Latest Updates
-
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வது பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!
ஆண்களுக்கு பெண்களைப் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். இதற்காக படிக்க விருப்பமில்லாத ஆண்களும், பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றிய புத்தகங்களை தேடிப் படிப்பார்கள். அதில் ஒன்று பெண்களின் மாதவிடாய் சுழற்சி குறித்து. மேலும் ஆண்கள் பெண்கள் என இருபாலருக்கும் மனதில் ஓர் கேள்வி எப்போதும் இருக்கும்.
மாதவிடாயின் போது உடலுறவு கொள்ளலாமா?
அது என்னவெனில் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ளலாமா கூடாதா என்பது. இதைப் பற்றி மற்றவர்களிடம் கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை அளிப்பார்கள். உண்மையில் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ளலாமா கூடாதா?
தினமும் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!
இதற்கான விடையை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் இங்கு மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வது பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

மாதவிடாய் கால வலி குணமாகும்
மாதவிடாய் காலத்தில் நிறைய பெண்கள் கடுமையான வயிற்று வலியால் அவஸ்தைப்படுவார்கள். ஆனால் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது, உச்சக்கட்ட இன்பத்தை அடைவதால் வெளியிடப்படும் எண்டோர்பின்கள், வயிற்று வலி மற்றும் இந்த காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து உடனடி நிவாரணம் தரும்.

மாதவிடாய் சுழற்சியில் வெளிவரும் இரத்தம் 100% தீங்கற்றது
நிறைய பேர் மாதவிடாய் சுழற்சியில் வெளிவரும் இரத்தம் அசுத்தமானது மற்றும் நோய்க்கிருமிகளைக் கொண்டது என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அது தவறு. மாதவிடாய் காலத்தில் வெளிவரும் இரத்தத்தில் உடலில் அதிகம் பயன்படுத்தப்படாமல் இருந்த ஆரோக்கியமான இரத்தம் மற்றும் திசுக்கள் தான் உள்ளது. நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருப்பதால், மாதவிடாய் சுழற்சியின் போது அது வெளியே தள்ளப்படுகிறது.

உச்சக்கட்ட இன்பம் மாதவிடாய் இரத்தத்தை வேகமாக வெளியேற்றும்
மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், மற்ற நேரங்களை விட சற்று அதிகமான அளவில் இரத்தம் வெளிவரும். அதிலும் அதுவரை அளவாக இரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தாலும், உடலுறவில் ஈடுபட்ட பின் அதிகமாக வெளிவரும். ஏனெனில் பெண்கள் உச்சக்கட்ட இன்பத்தை அடையும் போது கருப்பையக மாசுக்கள் வேகமாக வெளியேத் தள்ளப்பட்டு, இரத்தக்கசிவு ஏற்படும் நாட்கள் குறையும்.

மூன்றில் ஒரு பங்கினர் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்கின்றனர்
ஆய்வு ஒன்றில் 30 சதவீதத்தினர் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுகின்றனர் என்றும், இக்காலத்தில் மற்ற காலங்களை விட அதிகளவு பாலுணர்ச்சி இருப்பதாகவும் கூறியிருப்பது தெரிய வந்துள்ளது.

அதிக இன்பத்தைக் காணலாம்
முன்பே கூறியது போல் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது, பெண்களுக்கு பாலுணர்ச்சி அதிகம் தூண்டப்படுவதோடு, உடலுறவில் ஈடுபடவும் தோன்றும். மேலும் மாதவிடாய் காலத்தில் மற்ற நேரங்களில் ஈடுபடும் போது அடையும் இன்பத்தை விட அதிகளவு இன்பத்தை அடைவதாக நிறைய பெண்கள் கூறுகின்றனர்.

உயவுப் பொருள் தேவைப்படாது
முக்கியமாக மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், உயவுப் பொருளே தேவைப்படாது. அது ஏன் என்று நீங்களே அறிவீர்கள்.

பாலியல் நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது
இருப்பினும், மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது பாலியல் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. ஏனெனில் இந்த காலத்தில் இரத்தத்தை வெளியே தள்ள கருப்பை வாய் சற்று அதிகமாக திறப்பதால், பாலியல் நோய்களுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே இக்காலத்தில் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுங்கள்.

ஆம், கருத்தரிக்க வாய்ப்புள்ளது
மாதவிடாய் சுழற்சியின் 3-4 ஆம் நாட்களில் தான் உடலுறவில் ஈடுபட்டாலும், கருத்தரிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் ஒருமுறை விந்தணு பெண்களின் உடலினுள் சென்றால் அது 7 நாட்கள் வரை உயிருடன் இருக்கும். இதனால் 28 நாட்கள் அதாவது குறைந்த கால மாதவிடாய் சுழற்சியைக் கொண்டவர்களாக இருந்தால், கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

சுத்தம் செய்வது கடினம்
மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதால் நல்ல இன்பத்தை அனுபவிக்க முடியும். ஆனால் அதனால் படுக்கை விரிப்புக்களில் ஏற்படும் இரத்தக்கறைகளை நீக்குவது என்பது கடினம். ஆனால் உறவு கொண்ட உடனேயே படுக்கை விரிப்பை உப்பு கலந்த குளிர்ந்த நீரில் ஊற வைத்து அலசி, பின் கறை நீக்கிகளை மேலே தெளித்து மீண்டும் அலசினால், இரத்தக்கறைகளைப் போக்கலாம்.

கட்டாயமில்லை
மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வது என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். இக்காலத்தில் உடலுறவு கொள்வது நல்லது என்று கூறுவதால் கட்டாயம் உறவு கொள்ள வேண்டுமென்ற அவசியம் ஏதும் இல்லை.
அறுசுவையும் நாவில் நாட்டியம் ஆட வைக்கும் உடன்குடி கருப்பட்டி!!



Click it and Unblock the Notifications