Latest Updates
-
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
உங்களால் கருத்தரிக்க முடியும் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!
இன்றைய காலத்தில் திருமணமான பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் சந்தேகங்களில் ஒன்று தான் 'என்னால் கருத்தரிக்க முடியுமா?' என்பது. அந்த சந்தேகம் மனதில் இருந்தாலும், தன்னால் கர்ப்பமடைய முடியும் என்பதை பலர் மாதவிடாய் சுழற்சியின் மூலம் தான் உறுதி செய்வார்கள். ஆனால் அந்த ஒரு விஷயம் மட்டும் கர்ப்பமடையும் வாய்ப்பு உள்ளது என்பதை வெளிப்படுத்தும் என்று நினைக்க வேண்டாம். ஏனெனில் இந்த அறிகுறி இருந்த போதிலும் பல பெண்கள் கருவுறுதலில் கஷ்டப்படுகின்றனர்.
ஆனால் முறையான மற்றும் தொடர்ச்சியான மாதவிடாய் சுழற்சி தான் முதல் இடத்தைப் பெறும். இருப்பினும் கர்ப்பமடையும் வாய்ப்பு உள்ளது என்பதை உணர்த்தும் வேறு சில அறிகுறிகளையும் ஒவ்வொரு பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.
எனவே தமிழ் போல்ட் ஸ்கை பெண்களுக்காக கர்ப்பமடைவதற்கான வாய்ப்பு நிச்சயம் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் மற்ற அறிகுறிகளைக் கொடுத்துள்ளது. அது என்னவென்று பார்ப்போம்.

ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி
ஒவ்வொரு மாதமும் தவறாமல் மாதவிடாய் சுழற்சி நடைபெற்றால், அத்தகையவர்களுக்கு கருத்தரிக்கும் தகுதி உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஏனெனில் இப்படி முறையான மாதவிடாய் சுழற்சி நடைபெற்றால், ஹார்மோன்களானது சரியாக செயல்பட்டு, கர்ப்பமடைய நினைக்கும் போது பெரிதும் உதவியாக இருக்கும்.

ஓவுலேசன் சுழற்சி
ஓவுலேசன் சுழற்சியானது ஒவ்வொரு மாதமும் சரியாக நடைபெறுமானால், அதுவும் குழந்தை பெறும் தகுதி உள்ளது என்பதை தெளிவாக வெளிப்படுத்தும். பொதுவாக பெண்கள் அடுத்த மாதவிடாய் சுழற்சி வருவதற்கு 14 நாட்களுக்கு முன்னர் தான் ஓவுலேசன் காலமாகும். இக்காலத்தில் ஒருசில அறிகுறிகள் தென்படும். இது ஒவ்வொரு மாதமும் நடைபெற்றால், அவர்கள் கருத்தரிக்க தகுதியானவர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

உடல் எடை
உயரத்திற்கு ஏற்ற உடல் எடை இருந்தாலும், எளிதில் கருத்தரிக்க முடியும். ஆனால் உடல் எடை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால், பின் கருத்தரிப்பதில் பிரச்சனை தான் ஏற்படும். ஆகவே எப்போதும் உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும்.

நார்த்திசுக்கட்டிகள்
நார்த்திசுக்கட்டிகள் இல்லாமல் இருந்தால், கருத்தரிப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் இந்த கட்டிகளானது கருப்பையில் இருந்தால், அது மாதவிடாயின் போது கடுமையான வலியை ஏற்படுத்துவதோடு, அதிகப்படியான இரத்தப் போக்கையும் ஏற்படுத்தும்.

பால்வினை நோய்கள்
பால்வினை நோய்கள் இருந்தாலும், கருத்தரிக்க முடியாது. ஆகவே கருத்தரிக்க முயலும் போது, முடியாமல் போனால், அப்போது பால்வினை நோய் உள்ளதா என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

நோய்த்தொற்றுகள்
வயிற்றில் பாக்டீரியல் தொற்றுகள் ஏற்பட்டிருக்கும் போது, அதனை முறையாக கவனித்து சரிசெய்யாவிட்டால், அது கருப்பை, கருமுட்டை குழாய்கள் மற்றும் இனப்பெருக்க பாதை போன்றவற்றை பெரிதும் பாதித்து, மலட்டுத்தன்மையை உண்டாக்கிவிடும். எனவே ஏதேனும் நோய்த்தொற்று இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

புகைப்பிடிக்கக்கூடாது
புகைப்பிடிப்பது ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்திவிடும். எனவே நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்தால், உடனே அதை நிறுத்திவிடுங்கள். இல்லாவிட்டால், அது மாதவிடாய் மற்றும் ஓவுலேசன் சுழற்சியின் இடையூறை ஏற்படுத்தி, முட்டைகளை பாதிக்கும்.



Click it and Unblock the Notifications
