Latest Updates
-
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
பெற்றோர்களே! உங்க குழந்தைகளிடம் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்ப அவங்க பெரிய பிரச்சனையில் இருக்காங்களாம்!
குழந்தை பருவ அதிர்ச்சி என்பது ஒவ்வொரு குழந்தையையும் வித்தியாசமாக பாதிக்கலாம் மற்றும் உணர வைக்கலாம். இன்றைய நாளில் குழந்தைகள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இது, குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை தீவிரமாக பாதிக்கும்.
ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வளர வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். பொதுவாக குழந்தைகளுக்கு வீட்டில் இருந்தும் வெளியில் இருந்தும் ஆபத்துகள் அதிகம் ஏற்படலாம். ஆபத்து என்பது அவர்கள் வெளிப்படையாக பாதிக்கப்படுவதும், உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவதும் ஆகும். ஆதலால் பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

எதிர்மறையான வாழ்க்கை அனுபவங்கள் இளம் மனங்களில் அழியாத காயங்களை ஏற்படுத்தலாம். குழந்தைப் பருவம் என்பது பாதிக்கப்படக்கூடிய ஒரு கட்டமாகும், அங்கு அவர்கள் அனுபவிக்கும் பல்வேறு அனுபவங்கள், அவர்களின் வருங்கால வாழ்க்கையில் பிரதிபலிக்கும். குழந்தை பருவ அதிர்ச்சி குழந்தைகளை வாழ்நாள் முழுவதும் எப்படி பாதிக்கும் என்றும், அதை எவ்வாறு தடுக்கலாம் என்றும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
உடல் அதிர்ச்சி
நிபுணர்களின் கூற்றுப்படி, குறிப்பாக பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையேயான உறவு சரியாக இல்லாதபோது குழந்தைகள் உடல் அதிர்ச்சியால் பாதிக்கப்படலாம். சில சமயங்களில் பெற்றோர்கள் போதைப்பொருள் பழக்கங்களுக்கு அடிமையாகி, குடும்பத்தில் உள்ள அனைவரையும் பாதிக்கும் படி நடந்து கொள்வார்கள். அதேபோல உளவியல் அல்லது மனநலப் பிரச்சினைகளைச் சந்திக்கும் பெற்றோர்கள், குழந்தையை துன்புறுத்துகிறார்கள்.
இதுபோன்ற பெற்றோர்களிடம் வளரும் குழந்தைகள் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள். இது குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி, கைகள்/கால்களின் எலும்பு முறிவுகள், தலையில் காயம் அல்லது உடலின் எந்தப் பகுதியிலும் பெற்றோரால் காயம் ஏற்படலாம். இந்த குழந்தைகள் வெளிப்படையான காயங்கள் அல்லது மனரீதியான பிரச்சனைகளுடன் வளரலாம்.
பாலியல் அதிர்ச்சி
இன்றைய நாளில் பெரும்பலான குழந்தைகள் பாலியல் அதிர்ச்சியால் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தை ஒரு வயது வந்தவருடன் அல்லது அவர்களை விட வயதான ஒருவருடன் அல்லது அதிகாரப் பதவியில் இருக்கும் நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் போது பாலியல் அதிர்ச்சியால் பாதிக்கப்படலாம். மேலும், சில தீய நோக்கங்களுக்காவும் குழந்தைகள் பயன்படுத்தப்படுகிறார்கள்.
சிறிய வயதிலேயே பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளை கையாளும் குழந்தைகள் மன ரீதியாக அதிகம் பாதிக்கப்படுவார்கள். சில குழந்தைகளுக்கு இந்த பாலியல் அதிர்ச்சி வாழ்நாள் முழுவதும்கூட இருக்கலாம். அவர்கள் இதை நினைத்து பயம்கொள்ளலாம். அதனால் பாலியல் துன்புறுத்தலை பற்றி பேசுவது , அவர்களின் மனநல பாதிப்புகளை குறைக்க உதவும்.
உளவியல் அதிர்ச்சி
சிறிய குழந்தைகள் எளிதாக உளவியல் அதிர்ச்சிக்கு ஆளாகலாம். பாதுகாப்பின்மை, புறக்கணிப்பு அல்லது கைவிடப்படுவோமோ என்ற பயம் முதலில் அவர்களை உளவியல் அதிர்ச்சிக்கு ஆளாக்கும். ஆதலால், உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்.
புறக்கணிப்பு என்பதும் ஒரு வகையான அச்சுறுத்தலாகும். அங்கு குழந்தையின் அடிப்படைத் தேவைகள் புறக்கணிக்கப்படுவதால் அல்லது கவனிக்கப்படாமல் போவதால் நிகழலாம். குழந்தைகளை நீண்ட நேரம் தனியாக விட்டுவிடுவதும் இதுபோன்ற குழந்தை பருவ அதிர்ச்சிக்கு வழிவகுக்கும். உங்கள் குழந்தையை புறக்கணிக்கப்பட்டதாக உணர வைக்க வேண்டாம்.
குழந்தை பருவ அதிர்ச்சியின் அறிகுறிகள்
குழந்தை மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது, அன்பான மற்றும் அக்கறையுள்ள உறவுகளால் அரவணைக்கப்பட்டால், எதிர்மறை உணர்ச்சிகளைச் சமாளிக்கும் திறன் அவர்களுக்கு கிடைக்கும். பெரும்பலான குழந்தைகள், இயல்பாக, தங்கள் பராமரிப்பாளர் அல்லது உறவினர்களை நம்புகிறார்கள். அவர்களின் தவறான நடத்தை காரணமாக அந்த நம்பிக்கை உடைக்கப்படும்போது, உலகம் 'பாதுகாப்பற்றது அல்லது பயங்கரமானது' என்பதை குழந்தைகள் உணர்கிறார்கள்.
இந்த குழந்தைகள் மற்றவர்களோடு சேர்ந்து இருப்பதில் சிக்கல்களை சந்திக்கலாம் மற்றும் அவர்களின் உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்துவதில் சிக்கல் இருக்கலாம். மேலும் அவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். இது குழந்தைகளுக்கு பல்வேறு மனநல கோளாறுகளை ஏற்படுத்தலாம்.
குழந்தை பருவ அதிர்ச்சி மற்றும் சுகாதார பிரச்சினைகள்
குழந்தை பருவத்தில் ஏற்படும் எந்த விதமான அதிர்ச்சியும், வயது வந்த பிறகு அவர்களின் மன மற்றும் உடல் ரீதியான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது, மிக முக்கியமாக, மனச்சோர்வு, பதட்டம், மனநோய் மற்றும் பிந்தைய மனஉளைச்சல் உள்ளிட்ட கடுமையான மனநலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.
முடக்கு வாதம், இருதய நோய், நுரையீரல் நோய் போன்ற நாட்பட்ட உடல் ஆரோக்கிய பிரச்சனைகளும் குழந்தை பருவ அதிர்ச்சி உள்ளவர்களுக்கு ஏற்படலாம். குழந்தை பருவ அதிர்ச்சியால் பாதிக்கப்படுவது, வயது வந்தோருக்கான மனநலப் பிரச்சினைகளின் அபாயத்தை மூன்று மடங்கு அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.
குழந்தைகளின் அதிர்ச்சியின் ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சையளிப்பது, ஆரோக்கியமான நபர்களாக அவர்கள் வளருவதை உறுதிப்படுத்துவது, குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு நல்லது.



Click it and Unblock the Notifications













