இனி உங்கள் விந்தின் திறனை ஸ்மார்ட்போன் மூலமாகவே கண்டறியலாம் - எப்படி?

Posted By:
Subscribe to Boldsky

ஹார்வேர்ட் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இது ஆண்கள் வீட்டில் இருந்தபடியே விந்தணு அல்லது கருவளத்தின் திறனை அறிய வழிவகுத்துள்ளது. இதற்கு உங்கள் ஸ்மார்ட்போனின் உதவி அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெறும் ரூ.290யில்...

வெறும் ரூ.290யில்...

இதற்கான கருவிகள் பல ஏற்கனவே சந்தையில் விற்பனைக்கு உள்ளன என்ற போதிலும். இது மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதை உருவாக்க வெறும் $4.45 தான் தேவைப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு வெறும் ரூ.290 தான்.

ஐந்தே நொடிகள்!

ஐந்தே நொடிகள்!

மேலும், இந்த கருவியின் மூலமாக ஒரு நபரின் விந்தணு திறனை ஐந்தே நொடிகளில் கண்டறிய முடியும். மேலும், இது விந்தின் நீந்தும் திறனை 98% சரியாக கூறும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

பயன்படுத்தும் முறை...

பயன்படுத்தும் முறை...

எளிதாக வெளியில் அகற்ற வசதியான சிப் கொடுக்கப்படுகிறது. இதை பயன்படுத்துபவர்கள் அவர்களுடைய 35 மைக்ரோலிட்டர் விந்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை பல்பு போன்ற வடிவில் இருக்கும் டியூப்பில் செலுத்த வேண்டும்.

பிறகு டிவைஸ்-ஐ ஸ்மார்ட் போனுடன் இணைக்க வேண்டும். இதன் மூலமாக விந்தின் திறனை ஐந்து நொடிகளில் அறிய முடியும் என ஹார்வேர்ட் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

முன்னேற்றம் தேவை...

முன்னேற்றம் தேவை...

இந்த ஆராய்ச்சியில் இன்னும் சில முன்னேற்றங்கள் தேவை என கூறப்படுகிறது. சில விடயங்களை கண்டறிவதில் இந்த கருவி தடுமாற்றம் காண்கிறது.

3 கோடி ஆண்கள்!

3 கோடி ஆண்கள்!

உலகளவில் மூன்று கோடி ஆண்களுக்கும் மேல் கருவள பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர் என ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. மேலும், நீரிழிவு நோயை போல், இதை எளிதாக ஆரம்பித்திலேயே கண்டறிந்தால், சரியான சிகிச்சை மூலம் தீர்வு காணலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Now You Can Check Your Fertility Level in Your Smart Phone Itself!

Now You Can Check Your Fertility Level in Your Smart Phone Itself!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter