Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் பற்றிய பொதுவான கேள்விகளும்... பதில்களும்...
இன்றைய காலத்தில் தாமதமாக குழந்தைப் பெற்றுக் கொள்ள நினைப்பவர்கள் பிறப்புக் கட்டுப்பாட்டு முறையைப் பின்பற்றுகின்றனர். இந்த பிறப்புக் கட்டுப்பாட்டில் பல வகைகள் உள்ளன. அதில் மாத்திரைகள், கருத்தடை சாதனங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இப்படி பிறப்புக் கட்டுப்பாட்டு முறையை பின்பற்றும் முன், பலருக்கு மனதில் ஒருசில கேள்விகள் எழக்கூடும்.
அதில் ஒருசில கேள்விகளை வெளிப்படையாக மற்றவர்களிடம் கேட்க முடியாமல் இருப்போம். அதிலும் பெண்களுக்கு அதிக அளவில் கேள்விகள் எழும். உதாரணமாக, பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரையை எடுத்துக் கொண்ட பின்னர், ஒரு மணிநேரத்திலேயே அது வெளிவந்துவிட்டால், என்ன செய்வது? மீண்டும் ஒரு மாத்திரையை எடுக்க வேண்டுமா அல்லது தேவையில்லையா? இதுப்போன்று பல கேள்விகள் உள்ளன.
இதுப்போன்று வேறு: பிறப்பு கட்டுப்பாடு முறையினால் எதிர்கொள்ளக்கூடிய பக்க விளைவுகள்!!!
இங்கு அப்படி பல பெண்களின் மனதில் எழும் பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் பற்றிய சில கேள்விகளும், அதற்கான பதில்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்டி பயாட்டிக்ஸ் எடுக்கும் போது பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுக்கலாமா?
சில வகையான Rx மருந்துகள், பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளின் சக்தியை குறைத்துவிடும். இருப்பினும் Rifampin அல்லது Rifabutin ஆன்டி பயாடிக்ஸ்களை எவ்விதத்திலும் பாதிக்காது. இருந்தாலும், இதைப் பற்றி ஒருமுறை மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது மிகவும் நல்லது.

கருப்பையக சாதனம் (Intra Uterine Device) விழுந்துவிட்டால் என்ன செய்வது?
ஒருவேளை பிறப்புறுப்பு வழியாக செலுத்தப்படும் கருப்பையக சாதனம் விழுந்துவிட்டால், அதனை உடனே எடுத்து கழுவி தாமாகவே மீண்டும் செலுத்தாமல், மருத்துவரிடம் சென்று பொருத்திக் கொள்ளுங்கள்.

பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் சிறிது நேரத்தில் வெளிவந்துவிட்டால், அதன் பலன் கிடைக்குமா இல்லையா?
சிலருக்கு பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் போட்டு 3 மணிநேரத்திற்குள் வாந்தி வரும். அப்படி வாந்தி வந்தால், அந்த மாத்திரையின் பலன் கிடைக்காது. எனவே அப்போது மற்றொரு மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரையை போட்ட பின்னரும் காண்டம் பயன்படுத்த வேண்டுமா?
பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரையை எடுத்துக் கொண்ட பின்னரும், காண்டம் பயன்படுத்தினால், நிச்சயம் கருவுறாமல் இருக்கலாம்.

முறையற்ற மாதவிடாய் சுழற்சியினால் அவஸ்தைப்பட நேரிடுமா?
பொதுவாக பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், முதன் 3-4 மாதங்களுக்கு முறையற்ற மாதவிடாய் சுழற்சியானது ஏற்படும். ஆனால் 4 மாதங்களுக்கு பின்னரும் இந்த நிலை நீடித்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

அனைத்து பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளும் ஒரே மாதிரியானதா?
பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளில் இரண்டு வகைகள் உள்ளன. அவற்றில் காம்பினேஷன் மாத்திரைகளில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டிரோஜென் ஹார்மோன்களும், மினி மாத்திரைகளில் புரோஜெஸ்டிரோன் மட்டும் இருக்கும்.



Click it and Unblock the Notifications