Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
குழந்தைகள் எப்போது நிம்மதியாக தூங்குவார்கள் என்று தெரியுமா?
நீங்கள் பெற்றோர்கள் ஆகிவிட்டால் குழந்தைகளைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு அதிகமாகி விடும். அதிலும் புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கிருமிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளுவது மிக முக்கியம். குழந்தைங்களை கிர
நீங்கள் பெற்றோர்கள் ஆகிவிட்டால் குழந்தைகளைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு அதிகமாகி விடும். அதிலும் புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கிருமிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளுவது மிக முக்கியம். ஏனெனில் அவர்களுக்கு மிகவும் குறைவான நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கும் இதனால் அவர்கள் கிருமிகளினால் எளிதில் பாதிக்கப்பட்டுக் காய்ச்சல், உடல் நலக்குறைபாடு மற்றும் சில தேவையற்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகி விடும்.

குழந்தைங்களை கிருமிகளிடம் இருந்து பாதுகாத்து பத்திரமாக வைப்பதற்கு வீட்டின் சில இடங்களை சுத்தப்படுத்தி வைக்க வேண்டும். எனவே பிறந்த குழந்தைகள் இருக்கும் வீட்டினை எவ்வாறு சுத்தமாக வைக்க வேண்டும் என்று சில குறிப்புகள் உங்களுக்காக.

மூலை முடுக்குகள்
வீட்டின் மூலை முடுக்குகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள், கிருமிநாசினிகள் மற்றும் மருத்துவ பொருட்கள் மற்றும் மாத்திரைகளைக் குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வையுங்கள். தரைகள், அடுப்பறைகள், குளியலறை மற்றும் கழிப்பறை ஆகிய இடங்களைக் கிருமிநாசினியைப் பயன்படுத்தி கிருமிகள் இல்லாமல் சுத்தமாக வையுங்கள்.

காலணிகள்
உங்கள் காலணிகளில் பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் அதிக அளவில் இருக்கும் அவற்றை நீங்கள் வீட்டிற்குள் அணிந்து செல்லும் போது அவை குழந்தைகளைப் பாதிக்கக் கூடும். எனவே உங்கள் காலணிகளை வீட்டிற்கு வெளியே கழற்றிவிட்டுச் செல்லுவது நல்லது. அதே போல் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தாலும் அவர்களின் காலணிகளையும் வெளியே விடுமாறு சொல்லுங்கள்.

ஜன்னல்கள்
புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு இயற்கையான காற்று மிகவும் அவசியம் எனவே வீட்டின் ஜன்னல்களை எப்போதும் திறந்து வையுங்கள். குழந்தைகள் ஏசியில் தூங்குவதை விட இயற்கையான காற்றோட்டத்தில் தூங்கும் போது நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதுடன் உடல் ஆரோக்கியத்தையும் பெறுவார்கள்.

சமையலறை
உங்களின் சமையலறையைத் தினமும் கிருமிநாசினி பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். அத்துடன் மீன், கோழி மற்ற இறைச்சி போன்றவற்றைச் சமைத்த பிறகு பாக்டீரியாக்களை அகற்றுவதற்குக் கிருமிநாசினி பயன்படுத்திச் சுத்தப்படுத்துங்கள். மேலும் சமையலறை தரையைத் துடைப்பம் கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள்.

குளியலறை
குளியலறை மற்றும் கழிப்பறை இவை இரண்டும் அதிகமான கிருமிகள் வசிக்கும் இடமாகும். எனவே குளியலறை மற்றும் கழிப்பறையின் எல்லா முலை முடுக்குகளையும் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். அத்துடன் காலணிகளை அணிந்து பாத்ரூம் பயன்படுத்துவது சிறந்தது.

கையுறை
நீங்கள் எப்போது எல்லாம் வீட்டில் உள்ள சாமான்கள், பொருட்கள் மற்றும் பாத்ரூம்களை சுத்தம் படுத்துகிறீர்களோ கண்டிப்பாக கைகளில் கையுறை அணிய வேண்டும். ஏனெனில் மகப்பேற்றுக்குப் பின்பு உங்கள் உடல் மிகவும் மென்மையானதாக இருக்கும் எனவே சரும எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. அத்துடன் நீங்கள் உங்கள் கைகளைச் சரியாகக் கழுவாமல் இருக்கும் போது குழந்தைகளைப் பாதிக்கக்கூடும். ஆதலால் கையுறைகளை அணிந்து கொள்ளுங்கள்.

குழந்தைகள்
பிறந்த குழந்தைகள் இருக்கும் இடங்களும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். குழந்தைகள் இருக்கும் இடங்கள் மற்றும் குழந்தைகளின் உடைகளை டெட்டோல் பயன்படுத்தி அலசுங்கள். குழந்தைகள் விளையாடும் பொம்மைகளும் சுத்தமாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications