For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா மிரட்டும் இந்த நேரத்தில் அது அவசியமா.. தள்ளிப் போடலாமே.. ?

கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த கால கட்டத்தில் புதுமண தம்பதியர் தங்களின் கர்ப்பகாலத்தை ஒத்திப்போடுங்கள் என்று டாக்டர்கள் அட்வைஸ் செய்துள்ளனர்.

|

கொரோனா வைரஸ் பிறந்த சிசுவையும் விட்டு வைக்கவில்லை குழந்தை பிரசவித்த தாயையும், பிறந்து 3 நாட்களே ஆன குழந்தையையும் பாதித்துள்ளது. கர்ப்பிணிகளுக்கு நோய் தோற்று ஏற்பட்டால் கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்கும் என்பதால்தான் புது மண தம்பதியர், குழந்தை பேறுக்காக காத்திருப்பவர்கள் தங்களின் கர்ப்பகாலத்தை சில மாதங்கள் தள்ளிப்போடுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Coronavirus Lockdown And Pregnancy - Doctors Advice

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் இனம் மொழி சாதி பேதமின்றி பாதித்து பல கோடி மக்களை வீட்டிற்குள் முடக்கி போட்டுள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நோய் பரவாமல் தடுக்க ஏராளமானோர் வீட்டில் இருந்தே வேலை செய்கின்றனர். இளம் தம்பதியினர் தனித்திருக்க நிறைய நேரம் கிடைக்கிறது. இந்த கால கட்டத்தில் கர்ப்பமாக அதிக வாய்ப்பு உள்ளது.

சில மாதங்களில் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது அதை வைத்து மீம்ஸ்களும் உலா வரும் நிலையில் பெண்கள் கருத்தரிக்க இது ஏற்ற காலமல்ல என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கர்ப்பிணிகளுக்கு சவால்

கர்ப்பிணிகளுக்கு சவால்

கர்ப்பிணிகளுக்கு நோய் தாக்கினால் கர்ப்ப காலத்தில் தரக்கூடிய மருந்துகளின் அளவு, விகிதம் ஆகியவை மாறும் என்பதால், மகப்பேறு மருத்துவர் களுக்கு கர்ப்பகால கொரோனா மிகப்பெரிய சவாலாகவே இருக்கும். அதிக அளவிலான காய்ச்சல் வளரும் கருவை பாதிக்கக்கூடும் என்பதும், கருவில் வளரும் குழந்தையால் பெரிதாகும் வயிறு, அப்பெண்ணின் நுரையீரல் செயல்திறனைக் குறைக்கக் கூடும்

புத்திசாலித்தனமா யோசிங்க

புத்திசாலித்தனமா யோசிங்க

தாய் சேய் என இரு உயிர்கள் சம்பந்தப்பட்ட தாய்மையை தற்காலிகமாகத் தள்ளிப் போடலாம்' என்று புதுமண தம்பதியினரை அறிவுறுத்துகிறது. குழந்தைப்பேற்றுக்கான உலக அமைப்பான IFFS. கொரோனா வைரஸ் Covid-19 என்ற பெயரைத் தவிர, அது எப்போது போகும், இதற்கான மருத்துவம் என்ன, வராமல் தடுக்க முடியுமா என்று எதுவுமே முழுமையாகத் தெரியாத இந்த நேரத்தில் கருத்தரித்தலைத் தள்ளி வைக்கலாம். அதோடு, இந்த நோயே நமக்கு அண்டாத வகையில் இருமடங்கு எச்சரிக்கையாக இருப்பது மட்டுமே புத்திசாலித்தனமான முடிவு என்பது மருத்துவர்களின் அறிவுறுத்தல்.

விந்தணு பாதிப்பா

விந்தணு பாதிப்பா

கொரோனா பாதிப்பால் விந்தணுக்கள் குறைபாடுகளும் ஆண்மைக் குறைவும் ஏற்படக்கூடும் என்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. அதற்குள் ஆண்மைக் குறைபாட்டுக்கான மாத்திரைகளின் விற்பனையும் அதன் பக்கவிளைவுகளும் கொரோனாவை விட எகிறிவிட்டது. அந்தச் செய்தி உறுதியில்லை' என்று சீன அரசு விலக்கிக் கொண்டுள்ளது.

செயற்கை கருத்தரித்தல்

செயற்கை கருத்தரித்தல்

இந்திய குழந்தைப் பேறின்மைக்கான அமைப்பான ISAR டெஸ்ட் டியூப் குழந்தை மற்றும் ஐயுஐ மற்றும் ஐசிஎஸ்ஐ போன்ற செயற்கைக் கருத்தரித்தல் முறைகளை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. அதோடு், ஏற்கெனவே சிகிச்சையில் இருக்கும் தம்பதியருக்கும், கருமுட்டை எண்ணிக்கை குறைவாக உள்ள பெண்களுக்கும், கரு முட்டைகளை மீட்டெடுத்துச் செய்யப்படும் செயற்கை முறை கருத்தரிப்பை, சிறிது காலத்துக்குப் பிறகு முயற்சி செய்யலாம் என்று அறிவுறுத்தியும் உள்ளது.

மும்பையில் பாதிப்பு

மும்பையில் பாதிப்பு

மும்பை செம்பூரைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் பிரசவத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த மாதம் 26ஆம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், குழந்தையும் இருந்த அறையில் கொரோனா பாதித்த ஒருவரும் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பெண் மற்றும் பிறந்து 3 நாட்களே ஆன அவருடைய குழந்தை இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இருவரும் மும்பை கஸ்தூர்பா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோன்ற பாதிப்புகள் வராமல் தடுக்கத் தான் கர்ப்ப காலத்தை ஒத்திப்போட சொல்கின்றனர் மருத்துவர்கள்.

எச்சரிக்கும் மருத்துவர்கள்

எச்சரிக்கும் மருத்துவர்கள்

ஏற்கனவே கர்ப்பமானவர்கள் தங்களின் பிரசவத்திற்கு தயாராக இருப்பவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தம்பதியர்கள் தங்களின் சந்தோஷத்தை கூட சில காலம் ஒத்திப்போடலாம் என்பதும் மருத்துவர்களின் அறிவுறுத்தலாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Coronavirus Lockdown And Pregnancy - Doctors Advice

Pregnancy and birth continue in times of crisis. There may be no perfectly convenient moment to give birth but for women who are pregnant in the midst of the global COVID-19 pandemic this must feel like a most uncertain period.
Story first published: Saturday, April 4, 2020, 17:02 [IST]
Desktop Bottom Promotion