Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
குளிக்க வெக்கறப்போ ஏன் குழந்த அழுகுதுங்குற உண்மை தெரியுமா? தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க...
குழந்தை பருவம் என்பது ஒரு சந்தோஷமான தருணமாகும். குழந்தைகள் தங்கள் மொழியை அழுகையின் மூலமே தெரிவிப்பார்கள். சாப்பிடும் போது, குளிக்கும் போது இப்படி எது செய்தாலும் அவர்களின் அழுகை தான் அங்கு மொழியாக இருக
குழந்தை பருவம் என்பது ஒரு சந்தோஷமான தருணமாகும். குழந்தைகள் தங்கள் மொழியை அழுகையின் மூலமே தெரிவிப்பார்கள். சாப்பிடும் போது, குளிக்கும் போது இப்படி எது செய்தாலும் அவர்களின் அழுகை தான் அங்கு மொழியாக இருக்கும். குழந்தையை குளிப்பாட்டுவதற்குள் அம்மாக்கள் படும் பாடு பெரும் பாடு தான். ஏனென்றால் குளிக்கும் போது அழுது கொண்டே தான் இருப்பார்கள் இப்படி ஏன் செய்கிறார்கள் என்று தெரியுமா, வாங்க தெரிஞ்சுக்கலாம். கீழ்க்கண்ட காரணிகளை தவிர்த்து உங்கள் குழந்தையை சந்தோஷமாக குளிக்க வையுங்கள்.

கண்களில் தண்ணீர் படும் போது
கண்களில் தண்ணீர் படும் போது குழந்தைகளுக்கு கண்களை மூடத் தெரிவதில்லை. எனவே தொடர்ந்து கண்களில் தண்ணீர் படும் போது குழந்தை அழத் தொடங்குகிறது.
என்ன செய்ய வேண்டும்?
எனவே குளிக்கும் போது ஹெட் விசர் பயன்படுத்தி கண்களை மறைத்து கொள்ளலாம். இதனால் தண்ணீர் கண்களில் படாமல் குளிக்க வைக்கலாம்.

புண்களில் எரிச்சல்
சரும அலற்சி அல்லது புண்கள் இருந்தால் தண்ணீர் அல்லது சோப்பு போடும் போது எரிய ஆரம்பிக்கும். இதனாலும் குழந்தைகள் அழுவார்கள்.
என்ன செய்ய வேண்டும்?
எனவே புண்கள் மீது சோப்பு தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ளலாம். அங்கே போடுவதை தவிருங்கள்.

தண்ணீரின் வெப்பநிலை
பிறந்த குழந்தைக்கு அதிக வெப்பம் மற்றும் குளிரை தாங்க முடியாது. சருமம் சென்ஸ்டிவ் ஆக இருக்கும். எனவே குளிக்கின்ற நீர் 37 டிகிரி செல்சியஸ்ல இருந்தால் போதும்.
என்ன செய்ய வேண்டும்
எனவே குளிப்பாட்டும் முன் தண்ணீரின் வெப்பநிலையை கைகளில் தொட்டோ அல்லது தெர்மோமீட்டர் கொண்டோ பார்த்து கொள்ளுங்கள். குழந்தையை மெதுவாக தண்ணீரில் இறக்கி குளிப்பாட்டுங்கள்.

பசி
பசியும் குழந்தை அழுவதற்கு காரணமாக அமைகிறது. வயிறு நிறையாத போது குளிப்பாட்டினால் குழந்தைகள் அழ வாய்ப்புள்ளது.
என்ன செய்ய வேண்டும்
எனவே குளிப்பதற்கு 30-45 நிமிடங்களுக்கு முன்னாடியே குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்து விடுங்கள். அப்பொழுது தான் அவர்களுக்கு சீரணிக்கும்.

சோப்பு பயம்
உங்கள் குழந்தையின் சருமத்திற்கு தகுந்த சோப்பை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள். சோப்பு கண்களில் படும் போதோ, சருமத்தில் படும் போதோ எரிச்சல் ஏற்பட்டால் குழந்தைகள் அழ ஆரம்பிக்கும்.
என்ன செய்ய வேண்டும்
குழந்தை நல மருத்துவரை அணுகி உங்கள் குழந்தைக்கு தகுந்த சோப்பை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். குழந்தைகளுக்கான பிரத்யேக சோப்பு மற்றும் சாம்புவை மட்டும் பயன்படுத்தவும். பெரியவர்களுக்கு பயன்படுத்தும் சோப்புகள் வேண்டாம்.

சோர்வாக இருத்தல்
குழந்தைகள் சோர்வாக இருந்தால் தூங்க தான் நினைப்பார்கள். அந்த சமயங்களில் நீங்கள் குளிப்பாட்டும் போது அழத் தொடங்குவார்கள். குறிப்பாக இரவில் படுப்பதற்கு முன் குளிக்கும் சமயங்களில் இது ஏற்படும்.
என்ன செய்ய வேண்டும்
எனவே படுப்பதற்கு சில மணி நேரம் முன்பாகவே குழந்தையை குளிக்க வைத்து விடுங்கள். தூங்கிற பிள்ளையை எழுப்பி குளிப்பாட்ட வேண்டாம். இதனால் அவர்களின் தூக்கமும் பாதிக்கப்படாது.

வேகமாக தண்ணீர் ஊற்றுதல்
பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது ரெம்ப கஷ்டமானது. குளிக்கும் போது அவர்களுக்கு செளகரியமாக இருந்தால் மட்டுமே அழாமல் இருப்பார்கள்.
என்ன செய்ய வேண்டும்
குழந்தைகளுக்கு மட மடவென்று தண்ணீர் ஊற்றாமல் பஞ்சு மூலம் ஒற்றி எடுக்கலாம். மெதுவான குளிப்பாட்டல் குழந்தைக்கு செளகரியமாக இருக்கும்.

குளியலறை செளகரியம்
குளியலறையில் இருக்கும் வெப்பநிலை, அழுக்கு, தூசி போன்றவை குழந்தைக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அதனால் குழந்தை குளிப்பதற்கு அழக்கூடும்.
என்ன செய்ய வேண்டும்
எனவே குளியலறை வெதுவெதுப்பான சூழலிலும், அழுக்கு தூசிகள் இல்லாமல் தூய்மையாக இருக்க வேண்டும். குழந்தையை தூக்குவதற்கு முன் உங்கள் கைகள் வெதுவெதுப்பாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.
குழந்தையை குளிக்க வைக்கும் போது பாதுகாப்பாக கவனமுடனும் செயல்பட வேண்டும். மேற்கண்ட டிப்ஸ்கள் மூலம் உங்கள் குழந்தைகளை சந்தோஷமாக குளிப்பாட்டுங்கள்.



Click it and Unblock the Notifications