Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
பச்சிளம் குழந்தையை பெற்று எடுத்த 70 வயதான பெண்மணியின் கதை!
கர்ப்ப காலம் என்பது பெண்களின் வாழ்வில் ஏற்படும் மிக அழகான விஷயம்; இந்த பதிப்பில் பச்சிளம் குழந்தையை பெற்று எடுத்த 70 வயதான பெண்மணியின் கதை பற்றி படித்து அறியலாம்.
கர்ப்ப காலம் என்பது பெண்களின் வாழ்வில் ஏற்படும் மிக அழகான விஷயம்; பெண்கள், பெண்ணாய் பிறந்த நிமிடத்தில் மில்லியன் கணக்கான கரு முட்டைகளுடன் பிறந்திருப்பர்; அவர்கள் வளர வளர கொஞ்சம் கொஞ்சமாக உருவான முட்டைகள் உடைந்து அழிய தொடங்கும். பின் வயது வந்து அதாவது மாதவிடாய் ஏற்பட தொடங்கிய நிமிடம் முதல் பெண்கள் கருத்தரிக்க அதிகம் வாய்ப்புகள் இருக்கும்.

இந்த வாய்ப்பு பெரும்பாலான பெண்கள் 40 அல்லது 45 வயதை எட்டும் பொழுது முட்டைகள் அனைத்தையும் இழந்து கருத்தரிக்கும் வாய்ப்பை இழந்து விடுவர். இந்த பதிப்பில் பச்சிளம் குழந்தையை பெற்று எடுத்த 70 வயதான பெண்மணியின் கதை பற்றி படித்து அறியலாம்.

யார் அந்த பெண்மணி!?
நம்முடைய பகுதியை சேர்ந்த ஓர் ஊரில் வயதான பாட்டி ஒருத்தி வாழ்வில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். இங்கு அவர் யார், என்ன பெயர் என்று வெளிப்படுத்தாமல், நிகழ்ந்த உண்மை சம்பவத்தை கற்பனை கதையாக பார்க்கலாம். கிராமம் என்று கூற முடியாத, நகரம் என்று கூற முடியாத இடத்தில் மூன்று தலைமுறையை பார்த்த ஒரு வயதான பாட்டி, திடீரென தன் உடலில் ஒருவித மாற்றத்தை, பற்பல ஆண்டுகளுக்கு முன் அனுபவித்த அதே உணர்வுகள் மீண்டும் ஏற்படுவதாக உணர்ந்தார்.

என்ன உணர்வு அது?
அந்த பாட்டிக்கு 70க்கும் அதிகமான வயது இருக்கும்; மகன், பேரன், பேரனின் மகன் என்று தலைமுறைகளை பார்த்து முடித்த ஒரு பெண்மணி. திடீரென இந்த பெண்மணிக்குள் ஏற்பட்ட மாற்றம் இன்னது தான் என அவர் உடனே தெரிந்து கொண்டார்; பல தலைமுறைகளை பார்த்தவருக்கு இது தெரியாத என்ன? ஆமாங்க அந்த பெண்மணி தனக்குள் உணர்ந்தது கர்ப்ப காலத்திற்கான மாற்றத்தை தான்.

கணவர் வாக்கு!
இந்த பெண்மணிக்கு அவர் கணவருக்கும் பிறந்தது ஒரே ஆண் பிள்ளை; ஆனால், இந்த பெண்மணியின் கணவருக்கு தனக்கு ஒரு பெண் பிள்ளை வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருந்தது. அவர் எப்பொழுது பார்த்தாலும் சொல்லிக் கொண்டே இருப்பாராம்; நான் இறப்பதற்குள் நமக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கும்; அப்படியே நான் விரைவாக இறந்து விட்டாலும் கூட நமக்கு கட்டாயம் பெண் குழந்தை பிறக்கும் என்று கூறி கொண்டே இருப்பாராம்.

யாருக்கும் கூறவில்லை!
இப்படி கூறி கொண்டே இருந்த மனிதர் ஆறு மாதங்களுக்கு முன் உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் மரணித்து விட்டார்; கணவரை பிரிந்து வருத்தத்தில் இருந்த அம்மாவை பிள்ளை நன்கு பார்த்துக் கொண்டாலும், மருமகள் கொடுமை செய்து கொண்டு தான் இருந்தார், வயதான மாமியார் என்று கூட கரிசனம் காட்டவில்லை. திடீரென தனக்குள் உணர்ந்த கர்ப்ப கால மாற்றம் பற்றி யாருக்கும் கூறாமல் மறைத்து வைத்தார் அந்த பெண்மணி.

வயிறு காட்டி விட்டது!
ஆனால், விதியை யார் தடுக்க முடியும்; மூன்று மாதம் முடிய தொடங்கவும் பெண்மணியின் வயிறு பெரிதாக தொடங்கியதை பார்த்து வீட்டில் உள்ளோர் அனைவரும் பெண்மணியிடம் விவரம் கேட்டு அறிந்து கொண்டனர்; விவரத்தை அறிந்த பின் மிகவும் கொடுமை படுத்தி, அவமானப்படுத்தி, அந்த பெண்மணியை வாழ்க்கையையே வெறுக்க வைக்கும் அளவுக்கு சித்திரவதை செய்தனர்.
வயது வித்தியாசம் கூட பாராமல் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று கேட்டு கேவலமாக பேசி, அப்பெண்மணியின் வயதை புண்படுத்தினர்.

யார் காரணம்?
யார் காரணம் என்று பிள்ளைகளும் பேர பிள்ளைகளும் கேட்ட கேள்விக்கு, இறந்து போன தனது கணவருக்கு இருந்த ஆசையை எடுத்து கூறினார், பாட்டி. ஆணின் விந்து அணு பெண்ணின் உடலில் ஒரு முறை உள்ளே சென்று விட்டால், விந்து அணு ஆயுள் காலம் வரை பெண்ணின் உடலில் உயிரோடு தான் இருக்கும்; பெண்ணின் உடலிலும் ஆரோக்கியம் இருந்தால் அணுக்கள் இணைந்து கண்டிப்பாக கருத்தரிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கும்.

நம்ப வைப்பது எப்படி?
எதை சொன்னாலும் நம்பாத உறவுகளுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியாமல் தவித்தார் அந்த பெண்மணி; வயதின் வீரியமும் கர்ப்பத்தின் வீரியமும் பெண்மணியின் உடலை பாடாய் படுத்தியது. கரு கலைக்க முடியாத நிலையை அடைந்து விட்டதால், அம்மாவை வீட்டில் வைத்துக் கொள்ள மகன் இஷ்டப்படாமல் வெளியே எங்காவது கண் காணாத இடத்தில் விட்டு விட வேண்டும் என்று முடிவு எடுத்தார்.

கண் காணாத இடம்!
மனைவி மற்றும் பிள்ளைகள் வார்த்தைகளால் மதி மாறிய மகன், தாயை இரவோடு இரவாக, ஒரு பொட்டில் காட்டில் போய் விட்டு விட்டான்; கையில் ஒரு கத்தை பணத்தை கொடுத்து விட்டு திரும்பி பாராது வந்து விட்டான். இந்த வயதான அம்மா, மகன் இப்படி கை விடுவான் என்று எதிர்பாராததால், வயிற்று பிள்ளையோடு வாழ போகிறோம் என்ற கேள்வியோடு தனித்து நின்றாள்.

கடவுள் கைவிடமாட்டார்!
கடவுளும் கடவுளாய் மாறிய கணவரும் கை விடமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் மெயின் ரோடு நோக்கி மெதுவாக நடந்து ரோடை அடையும் தருணத்தில் மயங்கி விழுந்தார், பெண்மணி. அந்த சமயத்தில் அவரை பார்த்த ஒருவர், பெண்மணியை முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் வாழும் இல்லத்தில் சேர்த்து விட்டு சென்று விட்டார்.

தம்பதியர் வருகை!
ஒரு நாள் எதேர்ச்சையாக குழந்தையை தத்து எடுக்க வந்த தம்பதியர் கண்ணில் பட்ட இந்த பெண்மணியை பற்றிய விவரத்தை கேட்டு அறிந்தனர் தம்பதியர்; நன்கு தீர யோசித்து, இந்த பெண்மணியின் வயிற்றில் இருந்து பிறக்கும் குழந்தையையே நாம் தத்து எடுத்து வளர்க்கலாம் என்று முடிவு செய்தனர்.
காலங்கள் உருண்டு ஓடியது; குழந்தையை பெற்று தம்பதியருக்கு கொடுத்து விட்டு அவர்களுடனேயே பெற்ற குழந்தைக்கு பாட்டியாய் வாழ தொடங்கி விட்டார், அந்த பெண்மணி!

வாழ்க்கை!
வயதான காலத்தில் கர்ப்பம் அடைந்து, அவமானப்பட்டு, பெற்ற மகனால் கைவிடப்பட்டு, அனாதையான பெண்மணிக்கு, இறந்து போன அவர் கணவரோ, கடவுளோ ஒரு நல்ல இடத்தை காண்பித்து வாழ்க்கையை அழகாக்கி விட்டார். வாழ்வில் எப்பொழுதும் ஒரு கதவு மூடினால் மறு கதவு திறக்கும் என்பது இந்த பெண்மணியின் வாழ்வில் உண்மையாகி விட்டது.



Click it and Unblock the Notifications