ஆணுறை, பில்ஸ் உபயோகப்படுத்தாமல் கர்ப்பத்தை தடுக்க 4 வழி இருக்கு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பினால் அதற்கான தகுந்த காலம் எது என்பதை ஆண் பெண் இருவரும் சேர்ந்தே தான் முடிவெடுக்க வேண்டும். இப்படி குழந்தை பிறப்பை தள்ளிப்போடுவது என்பது எளிதான காரியம் அல்ல.

Natural ways to prevent pregnancy

கர்ப்பமாவதை தவிர்க்க காண்டம் பயன்படுத்துவது, குடும்பக்கட்டுப்பாடு, காப்பர் டீ போன்ற கருவியை பயன்படுத்துவது, மாத்திரை உட்கொள்வது என பல வழிகள் பின்பற்றப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறந்த முறை :

சிறந்த முறை :

ஒவ்வொறு முறைக்கும் சாதகங்களும் பாதகங்களும் இருக்கிறது. மிகச் சிறந்த முறை என்று பலராலும் பாராட்டப்பட்ட ஓர் முறை சொதப்பவும் செய்யும். இவற்றுக்கு எல்லாம் தீர்வாக் குழந்தை பிறப்பை தள்ளிப்போட சில இயற்கையான மூலிகைகள் இருக்கிறது. இவை கர்பப்பை சுவரை கடினமாக்கும். இதனால் விந்தணுவை உள்வாங்க முடியாமால் கருமுட்டை உடைந்திடும். பெண்களுக்கு வழக்கமான மாதவிடாய் வந்துவிடும்.

க்யின் அன்னீஸ் லேஸ் :

க்யின் அன்னீஸ் லேஸ் :

இதனை காட்டு கேரட் என்றும் அழைக்கிறார்கள். இதன் பூவில் இருக்கும் விதைகள் தான் கர்ப்பம் ஏற்படாமல் தடுக்கிறது. இதன் விதைகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் கர்ப்பத்தை தடுக்கும் ஆற்றல் இதற்கு அதிகமுள்ளதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.

உறவில் ஈடுபடுவதற்கு எட்டு மணி நேரம் முன்பு காட்டு கேரட் விதைகளை ஒரு டீ ஸ்பூன் அளவு உட்கொள்ள வேண்டும். அதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது இதில் டீ தயாரித்தும் குடிக்கலாம்.

சிலருக்கு இதனை பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. குறிப்பாக சிறு நீரகம் மற்றும் பித்தப்பையில் கற்கள் இருந்தால் இதனை பயன்படுத்தக்கூடாது.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இதனை உட்கொள்ளக்கூடாது. காட்டு கேரட் செடியைப் போன்றே விஷத்தன்மையுள்ள செடிகள் சில இருப்பதால் இவை என்ன செடி என்பதை விவரமாக அறிந்த பின்னர் சாப்பிடுங்கள்.

Image Courtesy

ப்ளூ கோஷோஷ் :

ப்ளூ கோஷோஷ் :

இந்த செடியின் வேர் குழந்தை பிறப்பை தவிர்க்க உதவிடும். இதில் இரண்டு வகையான சத்துக்கள் கிடைக்கிறது. ஒன்று ஆக்ஸிடாக்சின் மற்றும் சபோனின். உறவுக்கு முன்னதாக எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லையென்றால் உறவுக்குப் பிறகு ப்ள்கோஷ் வேரின் டீ தயாரித்து குடித்துவிடுங்கள்.

ஒரு கப் அளவு தண்ணீரில் ஒரு டீஸ்ப்பூன் அளவு ப்ளூ கோஷ் செடியின் வேரைப் போட்டு நன்றாக கொதிக்க வைத்திடுங்கள். சுமார் ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கிவிடலாம்.

ஒரு நாளைக்கு மூன்று முறை வீதம் இதனை குடிக்கலாம். உங்களுக்கு மாதவிடாய் வரும் வரை தொடர்ந்து குடியுங்கள்.

Image Courtesy

பெனிராயல் :

பெனிராயல் :

ஆதி காலத்தில் கிரேக்கர்களும் ரோமானியர்களும் இதனை கர்ப்பத்தை தவிர்க்கும் மருந்தாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இதன் இலைகள்களை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். சூடு இறங்கிய பின்னர் இலைகளை எடுத்து விட்டு தேவையென்றால் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்.

உறவுக்குப் பிறகு இதனை குடித்து வந்தால் கர்ப்பத்தை தடுத்திடும்.

கிட்னி, நுரையிரல் மற்றும் நரம்புகளில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பவர்கள் இதனை தவிர்த்துவிடுங்கள். மாதவிடாய் முடிந்த சில நாட்களிலும் மாதவிடாய் தொடர்ந்து பத்து நாட்களுக்கும் மேலாக வராத பட்சத்திலும் இதனை குடிக்காதீர்கள்.

Image Courtesy

வேப்பிலை :

வேப்பிலை :

குழந்தை பிறப்பை தள்ளிப்போட அதிகளவு பயன்படுத்தப்படும் வழிகளில் ஒன்று இது. வேப்பிலை, வேப்பிலைச் சாறு வேப்ப எண்ணெய் போன்றவை இதற்கு பயன்படுத்தப்படுகிறது. வேப்ப எண்ணெயை கர்பப்பை மற்றும் ஃபாலோபியன் டியூப் இணையும் இடத்தில் ஊசி மூலமாக செலுத்தப்படுகிறது. இதனால் மாதவிடாய் சுழற்சியில் எந்த வித மாற்றங்களும் இன்றி தொடர்ந்து மாதவிடாய் வந்திடும். வேப்ப எண்ணெய் விந்தணுவை கருமுட்டையில் நுழைந்திடாமல் தடுக்கிறது. இந்த நடைமுறை முப்பது வினாடிகளுக்குள் நடந்துவிடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். வேப்பிலை குழந்தை பிறப்பை தள்ளிப்போட உதவுவதுடன், உறவு வைத்துக் கொள்வதால் ஏற்படும் தொற்றை தடுக்கவும் உதவிடுகிறது.

இயற்கை முறையிலான தடுப்பு முறைகளை பின்பற்றினாலும்,உடலுறவின் போது காண்டம் அணிவது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Natural ways to prevent pregnancy

Natural ways to prevent pregnancy