புதிதாக பெற்றோரானவர்கள் கவலைப்படும் 7 பொதுவான விஷயங்கள்!!!

By Batri Krishnan

குழந்தைகள் மிகவும் அற்புதமானவர்கள் மற்றும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். குழந்தைகள் அன்பு கலந்த பாதுகாப்புடன் வளர்க்கப்பட வேண்டியவர்கள். ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய குழந்தைகளை எப்பொழுதும் தனியே விட்டுச் செல்லக் கூடாது. இது மிகவும் முக்கியம். இந்த விஷயத்தை ஒவ்வொரு பெற்றோரும் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தை வளர்ப்பில் முதல் 12 மாதங்கள் மிகவும் முக்கியமானது. ஆகவே புதிய பெற்றோர்கள் இந்த முதல் 12 மாதங்கள் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த 12 மாதங்களில் தான், குழந்தைகள் சொந்தமாக தனது இரண்டு கால்களில் நிற்க, நடக்க மற்றும் தான் பார்க்கும் எதையும் விழுங்கிவிட கற்றுக் கொள்கின்றார்கள்.

ஒரு குழந்தை புதிதாக இந்த உலகத்திற்கு வரும் போது, புதிய பெற்றோர்கள் சில அற்ப விஷயங்களைப் பற்றி மிகவும் கவலைப்படுகின்றார்கள். உதாரணமாக குழந்தையின் தலை எப்பொழுது நிற்கும், மற்றும் குழந்தை எப்பொழுது தண்ணீர் குடிக்கும், போன்றவற்றைப் பற்றி அதிகம் கவலைப்படுகின்றார்கள்.

எனவே தமிழ் போல்ட் ஸ்கையாகிய நாங்கள் இது போன்ற புதிய பெற்றோர்கள் கவலைப்படும் சில பொதுவான விஷயங்கள் அல்லது கேள்விகளுக்கான பதில்களை இங்கே தருவதற்கு முயற்சி செய்துள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழந்தை எப்பொழுது குடிநீர் குடிக்கத் தொடங்கும்?

குழந்தை எப்பொழுது குடிநீர் குடிக்கத் தொடங்கும்?

குழந்தைகளுக்கு மெதுவாக திட உணவுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, அது மூன்றாவது அல்லது நான்காவது மாதத்தில் இருந்து குடிநீர் குடிக்கத் தொடங்கும். எனினும் பிறந்த ஐந்தாவது நாளில், சர்க்கரை கலந்த தண்ணீரை குழந்தைக்கு குடிக்கத் தருவார்கள்.

குழந்தையின் தலை எப்பொழுது நிற்கும்?

குழந்தையின் தலை எப்பொழுது நிற்கும்?

உங்கள் குழந்தை, உங்களை நோக்கி தன்னுடைய தலையை திருப்பி கவனிக்கத் தொடங்கும் போது, அவர்களின் தலை நிற்கத் தொடங்கும். இதை நன்றாக கவனித்து உணருங்கள். எனவே உங்களுடைய குழந்தை பிறந்து சில வாரங்கள் அல்லது ஒரு மாதமே ஆகின்றது எனில், உங்களின் குழந்தையை தூக்கும் பொழுது மிகவும் கவனமாக இருங்கள். ஏனெனில் அவர்களின் தலை அது வரை நிற்காது.

டயப்பர் புண்களை எவ்வாறு குணப்படுத்துவது?

டயப்பர் புண்களை எவ்வாறு குணப்படுத்துவது?

டயப்பர் புண்கள் என்பது பிறந்த ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை ஆகும். தயவு செய்து சோம்பேறித்தனப் படாமல் ஈரமான டயப்பர்களை மாற்றி விடுங்கள். ஏனெனில் அவைகளால் தான் புண்கள் உருவாகின்றன. இரண்டாவதாக, டயப்பர் புண்களை குணப்படுத்த ஒரு சிறந்த பாட்டி வைத்தியம் உள்ளது. டயப்பர் புண்கள் மற்றும் தொடைகளின் மீது தேங்காய் எண்ணெய்யை தடவுங்கள். இது ஒரு சிறந்த நிவாரணமாகப் பயன்படுகின்றது.

குழந்தை எப்பொழுது குப்பறப் படுக்கும்?

குழந்தை எப்பொழுது குப்பறப் படுக்கும்?

உங்களுடைய குழந்தை, மூன்றாவது மாத இறுதியில் அல்லது நான்காவது மாதத் தொடக்கத்தில், பக்கவாட்டில் திரும்புவதையும், தலையை சிறிது தூக்கி, படுக்கை முழுவதும் சுற்றி வருவதையும் நீங்கள் காணலாம். குழந்தைக்கு இரண்டாவது மாதம் ஆகும் பொழுது பெற்றோர்கள் அவர்களுடைய தலையை மிக மெதுவாக இடது புறத்தில் இருந்து வலது பக்கம் திருப்ப வேண்டும். இது குழந்தையின் தலை உருளையாக இருக்க உதவும்.

குழந்தைக்கு எப்பொழுது முட்டை கொடுக்கலாம்?

குழந்தைக்கு எப்பொழுது முட்டை கொடுக்கலாம்?

முட்டையில் உள்ள புரதச்சத்து, குழந்தையின் எலும்புகள் மற்றும் பற்களை வலுவடையச் செய்யும். குழந்தைக்கு சுமார் 12 மாதங்கள் இருக்கும் போது முட்டைகள் கொடுக்கலாம். மேலும் அவர்களுக்கு 9 மாதங்கள் இருக்கும் பொழுது, முட்டையின் மஞ்சள் கருவை கொடுக்கலாம்.

குழந்தையை குளிப்பாட்டுவதற்கான கால இடைவெளி எவ்வளவு?

குழந்தையை குளிப்பாட்டுவதற்கான கால இடைவெளி எவ்வளவு?

குழந்தையை தினமும் குளிப்பாட்ட வேண்டும். மேலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு குளிப்பாட்டலாம். குழந்தையை குளிப்பாட்டும் நீர் மிகவும் சூடாகவோ, குளிர்ந்தோ இருக்கக்கூடாது. வெதுவெதுப்பான நீரில் மட்டுமே குழந்தையை குளிப்பாட்ட வேண்டும். குழந்தையை தலைக்கு குளிப்பாட்டும் பொழுது, அதன் உடலை பாதாம் எண்ணெய், அல்லது விளக்கெண்ணெய் கொண்டு நன்றாக உருவி விட வேண்டும். ஏனெனில் இவ்வாறு செய்வது, குழந்தையின் தோல் மற்றும் எழும்பிற்கு மிகவும் நல்லது.

குழந்தை சொந்த கால்களில் நிற்க பெற்றோர்கள் எவ்வாறு உதவுவது?

குழந்தை சொந்த கால்களில் நிற்க பெற்றோர்கள் எவ்வாறு உதவுவது?

குழந்தைகளின் தலை நின்ற பிறகு, அவர்கள் குப்புற விழுந்த பிறகு, மிக விரைவாக நிற்கத் தொடங்கி விடுவார்கள். அவர்கள் நடக்க ஆரம்பித்த ஆரம்ப நாட்களில், அவர்களி மிக எளிதாக நடக்க உதவி செய்யுங்கள். அதன் பிறகு அவர்கள் தாங்களாகவே நடக்கத் தொடங்கி விடுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion