டா, டேபிள் டென்னிஸ், கால்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி போன்ற பல விளையாட்டுகளை விளையாடலாம். இந்த விளையாட்டுகள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது அவர்களுக்கு குழு உணர்வைத் தருகிறது. அவர்கள் மன மற்றும் உடல் வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது.
மேலும் வெளியில் சென்று விளையாடுவதன் மூலம், குழந்தைகள் ஆரோக்கியமாகவும் மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடும் பழக்கமும் பெற்று மனம் மகிழ்வுடன் இருப்பார்கள். ஆனால் மொபைல் பார்க்கும் குழந்தைகள் அவர்கள் எரிச்சல் அடைவார்கள். அதிகமாக கோபம் கொள்வார்கள். எந்த வேலையையும் சரியாக செய்ய மாட்டார்கள். ஆனால் வெளியில் விளையாடும் குழந்தைகள் தங்கள் வேலையை சிறப்பாக செய்வார்கள். அதே சமயம் வெளிப்புற விளையாட்டுகளும் குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை அதிகரிக்கின்றன.
மேலும் வீட்டிற்குள் விளையாடும் குழந்தைகளை காட்டிலும் வெளியில் சென்று விளையாடும் குழந்தைகள் மக்களுடனும் மற்ற நண்பர்களுடனும் நன்றாக பேசுவார்கள். அதனால் அவர்களின் பேசும் திறன் அதிகரிக்கும். அத்துடன் அனைவரிடமும் அவர்கள் பழகி நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வார்கள்...அதனால் குழந்தைகள் விளையாடும்போது புதிய நண்பர்கள் உருவாவார்கள்.. இது அவர்களின் சமூக மற்றும் தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்துகிறது. இது குழந்தைகள் முன்னேற பெரிதும் உதவுகிறது.



Click it and Unblock the Notifications
