கருத்தடை சாதனம் வாங்க மறந்துட்டீங்களா? வீட்டில் இருக்கும் இது மட்டும் போதுமே!

Posted By: Lakshmi
Subscribe to Boldsky

இன்று ஜீலை 11 ஆம் தேதி, உலக மக்கள் தொகை தினம். நாம் 2017 ஆம் ஆண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று பல நவீன கண்டுபிடிப்புகள் வந்துவிட்டன. விரல் நுனியில் உலகம் சுழன்று கொண்டிருக்கிறது.

எண்ணிலடங்கா கண்டுபிடிப்புகள், வியக்க வைக்கும் மாற்றங்கள் என நாம் வாழ்ந்து கொண்டிருந்தாலும், மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது மட்டும் புளியங்கொம்பாகவே இன்றளவில் இருந்து கொண்டிருக்கிறது.

pregnancy

உலக மக்கள் தொகையில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. தேவையற்ற கர்ப்பங்கள் உடலையும் வாழ்க்கையும் சேர்த்தே பாதிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆயுர்வேதம்!

ஆயுர்வேதம்!

தேவையற்ற கர்ப்பம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரின் கடமையாகும். தேவையற்ற கர்ப்பத்தினால் பல பின்விளைவுகள் ஏற்படும். இந்த பிரச்சனைக்கு ஆயுர்வேதத்தில் சிறந்த நிவாரணம் இருக்கிறது.

செலவு குறைவு

செலவு குறைவு

இந்த ஆயுர்வேத நிவாரணிகள் மிக எளிதாக கிடைக்க கூடியவை. நமது வீட்டிலேயே இருக்க கூடிய ஒன்று. இவற்றிற்கு அதிக செலவு கூட ஆவதில்லை.

துளசி

துளசி

துளசி ஒரு புனிதமான மூலிகை. இது பல்வேறு மருத்துவ பயங்களை உள்ளடக்கியது. இந்த துளசியை ஆண்கள் கருத்தடை சாதனமாக பயன்படுத்தலாம். இரண்டு கிராம் துளசி இலைகளை ஆண்கள் சாப்பிட்டால், விந்து எண்ணிக்கை மற்றும் இயக்கம் ஆகியவற்றை தற்காலிகமாக குறைக்கலாம்.

இது ஒரு பழங்கால ஆயுர்வேத முறையாகும். ஆனால் அறிவியல் தற்போது தான் இந்த உண்மையை அறிந்திருக்கிறது. ஒரு மாதத்திற்கு தொடந்து துளசி இலைகளை ஆண்கள் சாப்பிட்டு வந்தால், கருத்தரிப்பு திறன் குறையுமாம்.

எருக்கம் பூ

எருக்கம் பூ

துளசியை போன்றே எருக்கம் பூ செடியும் புனிதமான செடியாக கருதப்படுகிறது. இது நமது ஊர் பகுதிகளில் நிறைய வளர்ந்திருக்கும். இதில் சக்திவாய்ந்த ஆண்டிஸ்ப்ரோடோஜெனிக் செயல்பாடு இருக்கிறது.

இந்த செடியில் விஷத்தன்மை இருப்பதால், நீங்கள் இதை பயன்படுத்துவதற்கு முன்னர், ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டியது மிக அவசியம்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சள் ஒரு கிருமி எதிர்ப்பு பொருளாக மட்டும் செயல்படாமல், ஆண்களுக்கான கருத்தடை பொருளாகவும் பயன்படுகிறது. எனவே ஆண்கள் மஞ்சளை ஒரு இயற்கை கருத்தடை பொருளாக பயன்படுத்தலாம்.

குறிப்பு

குறிப்பு

இந்த ஆயுர்வேத பொருட்களை ஆண்கள் கருத்தடை பொருளாக பயன்படுத்துவதற்கு முன்னர், ஆயுர்வேத மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சிறந்ததாக அமையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

ayurvedic contraceptives for men

here are the ayurvedic contraceptives for men
Story first published: Tuesday, July 11, 2017, 15:16 [IST]
Subscribe Newsletter