Latest Updates
-
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது!
கருவறையில் இருக்கும் குழந்தையின் வியப்பூட்டும் செயல்பாடுகள்!!!
உலகில் மிகவும் சிக்கலான இயக்கமுறை (Mechanism) என்று கருதப்படுவது பெண்ணின் கருவறையில் வளரும் சிசுவின் வளர்ச்சி தான். கருவும், விந்தும் இனைந்து உருவாகும் ஓர் சிசுவின் வளர்ச்சி இன்று வரை ஓர் பெரும் விந்தையாக தான் காணப்படுகிறது.
கருத்தரிக்க விரும்புவோர் உடலுறவுக் கொள்ள வேண்டிய நாட்கள்!!!
நூற்றாண்டு காலமாக பல ஆராய்ச்சியாளர்கள் செயற்கையாக விந்தும், சிசுவும் உருவாக்கி வளமான, ஆரோக்கியமான குழந்தையை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கருச்சிதைவு ஏற்பட்ட பிறகு கருத்தரிக்க விரும்புவோர் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை!!!
இவ்வளவு அதிசயமாக கருதப்படும் கருவறையில் வளரும் சிசுவின் வளர்ச்சின் போது, அந்த சிசுவின் சில செயல்பாடுகள் வியப்பூட்டும் வகையில் இருக்கிறது.....

ருசி அறிந்திக்கொள்ளும் திறன்
கருவறையில் இருக்கும் சிசு, தனது தாய் சாப்பிடுவதை ருசிக்கும் திறன் கொண்டிருக்குமாம்.

மன அழுத்தத்தை உணர்தல்
கருவில் வளரும் சிசுவினால், தனது தாயின் மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் உணர முடியுமாம். இது, சிசுவின் வளர்ச்சியை சற்று பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் தான் நமது முன்னோர்கள் புள்ளத்தாச்சிய சந்தோசமா வெச்சுக்கணும் என்று கூறினார்கள் போல.

முக பாவனைகள்
36வது வாரத்தில் இருந்து கருவில் வளரும் சிசுவானது முக பாவனைகள் செய்ய ஆரம்பிக்கிறது, சிரிப்பது, மூக்கு, கண், புருவம் போன்றவற்றை சுருக்குவது போன்ற பாவனைகள் செய்ய ஆரம்பிக்கும்.

சிசு அழும்
பிரசவமாக இருக்கும் இறுதி மூன்று மாத காலத்தின் போது (6-9 மாதங்கள்) சிசு அழவும் செய்யுமாம். ஆனால், அது மிகவும் அமைதியான சப்தமாக இருக்கும். இதை அல்ட்ராசவுண்ட் ரெகார்ட் செய்து கண்டறிந்துள்ளனர்.

நினைவுக் கொள்ளும் திறன்
இறுதி மூன்று மாத காலத்தில், கர்ப்பமாக இருக்கும் பெண்ணை சுற்றி இருப்பவர்கள் பேசுவதை நினைவில் கொள்ளும் ஆற்றல் சிசுவிற்கு உள்ளது.

மகாபாரத கதை உதாரணம்...
இது நாம் மகாபாரத கதையிலேயே கண்டது தான். அர்ஜுனன் தனது மனைவி கருவுற்றிருக்கும் போது, தனது மனைவியிடம் சக்ரவியூகத்தை எப்படி உடைத்துக்கொண்டு உள்செல்வது என்று கூறிக்கொண்டிருப்பான். ஆனால், அதை கருவில் இருக்கும் அபிமன்யு கேட்டுக் கொண்டிருந்தான், இதை கண்ணன் தடுத்து வெளிவரும் வியூகத்தை அறியவிடாமல் தடுத்துவிடுவான். அதனால் தான் அபிமன்யு குருஷேத்திரம் போரில் உள் சென்று வெளிவர இயலாமல் மடிந்ததற்கு காரணம்.

ஒரே அளவு கரு
எலி, முயல், கொரில்லா, நாய், பன்றி மற்றும் மனிதரின் கரு அளவு போன்றவை ஒரே அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

நுரையீரல்
கருவில் இருக்கும் சிசுவின் உடலில் கடைசியாக வளரும் பாகம் நுரையீரல் தான்.

உணரும் திறன்
குழந்தை பிறக்கும் முன்னர் கருவில் இருக்கும் போதே, பார்க்கும், கேட்கும் மற்றும் உணரும் திறன் கொண்டிருக்கும்.

பெரிய, சிறிய செல்
மனித உடலில் இருக்கும் பெரிய செல்லாக கருதப்படுவது பெண்ணின் கரு, மற்றும் சிறிய செல்லாக கருதப்படுவது ஆணின் விந்து.

சிறுநீர் கழிக்கும்
கர்ப காலத்தின் இரண்டாவது மூன்று மாத காலத்தின் போதே, சிசு கருப்பையில் சிறுநீர் கழிக்க ஆரம்பித்துவிடுமாம்.



Click it and Unblock the Notifications