Latest Updates
-
Ganesh Chaturthi 2026: உங்க கஷ்டங்கள் குறையணுமா? அப்ப இன்னிக்கு விநாயகருக்கு உங்க ராசிப்படி இத வாங்கி கொடுங்க! -
விநாயகர் சதுர்த்திக்கு வழக்கமான சுண்டல் செய்யாம இந்த மாதிரி மசாலா அரைச்சு செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
Ganesh Chaturthi 2026: விநாயகரின் சிறப்பு ஆசீர்வாதத்தைப் பெற்ற 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி நாளில் அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
கூரைக்கடை கார சட்னி - இட்லிக்கு இந்த சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
செப்டம்பர் 14, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க நிறைய சோதனைகளை சந்திக்கப் போறாங்களாம் -
கடக ராசியில் உருவாகும் குரு-மங்கள யோகத்தால் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரளா ஸ்டைல் மீல் மேக்கர் சுக்கா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும் -
விநாயகர் சதுர்த்தி அன்று இந்த பொருட்களை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்குமாம் -
சாக்லேட் கொழுக்கட்டை ரெசிபி - விநாயகர் சதுர்த்திக்கு இந்த கொழுக்கட்டையை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும்
உடலுறவுக்குப் பின் நிறைய ஆண்கள் ஏன் தம் அடிக்கிறார்கள் தெரியுமா? இதுதான் மேட்டரு...
உடலுறவுக்குப் பின் ஆண்கள் புகைப்பிடிப்பது ஏன், அதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றி தான் இங்கு விவாதிக்கப் போகிறோம். அதுபற்றி இந்த தொகுப்பில் விளக்கமாகப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
அந்த விஷயத்தை குறித்து ஓர் ஆய்வு செய்யப்பட்டது. உடலுறவில் ஈடுபட்ட பிறகு பெண்கள், அதே நெருக்கத்தோடு அளவளாவிக்கொண்டிருக்க, முத்தமிட அல்லது ஆரத்தழுவிக்கொண்டிருக்க விரும்புகிறார்களாம்.

ஆனால், ஆண்கள் பாலுறவில் ஈடுபட்ட பிறகு புகை பிடிக்கவோ, மது அருந்தவோ அல்லது சாப்பிடவோ விரும்புகிறார்களாம். இது அந்த ஆய்வின் முடிவு கூறும் கருத்து.

உடலுறவு உந்துதல்
இனப்பெருக்க நோக்கில் உடலுறவுக்கு உந்தப்படும் மனிதனின் பரிணாம மனோவியல் குறித்த ஆய்வு சூசன் ஹியூஸ் என்பவரால் செய்யப்பட்டது. இனப்பெருக்க நடைமுறையானது உடலுறவு கொள்வதோடு நின்றுவிடுவதில்லை. உடலுறவுக்கு பிந்தைய குறிப்பிட்ட நடத்தைகளிலும் அதன் தாக்கம் இருக்கும் என்று அவர் கூறுகிறார்.
இந்த ஆய்வில் பங்கேற்றோர் கேள்வி - பதில் பட்டியல் ஒன்றை நிரப்பி கொடுத்தனர். அதன்படி, ஆண்கள், கட்டித்தழுவுதல் தவிர்த்து கூடுதலாக பாலுறவு செயல்களில் ஈடுபடுவதற்கே முன்னுரிமை கொடுப்பது தெரிய வந்தது.

விந்தணுக்கள்
கருத்தரிக்க ஏதுவாக விந்தணு உள்ளே தங்கியிருப்பதற்காக உடலுறவில் ஈடுபட்ட பின்னர் அசையாமல் அப்படியே படுத்திருக்கும் தூண்டுதல், பரிணாம அமைப்பின்படி பெண்ணிற்கு இருக்கக்கூடும். மாறாக, தன் மரபு பரவும் வகையில் அதிகமான உடலுறவுகளில் ஈடுபடுவதற்கான தூண்டுதலும் அதன் காரணமான விலக்கமும் ஆணுக்கு இருக்கக்கூடும் என்று ஹியூஸ் விளக்குகிறார்.

பெண்ணின் ஏக்கம்
குறுகிய காலம் மற்றும் நீண்ட கால உறவுகளை விரும்புகிறவர்களுக்கிடையே கணிசமான வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது. ஆண் இணை, எதையோ சாப்பிடுவதற்கோ, அருந்துவதற்கோ அகன்ற பிறகும் பெண் இணைக்கு அவனது ஆண்மை மேல் தேடல் இருக்கிறது.

காதல் இணைவு
பாலுறவில் ஆண், பெண் இருவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒன்று உள்ளதென்றால் அது, உடல்கள் இணையும் முன்னரும், கலப்பின்போதும், உடல்ரீதியான உறவு முடிந்த பின்னரும் "ஐ லவ் யூ" "என் பிரியமே" என்று கூறுவதுதான்.

நெருக்கம்
தங்கள் இணையோடு நெடுங்காலம் உறவில் நிலைத்திருக்க விரும்பும் ஆணும் பெண்ணும் உடலுறவு முடிந்த பின்னரும் இணை மேலான பிரியத்தை வெளிக்காட்டுவது அவசியம். குறிப்பாக, ஆண்கள் இவ்வுறவில் தங்கள் ஈடுபாட்டை காட்டும் வண்ணம் உடல்ரீதியான உறவுக்குப் பின்னரும் இணைமேலான அன்பை வெளிப்படுத்தவேண்டும்.



Click it and Unblock the Notifications
