Latest Updates
-
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம்
உண்ணி கடித்துவிட்டால் என்ன முதலுதவி செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?
குழந்தைகளை உண்ணி கடித்து விட்டால் அதற்கு முதலுதவியாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி விளக்கமாகப் பார்க்கலாம் வாங்க.
உண்ணி என்பது ஒரு சிறிய வகை பூச்சி. இந்த பூச்சி மனித சருமத்தில் ஒட்டிக் கொண்டு இரத்தத்தை உறிய ஆரம்பித்து விடும். இவை அராக்னட்ஸ் வகுப்பைச் சார்ந்தவை. பூச்சிகள், சிலந்திகள் மற்றும் தேள் போலவே இவற்றிலும் சில அம்சங்கள் காணப்படுகின்றன.

இந்த உண்ணிகள் பொதுவாக நாய்களில் காணப்படும். இந்த உண்ணிகள் கடித்தால் பெரிய பாதிப்பு எதுவும் இல்லாவிட்டாலும் மருத்துவ சிகிச்சை பெறுவது முக்கியம்.

ஆபத்தை விளைவிக்கும் உண்ணிகள்
மரத்தில் இருக்கும் உண்ணிகள், மான் உண்ணிகள் போன்றவை தீவிர நோய்களை ஏற்படுத்தும் கிருமிகளை நம் உடம்பினுள் செலுத்தி மேசமான விளைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

தாக்கும் நோய்கள்
நீங்கள் இந்த உண்ணி கடித்தலுக்கு சரியான சிகச்சை செய்யாவிட்டால் லைம் நோய், ராக்கி மவுண்டன் ஸ்பாட் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும். ஏனெனில் இவை நோய்களை எடுத்துட்டு வரும் பூச்சிகள். அதிலும் மான் உண்ணிகள் கடித்தால் கடித்த இடமே தெரியாது. சிறுதளவு பென்சில் புள்ளி போன்று தான் தெரியும். கண்டறிவதும் சிரமமாக இருக்கும். ஆனால் மற்ற உண்ணிகளில் கடித்தல் நன்றாக சிவந்து போய் வெளியே தெரிய ஆரம்பித்து விடும்.

குழந்தைகளை கடித்தல்
இந்த உண்ணிகள் பொதுவாக குழந்தைகளை கடிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் அவர்கள் தான் செல்லப் பிராணிகளுடன் விளையாடுவது, செடிக்குள், மரத்தின் அருகில் செல்வது போன்று இருப்பார்கள். குழந்தைகளை கடித்தால் அவர்களால் இதை தாங்க முடியாது. மேலும் அவர்களுக்கு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது என்பதால் கவனமாக அதற்கு உடனே சிகிச்சை மோற்கொள்வது நல்லது.

கடித்த இடத்தை அடையாளம் காண
உண்ணிகள் கடித்த உடன் அதை உடனேயே கண்டறிந்து விட்டால் மருத்துவ உதவி எளிதாக இருக்கும். இதனால் நோய்கள் தாக்குவதை தவிர்க்க இயலும்.

உண்ணியின் சுழற்சி
முதலில் உண்ணி யின் தோற்றத்தை பாருங்கள். ஏனெனில் நிறைய வகை உண்ணிகள் இருக்கின்றன. அதன் வாழ்க்கை சுழற்சி அதைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வது நல்லது.
இந்த உண்ணிகள் வளர நான்கு நிலைகள் உள்ளன. முட்டை, லார்வாக்கள், நிம்ப் மற்றும் இறுதியில் உண்ணிகளாக மாறும். இதன் வாழ்க்கை சுழற்சியின் ஒவ்வொரு படிநிலையிலும் மேற்புற தோலை மாற்றிக் கொண்ளே இருக்கும். கிட்டத்தட்ட டஜன் கணக்கான உண்ணிகள் இருந்தாலும், அவை அனைத்தும் ஒரே மாதிரியாகத் தோன்றுவது தான் அதிசயம்.

கண்டறிவது கடினம்
எந்த உண்ணிகள் நம்மளை கடித்துள்ளது என்பதை கண்டறிவது கடினம் தான். ஏனெனில் அது மெதுவாக வலிக்காமல் நம் தோலை உள் துளைத்து செல்லும். அப்படியே இரத்தத்தை உறிஞ்சி சாப்பிட ஆரம்பித்து விடும். அதற்குள் கண்டறிந்து விட்டால் நல்லது. அதன் தலை நம் தோலுனுள் துளைத்திருக்கும். அதைச் சுற்றிய தோல் பகுதிகள் சிவந்து போய் எரிச்சல் ஊட்ட ஆரம்பித்து விடும். நீங்கள் இதைக் கண்டு கொள்ளாமல் நீண்ட காலம் உணவளித்து வந்தால் கடிபட்ட இடம் பெரிதாக தென்படும்.
மற்ற பூச்சிக்கடி போன்று இந்த உண்ணிகள் கடி வீங்கி திரவம் வைக்காது.
உண்ணி பெரும்பாலும் உச்சந்தலையில், இடுப்பு, கால்கள் மற்றும் கழுத்தின் பின்புறம் கடிக்கும்.
மற்ற பூச்சிகள் ஒரு முறை கடித்தால் உண்ணிகள் பல முறை கடிக்கும்.
பெரிய அளவிலான சரும வடுக்கள், சிவந்து போதல் இந்த உண்ணிகள் கடித்திருப்பதன் அறிகுறிகளாகும்.

உண்ணிகளால் பரவும் நோய்கள்
இவை குழந்தைகளை தாக்கி நோய்களை பரப்புகிறது.
• ராக்கி மவுண்டன் ஸ்பாட் காய்ச்சல்
• துலரேமியா
• எர்லிச்சியோசிஸ்
• கொலராடோ டிக் காய்ச்சல்
• லைம் நோய்
• செளதர்ன் டிக் அசோசியேட்டட் ராஷ் நோய் (STARI)



Click it and Unblock the Notifications