Latest Updates
-
இன்றைய ராசிபலன் 03 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்குமாம் -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்... -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும் வேர்க்கடலை குடைமிளகாய் குருமா - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க -
செஃப் தீனா ஸ்டைல் இட்லி பொடியின் ஸ்பெஷலே கடைசியாக சேர்க்கும் இந்த ஒரு பொருள் தாங்க.. அது என்னன்னு பாருங்களேன். -
இந்த 3 மாதத்தில் பிறந்தவர்களுக்கு கெட்டவர்களை பார்த்தவுடனேயே கண்டறியும் அதிசய சக்தி இருக்குமாம் -
முகம் கருப்பா இருக்கா? பலாப்பழம் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. வெள்ளையாவீங்க.. -
இந்தியாவில் ஆண் நதி என்று அழைக்கப்படும் ஒரே நதி எது தெரியுமா? இந்தியாவின் மிகப்பெரிய நதியும் இதுதானாம் -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..! -
கோயம்பத்தூர் ஸ்டைல் சாம்பார் ரெசிபி - இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்
ஆறு மாத குழந்தைக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தரும் நேந்திரம் கூழ்..! - தயாரிப்பது எப்படி?
Nendram Porridge Benefits: தமிழ்நாட்டை பொறுத்தவரை பச்சிளம் குழந்தைகளுக்கு ராகிக்கூழ் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டு இருப்பார்கள். ஆனால் சில தாய்மார்கள் ராகிக்கூழை தங்கள் குழந்தை விரும்பி சாப்பிடுவதில்லை. அப்படி சாப்பிட்டாலும் எளிதில் சளி தொல்லை ஏற்படுகிறது என்று கூறுவார்கள்.
ஆனால் இது அடிப்படையில் உண்மை தான். ராகி கூழ் உடலுக்கு குளிர்ச்சியை அதிகமாக கொடுப்பதன் காரணமாக சில குழந்தைகளுக்கு இந்த கூழை கொடுப்பதன் மூலம் ஒவ்வாமையை ஏற்படுத்தி விடும்.

எனவே அப்படி ஓவ்வாமையைத் தரும் ராகிக்கூழ் ஒத்துக் கொள்ளாத குழந்தைகளுக்கு, இனி நீங்கள் நேந்திர பழத்தில் இருந்து செய்யக்கூடிய நேந்திரம் கூழை செய்து கொடுப்பதன் மூலம் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளுக்கு கிடைக்கும்.
ஒரு நேந்திரம் பழத்தில் 108 கலோரிகள் உள்ளது. இது 18 கிராம் கார்போஹைட்ரேட்டுக்கு சமமானது. எனவே தான் ஒல்லியாக இருக்கும் குழந்தைகள் இந்த கூழை சாப்பிடுவதின் மூலம் அபரிமிதமான ஊட்டச்சத்து கிடைப்பதின் காரணமாக பொசு பொசு என்று உடல் எடை கூடிவிடுவார்கள்.
நேந்திரம் கூழ் செய்யும் முறை
* நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த கூழ் குழந்தைகளுக்கு பெருமளவு கொடுக்கப்படுகிறது. மேலும் வீடுகளில் மட்டுமல்லாமல் மார்க்கெட்டிகளிலும் நேந்திரம் பழ பொடி ஷெர்லாக் பொடியை போல கிடைக்கிறது.
* எனினும் வீட்டிலேயே நீங்கள் சுகாதார முறையோடு இந்த நேந்திரம் கூழ் செய்து கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் அதிகரிக்கும். அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி விளக்கமாக கீழே படித்து தெரிந்து கொள்ளலாம்.
* நேந்திரம் கூழ் செய்ய வேண்டும் என்று விரும்பக் கூடிய தாய்மார்கள் ஒரு குலை நேந்திரன் வாழையை முக்கா மூப்பில் வாங்கி வந்து அதை நன்கு கழுவி விட வேண்டும். பின்னர் அந்த காய்களை சிப்ஸ் சீவுவது போல தோலினை நீக்கிவிட்டு பழத்தை லேசாக வெட்டி வெயிலில் உலர்த்திக்விட வேண்டும்.
* பிறகு பழம் உலர்ந்த பின் இந்த பழத்தை பொடி செய்து கூழ் செய்து கொடுக்கலாம். இந்த கூழில் சிறிதளவு நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய் பொடி, ஜாதிக்காய் பொடி போன்றவற்றை கலந்து கொடுக்கலாம்.
சில குழந்தைகள் இனிப்பை விரும்பி சாப்பிடாது. அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு இனிப்பு தேவை இல்லை. அந்த குழந்தைகளுக்கு நீங்கள் கூலோடு உப்பினை சேர்த்து கொடுக்கலாம். மேலும் சில குழந்தைகளுக்கு காய்ச்சிய பசு மாட்டு பாலை ஊற்றி பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் அவர்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
பத்து மாத குழந்தைகளுக்கு பால் மட்டுமல்லாமல் சிறிது பழத்தையும் கலந்து இந்த கூழ் உடன் கொடுப்பதன் மூலம் குழந்தை ஆரோக்கியத்தோடு இருப்பதோடு மட்டுமல்லாமல் உடல் எடை அதிகரித்து பார்ப்பதற்கு அமுல் பேபி போல் காட்சி அளிக்கும்.
ஒரு மாதம் கடந்த குழந்தைகளுக்கு நேந்திரம் பழம் பொடி ஒரு ஸ்பூன் அளவு எடுத்து வெதுவெதுப்பான நீரில் கரைத்து இதனோடு காய்ச்சிய பனைவெல்லத்தை சேர்த்து கிண்டிய பிறகு இந்த கலவை ஒட்டாமல் இருப்பதற்காக ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து குழைய வேகவைத்து, வெந்ததும் இறக்கி வைத்து இளம் சூட்டில் குழந்தைகளுக்கு ஊட்டிக் கொடுக்கலாம்.
நேந்திரம் கூழ் தரும் நன்மைகள்:
1. நேந்திரம் கூழ் குழந்தைகளுக்கு தருவதன் மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
2. மேலும் உடல் எடையை அதிகரிக்க இது உதவி செய்வதோடு மட்டுமல்லாமல் இதில் இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள், விட்டமின்கள், தாதுக்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான முக்கிய பொருட்களாக உள்ளது.
3. இதில் அதிக அளவு கரோட்டினாய்டு சத்து இருப்பதால் மழைக்காலங்களிலும், பனிக்காலங்களிலும் இந்த கூழை கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு எளிதில் சளி பிடிக்காது.
4. மேலும் செரிமான கோளாறுகளை நீக்கக்கூடிய நார்ச்சத்து அதிக அளவு இதில் இருப்பதால் மலச்சிக்கலும் எளிதில் குழந்தைகளுக்கு ஏற்படாது.
5. சளி, இருமல் விரைவாகப் ஏற்படும் குழந்தைகளுக்கும் இந்த கூழை கொடுப்பதினால் எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படாது.
மேற்கூறிய நன்மைகளை கருதி இனிமேல் நீங்கள் கட்டாயம் உங்கள் குழந்தைகளுக்கு இந்த நேந்திரம் கூழ் கொடுத்துப் பாருங்கள். கட்டாயம் உங்கள் குழந்தைகள் உடல் எடை கூடுவதோடு, ஆரோக்கியமாக இருப்பார்கள். அப்படி உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் உங்களுடைய அனுபவத்தை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications