Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
சுகப்பிரசவ முறையால் குழந்தைக்கும் அன்னைக்கும் என்னென்ன நன்மைகள் ஏற்படும்?
சுகப்பிரசவம் தான் பிரசவ முறைகளிலேயே மிகவும் சிறந்த பிரசவ முறை; சுகப்பிரசவ முறையால் குழந்தைக்கும் அன்னைக்கும் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று இங்கு படிக்கலாம்.
பெண்களின் லட்சிய கனவாக இருப்பது ஒரு குழந்தைக்கு தாயாக வேண்டும் என்பது தான். இந்த விஷயத்தில் குழந்தையை பத்து மாதம் தனது வயிற்றில் சுமந்து சுற்றப்போவதையோ அல்லது கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி, மயக்கம், உடல் வலி, மனஉளைச்சல் போன்றவற்றையோ குறித்த கவலைகள் பெண்கள் மனதில் ஒரு துளி கூட இருப்பது இல்லை.

ஆனால், ஒரே ஒரு விஷயம் பற்றிய பயம் மட்டும் பெண்களின் மனதை கர்ப்பம் தரித்த நொடி முதல் குழந்தையை பெற்று எடுக்கும் நொடி வரை பீடித்து இருக்கும்! அது என்னவென்று நீங்கள் அறிவீரா?

வேறு ஒன்றும் இல்லை!
அந்த பயம் வேறு ஒன்றும் இல்லை, பிரசவம் தான். பிரசவத்தின் பொழுது தான் இறந்து விடுவோமோ, குழந்தைக்கு என்னாகுமோ, சுகப்பிரசவமா அல்லது சிசேரியன் நடக்குமா, மிகவும் வலிக்குமா போன்ற எண்ணங்கள் பெண்ணின் மனதில் தோன்றி அவளை ஒரு பாடு படுத்திவிடும். இத்தனை மனப்போராட்டங்களை பெண்கள் தாங்கிக் கொண்டு தான், குழந்தை நலமாக உருவாக தங்கள் மனதை மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ள பெரிதும் முயல்கின்றனர்.

அன்றும் இன்றும்
அன்றைய பெண்மணிகள் வீரமான மனோநிலை கொண்டு இருந்ததால் எத்தனை பிரசவத்தையும் தாங்கினர்; ஆனால் இன்றோ ஒரு சிறு வலியை கூட பொறுக்க முடியாமல் பெண்கள் வளர்வதால் பிரசவ வலியை தவிர்க்க மயக்க மருந்து கொடுத்து குழந்தையை பிரசவிக்கும் நவீன முறைகளை பின்பற்ற தொடங்கி விட்டனர். இந்த மாற்றத்தின் விளைவாக ஒரு குழந்தையை பெற்று எடுத்ததுமே உடல் தோய்ந்து, விரைவில் முதுமை எட்டி விட்டதை போல ஒரு உணர்வை பெற்று விடுகின்றனர், பெண்கள்!
இன்றைய கால தலைமுறையினர் கட்டாயமாக சுகப்பிரசவத்தின் முக்கியத்துவத்தையும், அதனால் ஏற்படும் நன்மைகளையும் அறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

சிறந்த பிரசவ முறை!
எத்தனையோ வித விதமான பிரசவ முறைகள், இன்றைய அறிவியல் வளர்ச்சியினால் தோன்றினாலும் கூட அக்காலம் முதல் நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த சுகப்பிரசவ முறை மிகவும் சிறந்த பிரசவ முறை என்பதில் எந்தவித சந்தேகமோ, மாற்றுக் கருத்தோ நிச்சயம் இல்லை. சுகப்பிரசவத்தினை செய்து கொண்டால் ஏற்படும் நன்மைகள் ஏராளம்; நன்மைகள் என்பது குழந்தைக்கும் உண்டு, அன்னைக்கும் உண்டு. அப்படி என்ன நன்மைகள் என்று இப்பொழுது பார்க்கலாம்.!

காலம் குறைவு!
முதலில் அன்னைக்கு ஏற்படும் நன்மைகளை பார்க்கலாம்; பிரசவத்தால் ஏற்படும் காயம் குணமாக நன்கு முதல் ஐந்து வாரங்களே போதும்; பிரசவத்திற்கு பின் உண்டாகும் வலியோ, அறுவை சிகிச்சையால் ஏற்படும் அசௌகரியமோ இந்த முறையில் மிகவும் குறைவு. மேலும் மருத்துவமனையில் மாதக்கணக்காக தங்கி சிகிச்சை மேற்கோள் வேண்டிய கட்டாயம் இந்த முறையில் இல்லை; பிரசவம் நடந்த அடுத்த நாளே கூட வீட்டிற்கு வந்து விடலாம்.

பக்க விளைவு இல்லை!
சுகப்பிரசவத்தை மேற்கொள்வதால், எந்த விதமான மாத்திரை, மயக்க மருந்துகளும் கொடுக்கப்பட மாட்டாது; ஆகையால் எந்த ஒரு பக்க விளைவும் அன்னைக்கோ, குழந்தைக்கோ ஏற்பட வாய்ப்பே இல்லை. பிரசவம் முடிந்த பின்னும் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பும் மிகக் குறைவு. பிரசவத்திற்கு பின் முதுகு வலி, அந்த வலி, இந்த வலி என எதுவும் ஏற்படாது; இழந்த உடல் பலத்தை விரைவில் பெற உதவும். மேலும் இது எதிர்கால கருத்தரிப்பு மற்றும் பிரசவ முறைகளை எந்த விதத்திலும் பாதிக்காது.
இதுவரை அன்னைக்கு சுகப்பிரசவம் தரும் நன்மைகளை பார்த்தோம்; இனி குழந்தைக்கு ஏற்படும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்!

குழந்தைக்கு பாதுகாப்பு!
பிரசவத்தின் பொழுது கொடுக்கப்படும் மாத்திரை மற்றும் மயக்க மருந்துகளால் குழந்தைக்கு பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது; ஆனால் சுகப்பிரசவத்தில் எந்த மருந்து மாத்திரையும் கொடுக்கப்படாததால், குழந்தைக்கு முழு பாதுகாப்பு உண்டு. குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளிப்படும் பொழுது மூச்சுத்திணறல், வலி போன்றவை ஏற்படாது. குழந்தைக்கு எந்தவித நோய்த்தொற்றும் பெரும்பாலும் ஏற்படாது.

தாய்ப்பால்!
சுகப்பிரசவம் மாத்திரை மற்றும் மருந்துகளின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு நடப்பதால், பிரசவத்திற்கு பின் ஏற்பட வேண்டிய தாய்ப்பால் சுரப்பு எந்த ஒரு தாமதமும் இன்றி, விரைவில் நடைபெறும். அதே போல் குழந்தைக்கு போதுமான அளவு மற்றும் தேவையான அளவு தாய்ப்பால் சுரப்பு நிகழ நல்லதொரு வாய்ப்பு இருக்கும். இதனால் குழந்தை தனது ஆரோக்கியமான வளர்ச்சியை அடைய முடியும்.

குழந்தையின் விருப்பம்!
சிசேரியன் அல்லது மற்ற பிரசவ முறையில் தாயின் உடலில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு விட்டால், உடனே அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு குழந்தையை வெளியே எடுத்து விடுவர். ஆனால், சுகப்பிரசவ முறையில் வெளியில் இருக்கும் நபர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒன்றும் நடக்காது; குழந்தை எப்பொழுது வெளியுலகை காண, தனது தாயை காண ஆசைப்படுகிறதோ அப்பொழுது தான் தாயின் வயிற்றில் இருந்து வெளிப்படும். குழந்தை மிகவும் இயற்கையான முறையில் எத்தூண்டுதலும் இன்றி பிறக்கும்; இது சுகப்பிரசவ முறையின் மிக முக்கியமான, அதிசயமான ஒரு நிகழ்வு ஆகும்.



Click it and Unblock the Notifications











