For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பமாவதற்கு தடையாக இருக்கும் முறையற்ற மாதவிடாய் சுழற்சியை சரிசெய்யும் உணவுகள்!!!

By Maha
|

தற்போதுள்ள பெண்களுக்கு கர்ப்பமாவதற்கு தடையாக இருப்பது முறையற்ற மாதவிடாய் சுழற்சி தான். பெண்களுக்கு மாதம் ஒருமுறை அண்டத்தில் உள்ள முதிர்ச்சியடைந்த முட்டையானது வெளியேறி விட வேண்டும். அப்படி வெளியேறாவிட்டால், கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும். ஆனால் இத்தகைய முறையற்ற மாதவிடாய் சுழற்சியை ஒருசில உணவுகளை உண்பதன் மூலம் சரிசெய்யலாம்.

ஆண்களே! இதோ ஆண்மை இழப்பு ஏற்படுவதைத் தடுக்கும் பழங்கள்!!!

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள உணவுகள் அண்ட விடுப்பை தூண்டுவதுடன், கருப்பைக்கு வேண்டிய சத்துக்களை வழங்கி, கருப்பையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். கருத்தரிப்பதற்கு எத்தனை உணவுகள் இருந்தாலும், அவை அனைத்தும் மாதவிடாய் சுழற்சியை முறையாக நடக்க வைப்பதில்லை. ஆகவே அப்போது மாதவிடாய் சுழற்சியை முறையாக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டால், மாதவிடாய் சுழற்சி முறையாக நடப்பதுடன், எவ்வித பிரச்சனையும் இல்லாமல் எளிதில் கருத்தரிக்கலாம்.

எளிதில் கர்ப்பமாக வேண்டுமா? அப்ப ஓவுலேசன் காலத்தில் ஆரோக்கியமா இருங்க...

இங்கு அப்படி மாதவிடாய் சுழற்சியை முறையாக நடக்க வைக்கும் சில உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த உணவுகளை உட்கொண்டால், அண்டத்தில் உள்ள முதிர்ச்சியடையாத முட்டைகள் ஆரோக்கியமாக இருந்து, கருத்தரிக்க முயலும் போது உதவியாக இருக்கும். சரி, இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைட்டமின் டி: முட்டை

வைட்டமின் டி: முட்டை

வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் தான், பி.சி.ஓ.எஸ் ஏற்படும். ஆனால் இத்தகைய வைட்டமின் டி முட்டையில் அதிகம் இருப்பதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால், மாதவிடாய் சுழற்சி சரியாக நடைபெறும்.

ஃபோலிக் ஆசிட்: அஸ்பாரகஸ்

ஃபோலிக் ஆசிட்: அஸ்பாரகஸ்

ஓவுலேசன் சரியாக நடைபெற ஃபோலிக் ஆசிட் மிகவும் இன்றியமையாதது. எனவே ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ள அஸ்பாரகஸ் சாப்பிட்டால், மாதவிடாய் சுழற்சி சீராக நடக்கும்.

வைட்டமின் பி12: கடல் சிப்பி

வைட்டமின் பி12: கடல் சிப்பி

கடல் சிப்பி பாலுணர்ச்சியை தூண்டும் உணவுப் பொருள் மட்டுமல்ல. வைட்டமின் பி12 அதிகம் நிறைந்த உணவுப்பொருளும் கூட. ஆகவே இதனை பெண்கள் சாப்பிட்டு வந்தால், முறையான மாதவிடாய் சுழற்சி நடைபெற்று, கருப்பை வலுவுடன் ஆரோக்கியமாக இருக்கும்.

இரும்புச்சத்து: மாதுளை

இரும்புச்சத்து: மாதுளை

இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டாலும், முறையற்ற மாதவிடாய் சுழற்சியுடன், முட்டையின் தரமும் குறைவாக இருக்கும். எனவே இரும்புச்சத்து அதிகம் நிறைந்த மாதுளையை உட்கொண்டு வந்தால், ஓவுலேசன் சரியாக நடக்கும்.

வைட்டமின் ஈ: பாதாம்

வைட்டமின் ஈ: பாதாம்

கருமுட்டையில் உள்ள டி.என்.ஏ-வை பாதுகாப்பதற்கு வைட்டமின் ஈ மிகவும் இன்றியமையாதது. அதுமட்டுமல்லாமல், இது அண்ட விடுப்பை தூண்டக்கூடியது. எனவே முறையற்ற மாதவிடாய் சுழற்சி கொண்டவர்கள், இதனை உட்கொள்வது நல்லது.

வைட்டமின் பி6: வாழைப்பழம்

வைட்டமின் பி6: வாழைப்பழம்

வாழைப்பழத்தில் மாதவிடாய் சுழற்சியை சீராக வைக்கும் ஹார்மோனை சுரக்கும் வைட்டமின் பி6 உள்ளது. எனவே பெண்கள் இதனை உட்கொண்டால், மாதவிடாய் சுழற்சி சீராக நடைபெறும்.

புரோட்டீன்: சைவ உணவுப் பொருட்கள்

புரோட்டீன்: சைவ உணவுப் பொருட்கள்

அதிகப்படியான உடல் எடையைக் கொண்ட பெண்களுக்கு தான் முறையற்ற மாதவிடாய் சுழற்சி பிரச்சனையானது அதிகம் இருக்கும். எனவே அத்தகையவர்கள், அசைவ உணவுகளை தவிர்த்து, சைவ உணவுப் பொருட்களான புரோட்டீன் அதிகம் நிறைந்த சோயா மற்றும் பருப்பு வகைகளை உட்கொள்வது நல்லது.

செலினியம்: நட்ஸ்

செலினியம்: நட்ஸ்

செலினியம் என்னும் ஊட்டச்சத்து, முதிர்ச்சியடைந்த முட்டைகளை ப்ரீ ராடிக்கல்களிடம் இருந்து பாதுகாக்கும். இத்தகைய செலினியம் வால்நட்ஸ் மற்றும் பிரேசில் நட்ஸ் போன்றவற்றில் அதிக அளவில் உள்ளது.

அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள்

அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள்

ஆய்வு ஒன்றில் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் எப்போதும் அண்டவிடுப்பை தூண்டாது. எனவே கொஞ்சமாவது கொழுப்பு அதிகம் உள்ள பால் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, 4 கப் குறைந்த கொழுப்புள்ள தயிருக்கு பதிலாக அதிக கொழுப்புள்ள 1 டம்ளர் க்ரீம் மில்க் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods For Ovulation Stimulation

If your ovulation is irregular, you will have a tough time getting pregnant. Some food for ovulation may help solve your problem. Here are some foods that can help you ovulate regularly.
Desktop Bottom Promotion