For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருக்கலைப்பிற்கு பின் மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

By Maha
|

சிலருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் கருக்கலைப்பு செய்தது அதிர்ச்சிகரமான அனுபவமாக இருக்கும். மேலும் தற்போது எதிர்பாராதவாறு கர்ப்பம் அடைந்துவிட்டால், அதனை மாத்திரைகள் மூலம் கலைத்துவிடுகின்றனர். ஆனால் சில நேரங்களில் கருத்தரித்த பெண்களின் உடல்நலத்திற்காக அறுவை சிகிச்சையின் மூலம் கருக்கலைப்பு செய்ய வேண்டியுள்ளது. இவ்வாறு அறுவை சிகிச்சையின் மூலம் மேற்கொள்ளும் கருக்கலைப்பு செய்த பின்னர் பெண்கள் மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஆளாவார்கள்.

இதற்காக பயப்பட வேண்டாம். ஏனெனில் இது பொதுவான ஒரு பிரச்சனை தான். இவ்வாறு அறுவை சிகிச்சைளின் மூலம் கருக்கலைப்பு நடந்த பின்னர் மலச்சிக்கல் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. இப்போது அந்த காரணங்கள் என்னவென்று கீழே பார்ப்போம்.

Reasons For Constipation After An Abortion

* திடீரென்று கருக்கலைப்பு நடந்தால், கருப்பையில் உள்ள சிசு மட்டும் தான் வெளியேற்றப்படுமே தவிர, கர்ப்பத்திற்கு வழிவகுக்கும் ஹார்மோன்களானது உடனே செயல்பாட்டை நிறுத்தாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும். இதனால் கர்ப்பத்தின் போது சந்திக்கக்கூடிய மலச்சிக்கல் பிரச்சனை, கருக்கலைப்பிற்கு பின் ஏற்படுகிறது. ஆனால் நாளடைவில் அந்த பிரச்சனை குணமாகிவிடும்.

* பொதுவாக அறுவை சிகிச்சையின் மூலம் உடலின் மேற்புறத்தில் அதிர்ச்சிகள் ஏற்படும். ஆனால் வயிற்றில் மேற்கொள்ளும் அறுவை சிகிச்சையின் போது, அடிவயிற்றில் கடுமையான அதிர்ச்சி ஏற்படும். இதனால் அறுவை சிகிச்சைக்கு பின் அடிவயிற்றில் உள்ள தசைகளானது அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருப்பதால், குடலியக்கத்தின் செயல்பாடானது குறைந்து, மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது.

* கருக்கலைப்பு நடந்தால், சிறிது நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும். இந்த நேரத்தில் அதிகமாக வேலை செய்யக்கூடாது. இவ்வாறு வேலை செய்யாமல் இருப்பதால், உடலின் மெட்டபாலிசமானது குறைந்து, மலச்சிக்கலை ஏற்படுத்தும். ஆனால் மலச்சிக்கல் ஏற்படுகிறது என்பதற்காக, உடனே எழுந்து வேலைகளை செய்யாமல், முடிந்த அளவு ஓய்வு எடுப்பதே நல்லது.

* அறுவை சிகிச்சையின் போது அதிகப்படியான இரத்தத்தை இழக்க நேரிடும். இதனால் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும். ஆகவே மருத்துவர்கள் உடலில் இரத்தத்தை அதிகரிப்பதற்கு, மருந்துகளைக் கொடுப்பார்கள். ஆகவே இந்த மருந்துகளை உட்கொள்வதால், மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது.

இவையே அறுவை சிகிச்சையின் மூலம் கருக்கலைப்பு செய்த பின், மலச்சிக்கல் பிரச்சனையை சந்திப்பதற்கான காரணங்கள். வேண்டுமெனில் இத்தகைய மலச்சிக்கலில் இருந்து விடுபட, நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ளலாம்.

English summary

Reasons For Constipation After An Abortion

There are several reasons for having constipation after abortion. Knowing these reasons may help you regularise your bowel movements and also cope with the discomfort. Here are some of the main causes of constipation after abortion.
Desktop Bottom Promotion