Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
குழந்தைகளை படுக்க வைக்கும் இடத்தை சுற்றி புதினா இலைகளை போட்டு வைக்க வேண்டும்... ஏன் தெரியுமா?
ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகள் வளர்ப்பது பற்றி அடிப்படையாகத் தெரிந்து கொள்ள விஷயங்கள் பற்றி இங்கே விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
குழந்தை வளர்ப்பு என்பது ஆகச்சிறந்த கலைகளுள் ஒன்று. நாம் வளர்க்கும் வளர்ப்பில் தான் எதிர்கால சமூகத்தை பிரதிபலிக்கப் போகும் என்பதை நாம் முதலில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

வீட்டில் குழந்தைகளைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்ளும் பல பெற்றோர்களுக்கும் இது தெரியும். குறிப்பாக குழந்தைகளின் மொழிகளைப் புரிந்து கொண்டு அவர்களுடைய பிரச்சினைகளை அறிந்து சரிசெய்வது உண்மையாகவே சற்று கடினமான விஷயம் தான்.

செய்ய வேண்டியது
குழந்தைகளுக்கு வருகின்ற சின்ன சின்ன பிரச்சினைகளுக்கும் தீர்வு இல்லாமல் போய்விடாது. நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், என்ன மாதிரியான பிரச்சினைகள் ஏற்படும், அதற்கான முதலுதவி வழிமுறைகள் என்ன என்பது பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும். வீட்டில் சின்ன குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களுக்குப் பயன்படும் வகையிலான எளிமையான குறிப்புகள் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.

மலச்சிக்கல்
குழந்தைகளுக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படும். அது நாம் கொடுக்கும் உணவினாலும் அதன் ஜீரண வேகத்தினாலும் தான் ஏற்படுகிறது. அப்படி மலச்சிக்கல் ஏற்பட்டால் பயப்பட வேண்டாம்.
பசலைக்கீரையை பொடிப் பொடியாக நறுக்கி, சிறிது உப்பு சீரகம் மட்டும் சேர்த்து வேகவைத்து, அதை குழைத்த சாதத்துடன் சேர்த்து சாப்பிடக் கொடுங்கள்.

தேங்காய் பால்
வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு தேவையற்ற கண்ட ஸ்நாக்ஸ்களையும் கொடுப்பதை விட, இளசான தேங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி சாப்பிடக் கொடுக்கலாம். மென்று சாப்பிடத் தெரியாத குழந்தைகளுக்கு தேங்காயைப் பாலெடுத்துக் கொடுக்கலாம். பசும்பாலை விடவும் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது தேங்காய்ப பால்.

வீட்டை சுத்தம் செய்தல்
சின்ன குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு வீட்டை கூட்டிப் பெருக்குவதோ சுத்தம் செய்வதோ கூடாது. பெருக்கும் போது உண்டாகும் தூசியால் குழந்தைகளுக்கு தும்மல், இழுப்பு, ஆஸ்துமா நோய் கூட வர வாய்ப்பு உண்டு.

பினாயில்/டெட்டால்
வீட்டில் சின்ன குழந்தைகள் இருந்தால் நிச்சயம் அது அடிக்கடி சிறுநீர் கழிப்பது, வாந்தி எடுப்பது போன்றவற்றைச் செய்து கொண்டு தான் இருக்கும். அதனால் எப்போதுமே ஒரு சிறிய ஸ்பிரே பாட்டிலில் சிறிதளவு பினாயில் அல்லது டெட்டாலை ஊற்றி சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்படும்போது, அப்படியே தெளித்து சுத்தமான துணி கொண்டு துடைத்துவிடலாம். வாசனையாகவும் இருக்கும். குழந்தைகளை கிருமித் தொற்றுக்களில் இருந்தும் பாதுகாக்க முடியும்.

உணவை தவிர்த்தல்
பொதுவாக குழந்தைகளை வெளியில் அழைத்துச் சென்று திரும்பினால் அந்த சோர்வில் குழந்தைகள் சாப்பிடாமல் தூங்கிவிடுவார்கள். அதற்கான நாமும் போகும் இடத்தில் எதையாவது கொரிக்க வாங்கிக் கொடுத்து, திருப்திப் பட்டுக்கொள்வோம். அதனால் மாலை நேரங்களில் வெளியில் சென்றால் கட்டாயம் பாக்ஸில் குழந்தைக்கான உணவை எடுத்துச் செல்லுங்கள். வழியிலேயே திரும்ப வருவதற்குள் சாப்பிடக் கொடுத்துவிடலாம். குழந்தை சாப்பிடாமல் உறங்குவதைத் தவிர்த்துவிட முடியும்.

கால்சியம்
பொதுவாக குழந்தைகளுக்கு எலும்பு மற்றும் பற்கள் வளரும் பருவம் என்பதால் இயல்பாகவே கால்சியம் அதிகமாகத் தேவைப்படும். அதனால் கால்சியம்நிறைந்த உணவுகளைக் கொடுக்க வேண்டும்.
சாஃப்ட் ட்ரிங்க்ஸ் குழந்தைகள் விரும்பி குடிக்கிறார்கள் என்பதற்கான வாங்கிக் கொடுக்காதீர்கள். ஏனென்றால் இதில் உள்ள பாஸ்பேட் சத்தானது உடலில் கால்சியம் சத்தை கிரகிக்கும் ஆற்றலையும் திறனையும் குறைக்கிறது.

வசம்பு
வசம்பை கிராமங்களில் குழந்தை வளர்ப்பான் என்ற பெயரே உண்டு. குழந்தைகளை படுக்க வைக்கும் இடத்தில் குழந்தையின் தலைமாட்டில் சிறிய துண்டு வசம்பை வைத்துவிட்டால் குழந்தைகளை எறும்பு, கொசு மற்றும் பிற பூச்சிகள் எதுவும் குழந்தைகளை தொந்தரவு செய்யாது.

பால்
பாலில் தேன் சேர்த்து வளரும் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் அவர்களுடைய உடல் வளர்ச்சி சீராகவும் அமையும்.

புதினா இலைகள்
கைக்குழந்தைகள் தூங்குகின்ற பொழுது பகலில் ஈ தொல்லைகள் மிகவும் பெரும் அவதியாக இருக்கும். குழந்தையின் படுக்கையைச் சுற்றிலும் சில புதினா இலைகளை கசக்கிப் போட்டு வைத்தால் ஈக்கள் அற்த பக்கம் அண்டாது.

பேரிச்சை பழம்
குழந்தைகளுக்கு தினமும் 4 முதல் 5 பேரிச்சம் பழமும் அதோடு ஒரு கிளாஸ் பால் அல்லது தண்ணீர் குடிக்கக் கொடுத்தால் மூளை பலப்படும். மகோதிடமும் அதிகரிக்கும்.

நகம் வெட்டுதல்
குழந்தைகளுக்கு நகம் வெட்டுவதற்கு முன் சோப்பினால் நன்கு கைகளைக் கழுவி விட வேண்டும். கைகளை நன்கு சுத்தம் செய்த பின்புதான் நகம் வெட்ட வேண்டும். அப்போது வெட்டுவது எளிதாகவும் இருக்கும். குழந்தைக்கு வலிக்கவும் செய்யாது.

காது வலி
குழந்தைகள் அழும்போது காதின் பக்கமாக கையைக் கொண்டு போய் வைத்து அழுகிறதென்றால், அது காது வலியாக இருக்கக் கூடும். ஏனெனில் குழந்தைகளை குளிப்பாட்டும் போது தண்ணீர், சோப்பு நுரை ஆகியவை உள்ளே செல்ல வாய்ப்புண்டு. அதனால் காதுவலி உண்டாகலாம். அதை புரிந்து கொண்டு காதுக்கு ட்ராப்ஸ் விடுங்கள். காதுக்குள் சீழ் பிடித்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அது மூளைக்குச் சென்று மூளை வளர்ச்சியையும் பாதிக்கும்.

தொண்டைப் புண்
நிறைய குழந்தைகளுக்கு அடிக்கடி தொண்டை வலி ஏற்படுவதுண்டு. அதற்கு மிக முக்கிய காரணம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் தான். வீட்டில் நாய், பூனை, பறவைகள் ஏதேனும் வளர்ப்பதால் தெண்டைப்புண் தொற்று குழந்தைகளுக்கு வரும் வாய்ப்புண்டு என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். அதனால் வளர்ப்பு பிராணிகளை மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டுங்கள்.

மலம் கழித்தல்
குழந்தைகள் வழக்கத்துக்கு மாறாக அதிக முறை மலம் கழித்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். வயிற்றுப் போக்கு ஏற்பட்டாலும் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைய ஆரம்பிக்கும்.

தடுப்பூசி
குழந்தைகளுக்கு அடிக்கடி வருகிற பிரச்சினைகள் ஏதாவது இருந்தால் மருத்துவ ஆலோசனைப் படி மருந்துகள் வைத்திருப்பது நல்லது. குறைப்பிரசவம் மற்றும் எடை குறைவாக பிறந்த குழந்தைகளுக்கு ரத்தத்தில் கிருமித் தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கும் அதேபோல் போட வேண்டிய தடுப்பூசி சரியான நேரங்களில் போடுதல் அவசியம்.

சளித்தொல்லை
சாதாரண சளித்தொல்லை ஏற்பட்ட குழந்தைகளுக்கு மூன்று நாட்களில் காது வலியும் சேர்ந்து வரும் வாய்ப்புண்டு. எந்த அறிகுறியும் இல்லாமல் குழந்தை அழுதபடியே இருக்கும். வயிறு போன்ற பகுதிகளைத் தொட்டுப் பார்க்கும்போது அதிகமாகக் கத்த ஆரம்பிக்கும். 6 மாதங்கள் நிறைவடைந்த பின்னர் தான் வட்டு உணவை பழக்க ஆரம்பிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications











