Latest Updates
-
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க..
35 வயதுக்கு பின் தாய்ப்பால் கொடுக்கிறீர்களா? அப்ப இந்த விஷயங்களை அவசியம் தெரிஞ்சுக்கோங்க..
Breastfeeding Tips In Tamil: கர்ப்ப காலம் என்பது பெண்களுக்கு மிகவும் முக்கியமான கால கட்டமாகும். ஒரு பெண் குறிப்பிட்ட வயதுக்குள் கருத்தரிப்பது அவளுக்கும் அவளுடைய குழந்தைக்கு மிகவும் நல்லது. ஆனால் சில சமயங்களில் அவ்வாறு நடப்பதில்லை.
இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் பெரும்பாலான பெண்கள் 35 வயதுக்கு மேல் தான் குழந்தை பேற்றை பெறுகிறார்கள். 35 வயதுக்கு மேல் தாய்ப்பாலூட்டும் பெண்களாக நீங்கள் இருந்தால் நிறைய பாதுகாப்பு விஷயங்களை நீங்கள் கடைபிடிக்க வேண்டியது அவசியமாகிறது.

புதிதாகப் பிறந்த குழந்தைகளை ஆரோக்கியமாகவும், நோய்கள் மற்றும் தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் தாய்ப்பால் மிகவும் அவசியம். எனவே 35 வயதுக்கு மேற்பட்ட தாய்மார்கள் தாய்ப்பாலூட்டும் போது கீழ்க்கண்ட விஷயங்களை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
தாய்ப்பால் ஒரு சிறந்த ஊட்டச்சத்து திரவம்
தாய்ப்பால் ஒரு "திரவ தங்கம்" என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் பிறந்த குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இந்த தாய்ப்பாலில் காணப்படுகிறது. குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், ஆன்டி பாடிகள், நோயெதிர்ப்பு காரணிகள் போன்றவை இதில் காணப்படுகிறது.
தாய்ப்பாலில் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆன்டி பாடிகள் காணப்படுகிறது. இது நோய்த் தொற்று மற்றும் நோய்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது. கொழுப்பு, புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்ற குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ற அனைத்தும் இதில் காணப்படுகிறது.
பல ஆய்வுகள் தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைகளுக்கு மேம்பட்ட அறிவாற்றல் வளர்ச்சி மற்றும் சில வளர்ச்சிக் கோளாறுகளின் அபாயத்தைக் குறைக்க முடியும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான உணர்ச்சி ரீதியான பிணைப்பை வலுவாக்குகிறது. தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு ஆறுதல் மற்றும் பாதுகாப்பு உணர்வுகளை ஊக்குவிக்கிறது.
அதனால் தான் உலக சுகாதார நிறுவனம் ( WHO) ஒரு குழந்தையின் வாழ்க்கையில் முதல் ஆறு மாதங்களுக்கு பிரத்யேகமாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. அதற்கு பிறகு அடுத்த இரண்டு வருடங்கள் திட உணவுடன் தாய்ப்பாலையும் தொடர வேண்டும் என்று கூறுகிறது.
35 வயதுக்கு மேற்பட்ட தாய்மார்களுக்கான தாய்ப்பால் குறிப்புகள்:
பயிற்சி அவசியம்
35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தாய்ப்பாலூட்டும் போது நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பாலூட்டுதல், ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளில் ஏற்படக் கூடிய மாற்றங்களை புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். எனவே மருத்துவரின் உதவியுடன் அதைப் பற்றிய சந்தேகங்களை தெளிவாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான பயிற்சிகளை எடுத்துக் கொள்வது நல்லது.
மருத்துவர் உதவியை நாடுங்கள்
வயதான தாய்மார்கள் தாய்ப்பாலூட்டுவதில் சிக்கல்களை சந்தித்தால் பாலூட்டும் ஆலோசகரிடம் ஆலோசனை பெறலாம். அவர்களின் வழிகாட்டுதலுடன் இதை நீங்கள் தெளிவாக செய்ய முடியும். உங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவதில் ஏற்படும் தடைகளை இதன் மூலம் அகற்ற முடியும்.
குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்க தொடங்குங்கள்
குழந்தை பிறந்தவுடன் கூடிய விரைவில் தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம். இது குழந்தைக்கான பால் உற்பத்தியை ஊக்குவிக்க உதவுகிறது. இது குழந்தைக்கு வலுவான தாய் குழந்தை பிணைப்பை உருவாக்க உதவுகிறது. இது குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
தாய்மார்களுக்கு சமநிலை உணவுகள் அவசியம்
35 வயதுக்கு மேற்பட்ட பாலூட்டும் தாய்மார்களுக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் மிகவும் அவசியம். புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நன்கு சமநிலையான உணவில் கவனம் செலுத்த வேண்டும். தாய்மார்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
மன அழுத்தத்தை நிர்வகிக்க
தாய்மார்களின் மன அழுத்தம் ஒட்டுமொத்த பால் உற்பத்தியை பாதிக்கிறது. யோகா, தியானம் மற்றும் நினைவாற்றல் போன்ற மன அழுத்தத்தை குறைக்கும் விஷயங்களில் ஈடுபடலாம். தாய்ப்பாலூட்டுதல் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்குகிறது.
ஓய்வுக்கு முன்னுரிமை கொடுங்கள்
35 வயதுக்கு மேற்பட்ட தாய்மார்களுக்கு போதுமான ஓய்வு என்பது மிகவும் அவசியம். ஏனெனில் போதுமான ஓய்வு எடுக்கும் போது தாய்ப்பால் தேவையை பூர்த்தி செய்ய முடியும். பகலில் ஒரு குட்டி தூக்கத்தை போடலாம்.



Click it and Unblock the Notifications