For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க ஆணுறுப்பு நார்மலா இருக்கானு தெரிஞ்சிக்கணுமா? இப்படி செஞ்சு பாருங்க...

By Mahibala
|

வீரம், துணிச்சல், பெருமை இவையெல்லாம் தான் ஆண்மைக்கு அழகு என்று நம்முடைய முன்னோர்கள் பெருமையாகச் சொல்லிச் சென்றாலும் கூட, ஆண்மை என்றால் அது ஆணுறுப்பின் ஆரோக்கியம், வீரியம், விறைப்பு ஆகியவற்றையே ஆண்மையின் அடையாளம் என்று நினைக்கிறார்கள். சரி. கலாச்சார தத்துவார்த்த ரீதியில் நாம் ஒரு விஷயத்தை முன்வைத்தாலும் உடலியல் ரீதியாக அதுவும் ஓரளவு உண்மை தானே. சந்ததிகள் உருவாக்கத்தில் இதற்குப் பங்குண்டு தானே.

Is Your Private Part Is Normal

சரி. எதுக்கு சுத்தி வளைச்சு பேசிக்கிட்டு. உங்களோட ஆணுறுப்பு சரியானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கிறதா என்று மருத்துவரிடம் கேட்காமல் நீங்களாகவே எப்படி தெரிந்து கொள்ளலாம் என்பது பற்றி தான் இந்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடைக்க

உடைக்க

உங்களுடைய ஆணுறுப்பை உங்களால் நன்கு வளைத்து ஒடிப்பது போல் செய்ய முடிகிறதா என்று பாருங்கள். அப்படி வளைக்க முடிகிறது என்றால், அது நார்மலான விஷயம் கிடையாது. அது சாத்தியமும் கிடையாது. ஏனென்றால் ஆணுறுப்புப் பகுதியில் எலும்பு என்பதே கிடையாது. எப்போது விறைப்பு ஏற்பட்டிருக்கிறதோ அப்போது முழுக்க முழுக்க அந்த பகுதியில் ரத்தம் நிரம்பியிருக்கும்.

MOST READ: இந்த மூனு ராசிக்கும் இந்த திசையில இருந்து செம அதிர்ஷ்டம் ஒன்னு காத்திருக்கு...

முதல் விறைப்பு

முதல் விறைப்பு

ஆண்களுக்கு முதன் முதலாக எந்த வயதில் விறைப்புத்தன்மை உண்டாகும் என்று தெரியுமா?

நிறைய குழந்தைகளுக்கு பிறக்கும்போதிருந்தே விறைப்புத் தன்மை இருக்கும். வயிற்றில் இருக்கும்புாதிருந்தே தொப்புள் கொடியில் ஏற்படுகிற அல்ட்ரா சவுண்ட் அதிர்வுகள் கூட விறைப்பைத் தோற்றுவிக்கும். ஆனால் குழந்தைகளுக்கு ஏற்படுகிற விறைப்பு என்பது பாலியல் உறவின் இன்பத்தைக் குறிப்பதல்ல. அது தூண்டுதலின்பேரில் உருவாவது. அது டயப்பர் மாற்றுவதில் இருந்து கூட ஏற்படும்.

எவ்வளவு நேரம் விறைக்கலாம்?

எவ்வளவு நேரம் விறைக்கலாம்?

நிறைய பேருக்கு விறைப்புத்தன்மை குறைபாட்டால் பிரச்சினை இருக்கும். சிலருக்கு அடிக்கடி விறைத்துக் கொள்ளும். அதுவே பெரிய பிரச்சினையாக மாறிவிடும். அப்படி அதிகபட்சம் 4 மணி நேரத்துக்கும் மேல் விறைப்பு இருப்பதாக தோன்றினால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். நிறைய மருந்துகள் பயன்படுத்துகிறவர்குளுக்கு இப்படி ஏற்படும். இதற்கு ஐஸ் ஒத்தடம், குளிர்ந்த நீர் குளியல் மிக உபயோகமாக இருக்கும். படிக்கட்டுகளில் ஏறி இறங்குங்கள். இதுபோன்ற சின்ன சின்ன பயிற்சிகளின் மூலம் டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் சரிசெய்து விட முடியும்.

சின்ன சின்ன புள்ளிகள்

சின்ன சின்ன புள்ளிகள்

நமக்கு பொதுவாக சருமம் தோல் சிலிர்ப்பது போல் சின்னச் சின்ன புள்ளிகள் போன்று இருந்தால் சிலர் அதிகம் பயந்துவிடுவார்கள். அப்படி பயப்படத் தேவையில்லை. அதுவும் நம்முடைய பருக்கள் மற்றும் முடி வளராமல் இருக்கும் சருமத் துறைகளைப் போன்றது தான். ஆனால் ஆணுறுப்பின் நுனிப்பகுதியில் வலியை உண்டாக்குகிற ஏதேனும் புள்ளிகளோ பருக்களோ இருந்தால் தக்க சிகிச்சை அளிப்பது நல்லது.

எத்தனை இன்ஞ்

எத்தனை இன்ஞ்

விறைப்பின் போது சராசரியாக எத்தனை இன்ச் இருக்கலாம். நிறைய பேர் நினைக்கிறார்கள். தங்களுக்கு சராசரியான விறைப்பு அளவை விட தங்களுக்குக் குறைவாக இருப்பதாக நினைக்கிறார்கள். பொதுவாக 6 இன்ச்க்கு மேல் இருப்பது தான் ஆரோக்கியமாக இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் உங்களுக்குத் தெரியுமா? சராசரியாக 5 முதல் 6.5 இன்ச் வரை இருந்தாலே மிக ஆரோக்கியமான ஆணுறுப்பாக இருக்கும்.

MOST READ: சாப்பிட்டதும் வயிறு கம்முனு கெடக்கா? இத செஞ்சு பாருங்க சரியாயிடும்...

பாத அளவு

பாத அளவு

கால் பாதங்களின் அளவு பெரிதாகவும்அகலமாகவும் இருப்பவர்களுக்கு, கைகள் பெரிதாக இருப்பவர்களுக்கு, மூக்கு மற்றும் விரல்க்ள பெரிதாக இருந்தால் அவர்களின் ஆணுறுப்பும் பெரிதாக இருக்கும் என்று சொல்வார்கள். அது உண்மை இல்லை. அந்த உறுப்புகளுக்கும் ஆணுறுப்பின் நீளத்துக்கும் சம்பந்தமே கிடையாது.

தூக்கத்தில் விறைப்பு

தூக்கத்தில் விறைப்பு

தூங்கத்திலும், காலையில் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் பொழுது, விறைப்பு ஏற்படுவது மிக இயல்பான ஒரு விஷயம் தான்.

சுய இன்பம்

சுய இன்பம்

உடலுறவைக் காட்டிலும் சுய இன்பம் செய்வது ஆரோக்கியமானது என்றொரு கதை சொல்லப்படுகிறது. சுய இன்பம் மேற்கொள்வதும் ஆரோக்கியமான விஷயம் தான். ஆனால் உடலுறவைக் காட்டிலும் இதுதான் ஆரோக்கியம் என்று குறிப்பிடுவது தவறானது.

வாரத்தில் எத்தனை முறை?

வாரத்தில் எத்தனை முறை?

வாரத்தில் 5 முறைக்கு மேல் சுய இன்பம் மேற்கொள்வது ஆரோக்கியமானது என்று சிலர் சொல்வதுண்டு. அது முற்றிலும் தவறான விஷயம். அது நபரையும் சூழலையும் பொருத்தது. சிலருக்கு நிறைய முறை தேவைப்படும். சிலருக்குத் தேவையே இருக்காது.

MOST READ: மீன் முள் எடுக்கப்போய் தொண்டைக்குள் ஸ்பூன் மாட்டிக் கொண்ட விபரீதம் ...

நேராக இருப்பது

நேராக இருப்பது

உங்களுடைய ஆணுறுப்பு நார்முலானதாக இருந்தால் அது நேருக்கு நேராக இருக்காது. அது சற்று லேசான வளைவுடனேயே காணப்படும். ஆரோக்கியமான உறுப்பு என்றால் அது நேரானதாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். இது தவறு. நார்மல் உறுப்பு லேசாக வளைவுடன் தான் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Your Private Part Is Normal? Try This Self Test

We will present you with facts from all the scientific studies done on penis size so that once you have finished reading this article, you will feel content that you have the most accurate answer to the question. And perhaps you will be reassured about your own size or that of your partner's penis.
Story first published: Tuesday, April 30, 2019, 13:35 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more