கணவரின் விந்தணுக்களை பலப்படுத்த இந்த 12 விஷயத்த மனைவி கண்டிப்பா செய்யனும்!

Posted By: Lakshmi
Subscribe to Boldsky

குழந்தை என்றாலே அனைவருக்கும் சந்தோஷம் தான். அதிலும் நீங்களே ஒரு குழந்தைக்கு தாயாக போகிறீர்கள் என்றால், நினைக்கவே சந்தோஷமாக தான் இருக்கும் அல்லவா?

சரி, குழந்தை பெருவதற்கு முன் பெண் தனது ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ள வேண்டியது எவ்வளவு அவசியமோ அதே போல தான் ஒரு ஆணும் தன்னை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதும்..!

நீங்கள் கருவுறும் பிரச்சனைக்காக மருத்துவமனை மருத்துவமனைகளாக அலைகிறீர்கள் அல்லது கோவில் கோவிலாக போய் பல பிராத்தனைகளை செய்கிறீர்கள்.

இவை எல்லாம் தேவையே இல்லை.. நீங்கள் அன்றாடம் செய்யும் சில செயல்களை சரியாக செய்தாலே போதும்! ஏன் நீங்கள் இது பற்றி நீங்கள் உங்களது கணவரிடம் பேசுவதில்லை..! இது பற்றி பேச வேண்டியது முக்கியமல்லவா?

பெண்களே! நீங்கள் கர்ப்பமடைய விரும்பினால் உங்களது கணவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மிகவும் அவசியம். அவரின் விந்தணுக்கள் ஆரோக்கியம் பெற நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. சுய இன்பம்

1. சுய இன்பம்

ஆண்களது விந்தணுக்கள் நீண்ட நாட்கள் வெளியேற்றப்படாமல் இருக்க கூடாது. விந்தணுக்களை வெளியேற்ற சுயஇன்பம் காண்பதில் தவறில்லை. உடல் விந்தணுக்களின் தேவை இருந்தால் மட்டுமே விந்தணுக்களை உற்பத்தி செய்யும். எனவே அவர் சுய இன்பம் கொள்வதால் உடலில் விந்தணுக்கள் வெளியேற்றப்படுகிறது.

இதனால் உடலுறவு வைத்துக்கொள்ளும் போது புதிய விந்தணுக்கள் உருவாகின்றன. இது பெண்கள் கர்ப்பமடைய உதவும்.

2. முழுமையான உணவு

2. முழுமையான உணவு

ஆண்கள் சத்தில்லாத உணவுகளை அதிகமாக சாப்பிட்டாலும் எந்த பயனும் இல்லை. விட்டமின் சி, இ, மற்றும் ஜிங்க் நிறைந்த உணவுகள் ஆண்களின் விந்தணுக்களை பலப்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பிரைடு புட் வகைகளை தவிர்க்க வேண்டும், சாக்லேட், வாழைப்பழம் ஆகியவற்றை உங்கள் கணவரை சாப்பிட வைப்பதன் மூலம் எளிதில் கர்ப்பமடையலாம்..!

3. மது வேண்டாம்

3. மது வேண்டாம்

உங்களது கணவர் மது அருந்துபவராக இருந்தால், அதை கைவிட வலியுறுத்துங்கள். ஏனெனில் மது அருந்துவது விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும் என்பதை மறக்க வேண்டாம். பீர் மற்றும் ஒய்ன் போன்றவற்றை கூட அருந்தக்கூடாது. இவற்றிலும் ஆல்கஹால் இருக்கிறது.

4. புகைப்பழக்கம்

4. புகைப்பழக்கம்

புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு மட்டுமல்லது சந்ததிகளுக்கும் கேடு விளைவிப்பதாகும். எனவே புகையிலை மற்றும் புகைப்பழக்கங்களை கைவிடுமாறு உங்கள் கணவரிடம் கூறுங்கள்.

5. பை சீட் வசதியா இருக்கா?

5. பை சீட் வசதியா இருக்கா?

தெரிந்து கொள்வது அவசியம். ஏனெனில் நீண்ட நேரம் இருக்கையில் அமரும் போது ஆணுறுப்பின் அடிப்பகுதி அழுத்தப்படுகிறது.

இதனால் இரத்த ஓட்டம் குறைந்து, விந்தணுக்களின் உற்பத்தி குறைகிறது. எனவே இருக்கை வசதியாக இருப்பதும், நீண்ட நேரம் பயணிக்காமல் இருப்பதும் சிறந்தது.

6. ஸ்டீராய்டுகள் வேண்டாம்

6. ஸ்டீராய்டுகள் வேண்டாம்

ஸ்டீராய்டுகளை எடுத்துக்கொள்வது விந்தணு உற்பத்திக்கு கேடு விளைவிக்கும். இது விந்தணுக்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்துவிடும். தொடர்ந்து ஸ்டீராய்டுகளை எடுத்துக்கொள்வது அதற்கு அடிமையாக்கிவிடும். எனவே இதனை தவிர்க்க சொல்லுங்கள்.

7. 'சிகா'வினால் பாதிக்கப்பட்ட இடங்கள்

7. 'சிகா'வினால் பாதிக்கப்பட்ட இடங்கள்

உங்கள் கணவர் உலகம் சுற்றுவதில் ஆர்வமுள்ளவராக இருந்தால், அவரை சிகாவினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஆறு மாதங்கள் செல்ல வேண்டாம் என கூறுங்கள். இந்த சிகா, பூச்சிகள் மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவினால் பரவக்கூடியது. இது விந்தணுவிற்கு கெடு விளைவிக்கும்.

8. உடல் பருமன்

8. உடல் பருமன்

உங்கள் கணவருக்கு உயரத்திற்கு ஏற்ற எடை இருக்கிறதா என்பதை பி.எம்.ஐ டெஸ்ட் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். ஒருவேளை எடை அதிகமாக இருந்தால் அதனை குறைக்க சொல்லுங்கள். எடை அதிகரிக்கும் கர்ப்பத்தை தடுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

9. கழுவி சாப்பிட வேண்டும்

9. கழுவி சாப்பிட வேண்டும்

காய்கறிகள் மற்றும் பழங்களை கட்டாயம் கழுவி தான் சாப்பிட வேண்டும். என்ன தான் இவை இயற்கையானவையாக இருப்பினும், சில பூச்சிக்கொல்லிகள் இவற்றை வளர்க்க பயன்படுத்தப்படும். இது விந்தணுக்களை கொல்லும். எனவே காய்கறிகள் மற்றும் பழங்களை கழுவி சாப்பிட வேண்டியது அவசியம்.

10. பாட்டில் உணவுகள்

10. பாட்டில் உணவுகள்

கர்ப்பமாக முயற்சிக்கும் போது பாட்டில்களில் அடைக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.

11. இறுக்கமான உடை

11. இறுக்கமான உடை

ஆண்கள் பொதுவாக ஜீன்ஸ் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். நம்ம ஊர் சூட்டுக்கு ஜீன்ஸ் அணிந்தால் உடல் வெப்பநிலை அதிகரிக்கும். விந்தணுக்கள் 3 முதல் 4 டிகிரி செல்சியஸில் தான் நன்றாக வளரும். ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகளை அணிந்தால் உடல் சூடாகி விந்தணு உற்பத்தி பாதிக்கப்படும்.

12. உடலுறவில் அழுத்தம் வேண்டாம்

12. உடலுறவில் அழுத்தம் வேண்டாம்

நீங்கள் என்ன தான் கோபமாக இருந்தாலும், பெற்றோராக வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு கோபத்தை சற்று குறைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். மன அழுத்தத்துடன் உடலுறவில் ஈடுபடுதல் கூடாது. மகிழ்ச்சியுடன் எந்த விஷயத்தை செய்தாலும், அது நன்மையில் முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Twelve Ways to Boost Guy Fertility

Here are the twelve Ways to Boost a Guy's Fertility