Latest Updates
-
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
ஒரு இரவில் இந்த தாய் செய்த காரியத்தால் இரட்டை குழந்தைகளுக்கு 2 அப்பா..! இப்படியுமா நடக்கும்..!
ஆணும் பெண்ணும் இந்த உலகில் ஒரு உயிரை ஜீவிக்கும் போது அதனால் அடையும் சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. இதுவே இரட்டை குழந்தையாக இருந்தால் அவ்வளவு தான். நிச்சயம் மட்டற்ற மகிழ்ச்சி இருவருக்கும் உண்டாகும். ஆனால், இங்கு ஒரு தம்பதியினருக்கு இரட்டை குழந்தை பிறந்ததில் தான் இவர்கள் இருவரின் வாழ்க்கையிலும் மிக பெரிய இடி விழுந்துள்ளது.

இரட்டை குழந்தையாக பிறந்த குழந்தைகளுக்கு 2 அப்பா என்பது தான் இதில் தூக்கி வாரி போடும் விஷயமே. அது எப்படி இரட்டை குழந்தைகளின் அப்பா வெவ்வேறாக இருக்க முடியும்..? என்பது தான் இன்று சீனாவை உலுக்கிய செய்தி. ஒரே இரவில் இரட்டை குழந்தைகளுக்கு நேர்ந்த இப்படி ஒரு விஷயத்தை நாம் யாரும் இது வரை கேட்டிருக்க மாட்டோம்.
எப்படி இரட்டை குழந்தைகளின் அப்பா 2 பேராக உள்ளனர்? எதனால் இப்படி ஒரு அதிர்ச்சி நிகழ்வு ஏற்பட்டது? இதற்கான உண்மை காரணம் என்ன? போன்ற பல தகவல்களை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

யார் இந்த தம்பதிகள்?
சீனாவை சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இரட்டை குழந்தை பிறந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
சாதாரண இரட்டை குழந்தையாக இருந்தால் இன்று பெரிய அளவில் பேச்சு ஏற்பட்டிருக்காது. இந்த குழந்தைகளின் DNA மாறுபட்டிருப்பது தான் தற்போதைய பிரச்சினையே!

மாறுபாடுகள்...
பொதுவாக இரட்டை குழந்தைகள் என்றால் முகம், கை, கால்கள் எல்லாம் பெரும்பாலும் ஒரே மாதிரியாக தான் இருக்கும்.
ஆனால், இந்த சீன குழந்தைகளின் கண்கள், வாய், முக அமைப்பு, மூக்கு எல்லாமே மாறுபட்டிருந்தது. எனினும், இவர்களின் தந்தை இதை பெரிதாக ஆரம்பத்தில் கண்டு கொள்ளவில்லை.

அதிர்ச்சி!
இந்த குழந்தைகளின் தாய் எதற்ச்சையாக DNA டெஸ்ட் எடுத்த போது தான் மருத்துவமனையே அதிர்ந்துள்ளது. காரணம், இரட்டை குழந்தைகளின் DNA இரண்டும் முற்றிலுமாக வேறுபட்டிருந்தது.
ஒரு குழந்தைக்கு அந்த பெண்ணின் கணவரின் DNA -வும், மறு குழந்தைக்கு வேறு ஒருவரது DNA-வும் இருந்தது.

ஒரு இரவு..!
இப்படி ஒரு அதிர்ச்சியை அந்த பெண்ணே எதிர்பார்த்து இருக்க மாட்டார். இந்த நிகழ்வை பற்றி அந்த பெண்ணிடம் கேட்டதற்கு, அவர் தனது அலுவலகத்தில் பணி புரியும் ஒருவருடன் ஒரே ஒரு முறை உடலுறவு கொண்டதாக கூறியுள்ளார். இதனால் தான் இப்படி இரு குழந்தைகளுக்கு அப்பா மாறி உள்ளனர்.

2 வேறு விந்தணுக்கள்..!
இப்படி ஒரே பிரசவத்தில் பிறக்கும் இரட்டை குழந்தைகளுக்கு எப்படி வெவ்வேறு DNA இருக்க முடியும் என்பதற்கான பதில் இதோ. அதாவது, அப்பெண்ணின் கருமுட்டையில் 2 வேறு விந்தணுக்கள் ஒரே மாதவிடாய் சுழற்சியின் போது உள் நுழைந்தால் இப்படிப்பட்ட நிலை உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஒரே மாதத்தில் 2 ஆண்களுடன் உடலுறவு வைத்து கொண்டதால் இந்த நிலை அந்த பெண்ணிற்கு உண்டாகி உள்ளது.

கருமுட்டை
2 விந்தணுக்களில் இருந்து 2 குழந்தைகள் உருவாகி இருக்கும். ஆனால், இரண்டும் வெவ்வேறு ஆண்களின் விந்தணு என்பதால் இந்த குழந்தைகளின் DNA மாற்றம் பெற்றுள்ளது. இதை மருத்துவ துறையில் "heteropaternal superfecundation" என்று அழைப்பார்களாம்.

மருத்துவ வரலாறு!
இதுவரை இப்படி ஒரு அதிசயத்தை மருத்துவ வரலாற்றிலே கண்டதில்லை என சீன மருத்துவர்கள் அதிர்ந்துள்ளனர். இரட்டையாக குழந்தை பிறந்தால் அவர்களின் DNA ஒரே மாதிரி இருப்பது தான் வழக்கம்.
ஆனால், இம்முறை முற்றிலும் மாறுபட்டுள்ளது. இதை மருத்துவர்களின் டோனில் சொல்ல வேண்டுமென்றால் "இட் ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்".

சமூக வலைத்தளங்கள்
இப்படி ஒரு செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும், மருத்துவ துறையிலும் இதை பற்றிய ஆய்வுகள் சில நடந்து வருகின்றன.
ஒரே DNA டெஸ்டில் இப்படி ஒரு ட்விஸ்ட் வரும் என்று யாருமே எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். இதை படமாக எடுத்து விடலாம் என சமூக வலைத்தளங்களில் சிலர் கிண்டல் செய்தும் வருகின்றனர்.
இப்படி ஒரு சம்பவத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை, கமெண்ட்டில் பதிவு செய்யுங்கள்...



Click it and Unblock the Notifications