60 வருடமாக கருப்பையில், கருவை சுமந்து வரும் அதிசய மூதாட்டி!!!

Posted By:
Subscribe to Boldsky

இயற்கைக்கு மாறாக சில சமபவங்கள் உலகில் நடப்பது இயல்பு. இது மனிதர்களை ஆச்சரியப்படுத்துவதும் உண்டு. இதுப்போன்ற விஷயங்கள் மனிதர்களிடையே நடக்கும் போது, அவை ஆச்சரியத்தின் உச்சமாக காணப்படுகிறது. அப்படி தான் வயிற்றில் கட்டி இருக்குமோ என சந்தேகித்து மூதாட்டியை பரிசோதித்த மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது....

பண்டையக் காலத்தில் கருத்தரிப்பதை தவிர்க்க கடைப்பிடிக்கப்பட்ட சில வினோத முறைகள்!!!

ஆம், அந்த பரிசோதனையின் போது தான் அந்த மூதாட்டியின் வயிற்றில் 60 வருடங்களாக கரு இருந்து வந்தது கண்டறியப்பட்டது....

பருவமடைந்த பிள்ளைகளுக்கு ஏற்படும் அந்தரங்க பிரச்சனைகள் - பெற்றோர்களின் கவனத்திற்கும்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஈஸ்டேலா எனும் மூதாட்டி

ஈஸ்டேலா எனும் மூதாட்டி

அர்ஜென்டினா அருகாமையில் இருக்கும் சிலி நாட்டில் இருக்கும் பகுதி தான் லா போகா. இப்பகுதியில் தான் வசித்து வருகிறார் 91வயதான மூதாட்டி ஈஸ்டேலா (Estela). இவரை பரிசோதித்த மருத்துவர்களுக்கு தான் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கட்டி என பரிசோதிக்க போய், அது கட்டியில்ல கருப்பையில் வளராமல் இருந்த கரு என கண்டறிந்தனர்.

60 வருடங்களாக கருப்பையில் இருந்த கரு

60 வருடங்களாக கருப்பையில் இருந்த கரு

91 வயது மூதாட்டியான ஈஸ்டேலாவை, குடும்பத்திற்கு ஓர் பாரமாக தான் கருதி வந்துள்ளனர் இவரது குடும்பத்தார். இதில் இவருக்க பல வருடங்களாக உடல்நல கோளாறு இருந்து வந்துள்ளது. இதை சரி செய்ய தான் எக்ஸ்-ரே எடுத்து பார்க்கலாம் என்று சென்றிருக்கின்றனர். அப்போது, அதில் கரு போன்ற ஏதோ வினோத உருவம் இருப்பதை கண்டு மருத்துவர் சந்தேகம் அடைந்தார்.

மருத்துவ பரிசோதனை

மருத்துவ பரிசோதனை

பிறகு முழுவதுமாக பரிசோதனை செய்த மருத்துவர், ஈஸ்டேலாவின் வயிற்றில் இருப்பது கட்டியல்ல, வளராமல் இருக்கும் கரு என கூறினார். ஆனால், 60 வருடங்களாக வயிற்றில் கரு இருந்ததை கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

குழந்தை செல்வம் இல்லாத ஈஸ்டேலா

குழந்தை செல்வம் இல்லாத ஈஸ்டேலா

60 வருடமாக தனது கருப்பையில் கருவை சுமந்து வருவதை கண்டு சோகம் அடைந்தார் ஈஸ்டேலா. காரணம், இவருக்கு குழந்தை செல்வம் இல்லாதது தான்.

கணவர் மரணம்

கணவர் மரணம்

ஈஸ்டேலாவும், இவரது கணவரும் எவ்வளவோ முயற்சித்தும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை என்றும். இவரது கணவர் கடந்த ஜனவரி மாதம் தான் மரணம் அடைந்தார் என்றும் ஈஸ்டேலா கூறியுள்ளார்.

கருவை அகற்ற மருத்துவர்கள் அச்சம்

கருவை அகற்ற மருத்துவர்கள் அச்சம்

ஈஸ்டேலாவின் கருப்பையில் இருப்பது கட்டியல்ல, கரு தான் என கண்டறிந்தும், மருத்துவர்கள் அந்த கருவை அகற்ற அச்சம் அடைகின்றனர். காரணம், இந்த வயதில் அந்த கருவை ஈஸ்டேலாவின் கருப்பையில் இருந்து அகற்றும் போது அவரது நலத்திற்கு ஏதேனும், தீங்கு ஏற்பட்டுவிடலாம் என மருத்துவர்கள் அஞ்சுகின்றனர்.

கருவை அப்படியே விட்டுவிடலாம்

கருவை அப்படியே விட்டுவிடலாம்

எனவே, மருத்துவர்கள் அந்த கருவை ஈஸ்டேலாவின் கருப்பையிலேயே விட்டுவிடுவது தான் சரியானது என முடிவு செய்துவிட்டனர். தானும் தனது கணவரும் ஆசைப்பட்ட குழந்தை எனது வயிற்றிலேயே இருக்கிறது என கவலையில் இருக்கிறார் ஈஸ்டேலா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Image COurtesy

English summary

Doctors Discover 60 Year Old Fetus Inside The Womb Of An Old Lady

Doctors Discover 60 Year Old Fetus Inside The Womb Of An Old Lady, Take a Look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter