Latest Updates
-
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம்
முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் கருச்சிதைவை தடுக்க சில டிப்ஸ்...
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் தான் கர்ப்பிணிகள் அதிக கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த நேரத்தில் கருச்சிதைவு எளிதில் ஏற்படும். மேலும் இன்றைய மன அழுத்தம் அதிகம் சூழ்ந்துள்ள மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், நிறைய கருச்சிதைவானது நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி, கர்ப்பிணிகள் வீட்டிலேயே அதிக நேரம் தங்குவதில்லை. ஏனெனில் வாழ்க்கையை நன்கு நடத்துவதற்கு, கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டியுள்ளது.
எனவே இத்தகைய சூழ்நிலையில் பெண்கள் ஒருசில செயல்களை மற்றும் உணவுகளை, கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் செய்வதை அறவே தவிர்க்க வேண்டும். இதனால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புக்கள் குறையும். சரி, இப்போது அந்த மூன்று மாதங்களில் கருச்சிதைவு நடைபெறாமல் இருப்பதற்கு என்னவெல்லாம் பின்பற்ற வேண்டுமென்று பார்ப்போமா!!!

* பொதுவாக கர்ப்பத்தின் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் நீண்ட தூர பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த நேரத்தில் வயிற்றில் இருக்கும் சிசுவானது நன்கு வலிமையோடு இருக்காது. ஆகவே அப்போது உடலில் அதிகப்படியாக அசைந்தாலோ அல்லது குலுங்கினாலோ, அவை கருச்சிதைவை ஏற்படுத்திவிடும்.
* ஜங்க் உணவுகள் சாப்பிடக்கூடாது. அவையும் கருச்சிதைவை உண்டாக்கும். ஆகவே நல்ல பழங்கள் மற்றும் வீட்டில் சமைக்கும் ஆரோக்கியமான உணவுகளை மட்டும் சாப்பிட்டு வந்தால், உடலையும், வயிற்றில் இருக்கும் சிசுவையும் ஆரோக்கியத்துடன் பெற்றெடுக்கலாம்.
* சில நேரங்களில் பெண்களுக்கு முதல் மூன்று மாதங்களில் கர்ப்பமாக இருப்பது தெரியாது. ஆகவே கர்ப்பமாவதற்கு முயற்சிக்கும் போது, காபி அதிகம் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், காபியில் உள்ள காப்ஃபைன் கருச்சிதைவை உண்டாக்கும். எனவே குழந்தையை நன்கு பெற்றெடுக்க வேண்டுமெனில் காபி குடிப்பதை நிறுத்த வேண்டும்.
* கர்ப்பமாக இருக்கும் போது அதிகமாக கோபமோ அல்லது மனஅழுத்தமோ அடையக் கூடாது. ஏனெனில் அவ்வாறு மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்கள் கருப்பையில் ஒருவித இறுக்கத்தை ஒருவாக்கி, கருவிற்கு அழிவை ஏற்படுத்தும். எனவே எந்த அளவு மன அழுத்தத்தை தவிர்த்து சந்தோஷமாக இருக்க முடியுமோ, அந்த அளவு சந்தோஷமாக இருக்க வேண்டும்.
இவையே கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் ஏற்படும் கருச்சிதைவை தடுக்கும் எளிமையான இயற்கை வழிகள். வேறு ஏதாவது தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
