குழந்தை பெறுவதை தாமதப்படுத்த சொல்ல வேண்டிய 9 காரணங்கள்!!!

By Super

'பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழிய!' என்ற வாழ்த்துதலோடு தொடங்கும் திருமண பந்தத்தில குழந்தை பெற்றுக் கொள்வது ஒரு முக்கியமான செயலாகும். இன்றைய உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல் பொருளாதாரத்தில். நம்முடைய தாத்தா, பாட்டி காலத்தைப் போல நினைத்தவுடன் குழந்தை பெற்றுக் கொள்ள நினைத்தால். அது பல்வேறு தவறான பின்விளைவுகளையும், சவால்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு மாற்றி விடும். எனவே தான் திட்டமிட்டு ஒரு குடும்பத்தை உருவாக்கும் போது, அதில் குழந்தை பெற வேண்டிய காலம் முதன்மையான அம்சமாக உள்ளது.

கணவனும், மனைவியும் நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேலைக்கு செல்லும், இந்த வேகமான உலகத்தில், குழந்தை பெறுவதை நாளுக்கு நாள் தள்ளிப் போட்டுக் கொண்டு செல்வது வழக்கமாகி வருகிறது. இவ்வாறு குழந்தை பெறுவதை தள்ளிப் போடுவதைப் பற்றி பேசும் போது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை முன்வைப்பார்கள். அந்த வகையில் குழந்தை பெறுவதை தள்ளிப் போட விரும்பும் மனிதராக இருக்கும் பட்சத்தில், நீங்கள் தனித்துவிடப் படவில்லை. உங்களுக்கு ஆலோசனை சொல்ல நாங்கள் இருக்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொருளாதார நிலைமை

பொருளாதார நிலைமை

குழந்தைகள் பெறுவதற்காக காத்திருக்கும் போது சொல்லப்படும் மிகப் பெரிய காரணம் பொருளாதார நிலைமை. குழந்தைகள் வாழ்க்கையில் பெருமளவு பணத்தை செலவு செய்ய வைப்பவர்களாவார்கள். ஆகவே பொருளாதார நிலைமையில் நன்கு வலுவானப் பின் குழந்தை பெறுவதாகவும் சொல்லலாம்.

பொறுமை மற்றும் கட்டுப்பாடு

பொறுமை மற்றும் கட்டுப்பாடு

வாழ்க்கையின் பின் பகுதியில் குழந்தை பெற்றுக் கொள்ளும் போது, வியர்வை சிந்திய சேமிப்பை எப்படி குழந்தை பராமரிப்பிற்காக அளவோடு செலவு செய்ய வேண்டும் என்பதை கற்றிருப்பீர்கள். மேலும், குழந்தையை பேணிக் காக்கும் பெற்றோர்களுக்கு இது மிகவும் முக்கியமான விஷயமாக இருக்கும். ஆகவே பொறுமையாக இருப்பதைக் கற்றுக் கொண்டால், கட்டுப்பாடும் தானாக வரும் மற்றும் இது ஒரு அருமையான குழந்தை பராமரிப்பு கருவியாகும். ஆகவே பொறுமையை கற்றுக் கொள்வதற்காக தள்ளிப் போட்டிருப்பதாக சொல்லலாம்.

இளமையை அனுபவிக்க...

இளமையை அனுபவிக்க...

20-29 வயதுகளில் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டால், அது வாழ்க்கையை பெருமளவு மாற்றிவிடும். இயற்கையாகவே இளைஞர்கள் அனுபவிக்கும் வார இறுதி நாள் சந்திப்புகள், பார்ட்டிகள், கொண்டாட்டங்கள் ஆகியவை இந்த வாழ்க்கை முறையில் இருக்காது. ஆனால் குழந்தைகளை பெற்றுக் கொண்டால், வாழ்க்கையிலிருந்து இந்த பக்கங்களை வேகமாக கிழித்து விட வேண்டும். இளம் பெற்றோராக இருக்கும் நீங்கள் உணர்வுபூர்வமாகவும், மனோரீதியாகவும் இணைந்து இருக்கும் நேரத்தில், இந்த உலகத்தை எதிர் கொண்டு புதிய மனிதர்களை சந்திப்பது மற்றும் புதிய சவால்களை எதிர் கொள்வதை விட, சற்று மனமுதிர்ச்சியடைந்த பெற்றோராக இருக்க நினைத்தால், இந்த சூழல்களை உங்கள் சுறுசுறுப்பான இளமையிலேயே இந்த சவால்களை நீங்கள் வெற்றிகரமாக சந்தித்திருப்பீர்கள்.

புரிதலுக்கு...

புரிதலுக்கு...

சாதாரணமாகவே நமது சமுதாயம் சீக்கிரமாகவே திருமணம் செய்வதையும், அது முடிந்தவுடனேயே குழந்தை பெறுவதையும் கட்டாயமாக்கி இருக்கிறது. இதன் விளைவாக, 40-45 வயதுகளுக்குள் மணமுறிவு ஏற்பட்டு விடுகிறது! ஆகவே துணையுடன் சேர்ந்து வாழும் போது, இருவரும் நன்கு புரிந்து கொண்டு, பின் பொறுமையாக குழந்தையைப் பெற்றுக் கொள்ள போவதாகவும் கூறலாம்.

ஆன்மாவின் பயணம்

ஆன்மாவின் பயணம்

சில பேர், தாங்கள் ஏன் பிறந்தோம், எதை நோக்கி செல்கிறோம், எதை நோக்கி செல்ல வேண்டும், எது நமக்கு தேவையானது என்பதை மிகவும் தாமதமாகவே தேடத் துவங்குவார்கள்! அப்படி தேடலை தாமதமாக தொடங்குபவர்கள் மற்றும் வாழ்க்கையை இன்னும் ஆழமாக சென்று ரசிக்க விரும்புபவர்கள், தங்களுடன் ஒரு புதிய மனிதரை (குழந்தை) அழைத்துச் செல்வதற்கு இன்னும் சில நாட்கள்/ஆண்டுகள் தேவைப்படும். அதேப்போல, உங்களுக்கும், உங்கள் துணைக்கும் வாழ்க்கையைப் பற்றி ஒரு புரிதல் ஏற்பட்டு, குடும்பம் என்ற அமைப்பை ஸ்திரப்படுத்துவதற்கு, குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவது நல்ல விஷயம் தான்.

தொழில் முன்னேற்றம்

தொழில் முன்னேற்றம்

இதுவரை செய்து கொண்டிருக்கும் வேலை அல்லது தொழிலை முதன்மைப்படுத்த எடுத்துக் கொண்டிருக்கும் பொறுப்புகளையடுத்து, குடும்பப் பொறுப்புகளை கவனித்துக் கொள்ளும் நேரமும் வரும். இவையிரண்டையும் சரியாக செய்து பழகுவதற்கு சில ஆண்டுகள் பிடித்த பின்னர், குழந்தைகளை பெற்றுக் கொள்வதற்கு சிலர் தயாராவார்கள். எனவே, யபராவது கேட்டால், பணியில் முன்னேற்றம் செய்து, நிறுவனத்தை வளர்த்து, அதன் பின்னர் வரும் நாட்களில் குழந்தைகளை பெற இருப்பதாகவும் சொல்லலாம்.

பயணங்கள்

பயணங்கள்

தோள்களுக்குப் பின்னால் ஒரு பையை மாட்டிக் கொண்டு பாக்கெட்டிலிருக்கும் சில்லறையை செலவு செய்வதற்கும், ஒரு குழந்தையை சுமந்து கொண்டு ஊர் சுற்றுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. குழந்தைகள் இல்லாத போது, நீங்களும் உங்களுடைய துணையும், இந்த உலகத்தை விரும்பும் நேரத்தில் சுற்றிப் பார்த்திட முடியும். எனவே உலகத்தை நன்கு சுற்றிப் பார்த்து விட்டு, குழந்தைகளை பெற்று, குடும்பத்தை உருவாக்க விரும்புவதாக சொல்லலாம்.

வீடு வாங்குதல்

வீடு வாங்குதல்

'வீட்டைக் கட்டிப்பார், கல்யாணத்தை செய்து பார்' என்னும் பழமொழி இன்றும் பலரை யோசிக்க வைக்கும். ஒரு குழந்தையைப் பெற்று, அவனை/அவளை ஒரே ஒரு படுக்கையறையுள்ள சிறிய வீட்டில் வளர்ப்பது மட்டும் வாழ்க்கையில்லை. புதிதாக கல்யாணம் செய்து கொண்ட பிறகு, கடினமாக வேலை செய்து தம் பெயரை காப்பாற்றுவது தான் நிதர்சனமான வாழ்க்கையின் சவாலாக இருக்கும். உண்மையில், குழந்தை பெற்றுக் கொள்வதை தாமதப்படுத்துவதற்கு சொல்ல வேண்டிய மிகவும் யதார்த்தமான காரணமாக ஒரு பெரிய வீட்டை, தோட்டம் மற்றும் நீச்சல் குளத்துடன் கட்டும் ஆசை இருப்பதாகவும் சொல்லலாம்.

படிப்பு

படிப்பு

இப்போதைய நிதி நிலைமைகளைப் பார்க்கும் போது, நாளுக்கு நாள் நமது திறமையை அதிகரிக்கும் மேற்படிப்புகள் அவசியமானவையாக உள்ளன. ஒரு குழந்தையைப் பெற்றுக் கொண்டு, அவனுக்கு வேண்டிய வேலைகளை செய்து கொண்டே, மிகவும் அவசியமான ஒரு பட்டப்படிப்பினை படிப்பது உண்மையில் ஒரு பைத்தியக்காரத்தனமான செயல் தான். இதில் குழந்தை அல்லது நீங்கள், இருவருள் யாராவது ஒருவர் கஷ்டப்படுவது நிச்சயம். எனவே படிப்பினை முடித்து விட்டு, அதன் பிறகு குழந்தை பெற விரும்புவதாக சொல்லலாம்.

நீங்கள் ஏன் குழந்தை பெறுவதை தாமதப்படுத்த நினைக்கிறீர்கள் என்பதற்கு சில ஏதாவதொரு அடிப்படையான காரணம் இருக்க வேண்டும் மற்றும் இது உங்களுடைய தனிப்பட்ட விருப்பமாகும். மேலும், இளமையில் பெற்றோராக ஆவதால், வெற்றிகரமான பெற்றோராக இருக்க முடியாதென்றோ அல்லது உருவம் மாறிவிடும் என்றோ சொல்லி விட முடியாது. எப்படியாயினும், திருமணத்திற்குப் பிறகு கர்ப்பமடைவதை தவிர்க்க வேண்டுமென நினைத்தால், மேற்கண்ட ஏதாவது ஒரு காரணத்தை பயன்படுத்திக் கொள்வது சிறந்ததாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion