பக்கவிளைவே இல்லாத இயற்கை கருத்தடை மருந்து எது தெரியுமா? இதப் படிங்க!!

Posted By: Gnaana
Subscribe to Boldsky

புதிதாகத் திருமணம் ஆனவர்கள் முதல், ஏற்கெனவே குழந்தை பிறந்து சில மாதங்கள் ஆனவர்கள் வரைக்கும், கருத்தரிக்கும் வாய்ப்பைத் தடுக்க, நாடுவது, மேலை மருத்துவத்தின் கருத்தடை மருந்துகளையே. சீக்கிரம் தீர்வு கிடைக்கவேண்டும் என்பதற்காக நாடும் அந்த மருந்துகள், தீர்வைத் தந்தாலும், அதற்கு கொடுக்கும் விலை, அவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் மன நல பாதிப்புகள்.

புதிதாகத் திருமணம் ஆனவர்கள் அநேகம் பேர் இன்று, இருவரும் வேலைக்குச் செல்லும் நிலையில் இருக்கிறார்கள், அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார தன்னிறைவை அடைவதற்கு முன் குழந்தைகள் பிறப்பதை சற்று காலம் தள்ளிப் போடலாம் என்று கணவன் மனைவி இருவரும் சேர்ந்து முடிவு செய்து, பாதுகாப்பான முறைகளில் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தாலும், சமயங்களில், கருத்தரிப்பு அறிகுறிகளை உணரும்போது பதட்டமாகி விடுகிறார்கள்.

விளைவாக, நெருங்கிய தோழிகள், குடும்ப உறவுப்பெண்களிடம் ஆலோசனை கேட்கும்போது, அவர்கள் சொல்வது, பயப்பட வேண்டாம், இந்த மாத்திரைகளை போட்டு வந்தால், கரு தங்காது என்று சொல்லி விடுவார்கள்,

இவர்களும் அதையே பின்பற்றி, அந்த முறையை மேற்கொள்வர், விரைவில் தீர்வு கிடைத்து, நிம்மதிப் பெருமூச்சு விடுவர். ஆயினும், அடுத்த மாதாந்திர விலக்கும், உடல் நலமும் சிலருக்கு எப்படி பாதிக்கும் என்பதன் விளைவை, அறியாமல்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருத்தடை மாத்திரைகளின் பக்க விளைவுகள்:

கருத்தடை மாத்திரைகளின் பக்க விளைவுகள்:

கருத்தடை மாத்திரைகளின் மூலம் கருவடைவதைத் தவிர்க்க, மூன்று நாட்களுக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும், அதுவே பலன்கள் தரும் என்று கூறப்படுகிறது. ஆயினும் இந்த மாத்திரைகள், அநேகம் பெண்களுக்கு கடும் உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தியே செல்லும்.

மாத்திரை எடுத்துக்கொண்ட காலத்திற்கு பிறகு வரும், மாதாந்திரப்போக்கு, வழக்கமான நாட்களில் வராமல் சில நாட்கள் தள்ளிப்போகலாம் அல்லது சிலருக்கு முன்னரே வந்து விடலாம். இது போன்ற பாதிப்புகள் ஒரு முறை அல்ல, இரு முறை கூட, அவர்களுக்கு நேரலாம்.

கடுமையான வயிற்று வலி :

கடுமையான வயிற்று வலி :

சிலருக்கு மாத்திரை எடுத்துக்கொண்ட காலத்திலேயே, உடலில் வலி, சோர்வு மற்றும் அசதி ஏற்படலாம். சிலருக்கு, அதீத இரத்தப்போக்கு, கடுமையான வயிற்றுவலி ஏற்படலாம்.

தலை சுற்றல் :

தலை சுற்றல் :

தலை சுற்றல் வாந்தி தலைவலி போன்ற பாதிப்புகள் வந்தால், சிலர், கரு உண்டாகிவிட்டதோ அதனால்தான் இந்த உபத்திரவங்கள் என்று எண்ணக்கூடும், காரணம் அதுவல்ல, இந்த கோளாறுகள் எல்லாம், மருந்தின் பக்க விளைவுகள், உடல் இந்த மருந்தை ஏற்றுக் கொள்ளாமல், அதை வெளித்தள்ள முயற்சிப்பதன் காரணத்தால், மேற்சொன்ன பாதிப்புகள் ஏற்படுகிறது.

கண் பார்வை குறைதல் :

கண் பார்வை குறைதல் :

சிலருக்கு உடல் பலகீனம் காரணமாக, கண் பார்வைத்திறன் குறைதல், உணவு செரியாமை மற்றும் பசியின்மை பாதிப்புகள் ஏற்படலாம். சிலர், இப்போதுதான் வேலையில் சேர்ந்திருக்கிறோம், சேர்ந்த உடனே, பிரசவ விடுப்பு என்றால், வேலை போய்விடுமோ, தேவைக்காக வாங்கிய பொருட்களின் மாதத் தவணையை கட்ட முடியாமல் போய்விடுமோ என்று பொருளாதார கண்ணோட்டத்தில் பல்வேறு தேவையற்ற சிந்தனைகளை உருவாக்கிக் கொண்டு, மனதையும் உடலையும் வருத்திக்கொண்டு, தங்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதிப்பில் ஆழ்த்தி விடுவர்.

தேவையற்ற பாதிப்புகள் :

தேவையற்ற பாதிப்புகள் :

எதனால்? மாத்திரை போட்டும் கரு உண்டாகிவிடுமோ என்ற அச்சத்தினால். எதுவரை? அடுத்த மாதாந்திரவிலக்கு வரும்வரை, வந்தபின்னரே, தேவையற்ற கற்பனைகள் நீங்கி, நிம்மதிப் பெருமூச்சு விடுவர்.

சிலர், உடல் சார்ந்த வேதனைகளை இந்த மருந்துகளால் அனுபவித்தாலும், அவை தந்த தீர்வினால், மீண்டும் ஒருமுறை இது போன்ற கருத்தரிக்கும் விளைவுகள் ஏற்படும் சூழ்நிலையில், இந்த மருந்துகளை ஆலோசனை கேட்காமல், தாங்களே, எடுத்துக் கொள்வர். இதனால் என்ன ஆகிறது?

ஹார்மோன் மாற்றங்கள் :

ஹார்மோன் மாற்றங்கள் :

இதுபோன்ற தொடர்ச்சியான கருத்தடை மாத்திரைகளின் பயன்பாடுகள், உடலில் பல்வேறு பாதிப்புகள் மற்றும் மாதாந்திர சுழற்சியின் இயல்பை மாற்றி விடுகிறது. இதோடு மட்டுமல்ல, இதைவிட மிக மோசமாக கருப்பையை நிரந்தரமாக சுருங்க வைக்கும் விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது, இதனால், குழந்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற மனநிலையில் இருக்கும்போது, குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போகும் ஆபத்தை ஏற்படுத்தி விடும், இவையே, இந்த உடனடித் தீர்வுகளின் பக்க விளைவுகள்.

தீர்வு?

தீர்வு?

மேலை மருந்துகளின் வீரியத்தால், செயற்கைத் தன்மையால், ஏற்படும் உடல் மன நல பாதிப்புகளைக் கண்டு இன்று, நமது பாரம்பரிய இயற்கை மூலிகைகளின் மூலம் தீர்வு காண வருபவர்கள் நிறைய பேர் இருந்தாலும், சிலருக்கு இன்னும் ஒரு அச்சம் இருக்கிறது, மூலிகைகளின் தீர்வுகள் நிரந்தரமாக, பக்க விளைவுகள் இல்லாமல் இருந்தாலும், அவை தீர்வைத்தர நெடு நாட்கள் காத்திருக்க வேண்டியதிருக்கிறதே என்று, இது அறியாமையினால் ஏற்படுவதுதான்.;

எல்லாவற்றிற்கும் மாத்திரைகள் :

எல்லாவற்றிற்கும் மாத்திரைகள் :

மனிதருக்கு ஏற்படும் சளி ஜலதோஷம் போன்ற பாதிப்புகளுக்கு மேலை மருந்துகள் நிவாரணத்தை அளிக்கும் காலத்தைவிட விட விரைவாக செயல்பட்டு, ஓரிரு நாட்களில் பாதிப்புகளை சரிசெய்யும் ஆற்றல் திரிகடுகம், கண்டங்கத்திரி, ஆடாதோடை போன்ற காயகற்ப மூலிகைகளுக்கு உண்டு.

அதுபோல, இன்றைய நவீன காலத்தின் கலாச்சார மாற்றத்தின் விளைவாக, இளவயதுடைய தம்பதிகள் நாடும் கருத்தடைக்கும், தீர்வு இயற்கை மூலிகைகளில் இருக்கிறது. ஒன்றல்ல ஏராளம், அவற்றில் ஒரு சிலவற்றை, நாம் இப்போது பார்ப்போம்.

இயற்கை கருத்தடை பூவரசன் மூலிகை:

இயற்கை கருத்தடை பூவரசன் மூலிகை:

பூவரசன் மரத்தின் பட்டைகளை சிறிது சேகரித்து, நிழலில் உலர்த்தி அதன் பின்னர், அவற்றை பொடியாக்க வேண்டும். இந்தப் பொடியுடன் அதே அளவில் சீமைக்காசிக்கட்டி எனும் மருந்து மற்றும் சிறிது இந்துப்பு சேர்த்து, பொடியாக்கி வைத்துக் கொண்டு, மாதாந்திர விலக்கின் நாளில் இருந்து ஏழு நாட்கள் வரை தினமும் சிறிது எடுத்து சுடுநீரில் கலந்து, சாப்பிட்டு வரவேண்டும்.

உணவுப் பத்தியம் :

உணவுப் பத்தியம் :

இந்த மூலிகை வைத்தியத்திற்கு சில உணவுக் கட்டுப்பாடுகள் தேவை. மூலிகை மருந்து எடுத்துக் கொள்ளும் நாட்களில், பால், கடைந்த மோர், பாசிப்பருப்பு சாம்பார், துவையல் மற்றும் மிளகுப்பொடி சாப்பிட்டு வரவேண்டும். மிளகுப்பொடியை உணவில் கலந்தோ அல்லது சாதத்தில் பிசைந்தோ சாப்பிட்டு வரலாம். ஏழுநாட்களில் ஒருமுறை எண்ணை தேய்த்து குளித்தால், மிகுந்த நன்மை அளிக்கும்.

விரைவில் துளிர்க்கும் :

விரைவில் துளிர்க்கும் :

இந்த முறையில் உணவுக்கட்டுப்பாடுடன் மருந்தை உட்கொண்டு வர, கருப்பை சுருங்கி, ஓராண்டு காலம் வரை, கருத்தரிப்பை தடுக்கும் சக்தி மிக்கது, இந்த பூவரசன் மூலிகை மருந்து.

இயற்கை கருத்தடை வெற்றிலை வேர் மருந்து!

இயற்கை கருத்தடை வெற்றிலை வேர் மருந்து!

மேற்சொன்ன முறையில், அரிதான பூவரசன் மூலிகை வைத்தியம் சிறப்புதான், ஆயினும் எங்கு சென்று தேடுவது, அரிதாகிப்போன பூவரசன் மரத்தை? என்பவர்கள், நாட்டு மருந்து கடைகளில், பூவரசன் மரப்பட்டை பொடியைக் கேட்டு வாங்கலாம், அல்லது எளிதான இந்த வெற்றிலை வேர் வைத்திய வழியையும், முயற்சிக்கலாம்.

ஆயுர்வேத கருத்தடை :

ஆயுர்வேத கருத்தடை :

ஐந்தாறு வெற்றிலை வேர்கள், இவை வெற்றிலைக் கொடிக்கால்கள் எனும் வெற்றிலை விளையும் இடங்களில், காணப்படும். அந்த வேர்கள், சிறிது மிளகு இவற்றை நன்கு அரைத்து, மாதாந்திர விலக்கில் இருந்து, ஆறு வார காலம் தொடர்ந்து சாப்பிட்டு வர, கருவுறும் வாய்ப்பு, பல மாதங்கள் தள்ளிப்போகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Natural contraceptive pills without side effects

Natural contraceptive pills without side effects
Story first published: Tuesday, November 14, 2017, 17:15 [IST]