Latest Updates
-
பச்சை பயறு தேங்காய்ப்பால் அரிசி கஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
நவம்பர் 06, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த துயரமான நாளாக இருக்குமாம் -
தீபாவளிக்கு பின் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
தீபாவளிக்கு பின் நிகழும் சுக்கிர பெயர்ச்சியால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தீபாவளிக்கு இப்படி மசாலா அரைச்சு மட்டன் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
1/4 கப் இஞ்சியும், தேங்காயும் வைச்சு இந்த வித்தியாசமான சட்னி அரைச்சு பாருங்க -இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
தீபாவளி அன்று பளபளன்னு ஜொலிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குளை போடுங்க.. -
இராவணனுக்கு தங்க நகரமான இலங்கை எப்படி கிடைத்தது? அதை இராவணனுக்கு கொடுத்தது யார் தெரியுமா? -
நாளைக்கு மறந்தும் இந்த பொருட்களை யாருக்கும் கொடுக்காதீங்க.. இல்ல வறுமை வாட்டி எடுத்துடும்! -
1 கப் பொட்டுக்கடலை இருந்தா தீபாவளிக்கு இந்த புது ஸ்வீட்டை செய்யுங்க - டேஸ்ட் அதிரிபுதிரியா இருக்கும்
விந்தணுவை அழித்தல்: ஆண்களுக்கான ஒரு சிறந்த கருத்தடை முறை
ஒரு தம்பதிகள் தங்களுக்கு தேவையான குழந்தைகளை பெற்றுக் கொண்ட பின்னர் இனி குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்வர் அல்லது சிறிது காலத்திற்கு குழந்தைகள் வேண்டாம், பிறகு பெற்றுக் கொள்ளலாம் என்றும் எண்ணுவர். மேலும் இதற்காக பல கருத்தடை முறையையும் பயன்படுத்துவார்கள்.
கருத்தடை செய்யும் வழிகள் ஏராளமானவைகள் உள்ளன. ஒரு பெண் கர்ப்பம் தரிக்காமல் இருக்க மாத்திரைகள், காண்டம்கள் மற்றும் கருத்தடை கருவிகள் என பல உள்ளன. கருத்தடைக்கு பெண்கள் அதிகம் பயன்படுத்துவது கருத்தடை மாத்திரைகளும் கருத்தடை கருவிகளும் தான். ஆண்களோ அதிகமாக பயன்படுத்துவது காண்டம்களையே. பெண்களுக்கு கருத்தடை செய்ய பல வழிகள் இருக்கின்றன. ஆனால் ஆண்களும் கருத்தடை முறையில் தங்களுக்கான பங்களிப்பை அளிக்கும் காலம் வந்துவிட்டது. காண்டம் பயன்படுத்துதல் மற்றும் ஆண்மை நீக்கம் தவிர ஒரு புதிய வழி முறையும் இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது ஆண்களுக்கான கருத்தடை முறையாக அமையும்.

விந்தணுவை அழித்தல் (Sperm Zapping) என்று ஆண்களுக்கான புது வகையான கருத்தடை முறை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இது அல்ட்ராசவுண்ட் மூலயமாக ஆண்களின் விந்தணுவை நிறுத்தி பெண்கள் கர்ப்பமாவதை தடுக்கும்.
விந்தணுவை அழித்தல் என்றால் என்ன?
எலிகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வின்படி, சிறு அளவிலான அல்ட்ரா ஒலியை எலியின் ஆண்விதை மீது வைத்ததனால், விந்தணு உற்பத்தி நின்று போனது கண்டுப்பிடிக்கப்பட்டது. எலிகளுக்கு நடந்த ஆய்வை, மனிதனோடு ஒப்பிடுகையில் இதை ஆணுக்கு செயல்படுத்தினால் விந்தணு தயாரிப்பு முற்றிலும் நின்றுவிடுவதற்கு பதிலாக மலட்டுத் தன்மையை ஏற்படுத்திவிடும். இது கிட்டத்தட்ட ஆண்மை நீக்கம் போலத் தான். ஆனால் ஒரு வித்தியாசம் என்னவென்றால் இது தற்காலிகம் தான். மேலும் இவ்வாறு செய்த பின்னர் மலட்டுத்தன்மையை போக்குவதற்கு, அதற்கான ஊசி ஒன்றை போட்டால், அந்த ஊசியில் உள்ள மருந்தானது விந்தணு எண்ணிக்கையை பாதிப்படைய வைத்த ஜெல்லை வெளியேற்றி, சில நாட்களில் மலட்டுத்தன்மை நீங்கிவிடும்.
விந்தணுவை அழித்தல் எப்படி நடக்கிறது?
மருத்துவர் ஒரு ஆணின் விந்துக்குழாயின் வழியே ஒரு ஜெல்லை உள்ளேற்றுவார். விந்துக்குழாய் என்பது ஆண் விதையிலிருந்து ஆண் குறிக்கு விந்தணு வரும் ஒரு குழாயாகும். இந்த ஜெல்லை உள்ளேற்றினால், அது விந்தணுவின் ஓட்டத்தை தடுத்து, விந்தணு வெளியேறுவதை தடுக்கும். எனவே இந்த முறையை ஒரு இயற்கை கருத்தடை முறையாக எண்ணி ஆண்கள் இதை பயன்படுத்தலாம். இதுவும் ஆண்மை நீக்கம் போலத் தான். ஆனால் இதில் விந்துக்குழாயை கட்டிப் போடுவதோ அல்லது வெட்டி எரிவதோ நடப்பது கிடையாது. ஒரே ஒரு ஊசி மட்டும் விந்துக்குழாயில் போட்டுக் கொள்ள வேண்டும்.
ஏற்கனவே சொன்னது போல் விந்தணுவை அழித்தல் என்பது ஆண்களுக்கு நிரந்தர கருத்தடை செய்து விடாது. தேவைப்பட்ட நேரத்தில் இந்த முறையைப் பயன்படுத்தலாம். ஆய்வாளர்கள் இன்னும் இந்த முறையை பற்றி ஆராய்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதுநாள் வரை இந்த கருத்தடை முறை ஆண்களுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை. இருப்பினும் மருத்துவரிடம் கலந்தாலோசித்து முடிவெடுப்பதே சிறந்தது.



Click it and Unblock the Notifications
