Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
அழும் குழந்தையை சமாதானப்படுத்த 7 வழிகள்!!
புதிதாக தாய்மை அடைந்தவர்கள் அடையும் ஆனந்தத்தையும் பேரின்பத்தையும் கூற வார்த்தைகளே கிடையாது. இருப்பினும் அதில் பல கஷ்டங்களும் அடங்கியுள்ளது. அவைகளில் முக்கியமான ஒரு கஷ்டம் ஒன்று இருக்கிறது; அதாங்க பிஞ்சு குழந்தையின் நிற்காதா அழுகை. குழந்தை தொடர்ச்சியாக அழும் போது அது எதற்காக அழுகிறது, அதற்கு உடம்பிற்கு எதுவும் செய்கிறதா என்று தெரியாமல் நாம் தவித்து போவதுண்டு. இப்படி அழும் குழந்தைகள் உங்களிடம் ஒட்டி கொள்ளும் விதமாக இல்லாமல் போனால் அவ்வளவு தான்! அவர்களை கட்டுப்படுத்துவது லேசுப்பட்ட காரியம் அல்ல. இருப்பினும் ஒரு கட்டத்தில் குழந்தையை பார்த்துக் கொள்ள பழகி கொள்வீர்கள்.
அழுகை என்பது குழந்தை உங்களிடம் உரையாட ஒரு வழியாகும். குழந்தைகளால் அவர்கள் வேலைகளை அவர்களாலேயே செய்து கொள்ள இயலாது. அதனால் அவர்களின் பசி, வலி, கதகதப்பு, சொகுசு, பயம், அலுப்பு, வயிற்று வலி, தாகம், சுகவீனம், உணவினால் ஏற்படும் அலர்ஜி, வாய்வு, சோர்வு போன்றவைகளுக்கு உங்களை தான் நாடுவார்கள். ஏன், அழுக்கு நாப்கினை மாற்றவும் உங்களிடமிருந்து ஏதேனும் உணர்ச்சிகளை பெறுவதற்கும் கூட உங்களிடம் தான் வெளிப்படுத்துவார்கள். ஆனால் சில நேரங்களில் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது நமக்கு புரிவதே இல்லை. சரி ஒரு பெற்றோருக்கு அப்படியானால் தங்களின் குட்டி தேவதை என்ன சொல்ல வருகிறது என்பது புரியுமா? சில நேரம் உங்கள் குட்டியின் அழுகைக்கான காரணத்தை கண்டறிவது கஷ்டமாகத் தான் இருக்கும். அதுவும் குழந்தை பிறந்த புதிதில் ரொம்பவும் கஷ்டமாக இருக்கும்.
அழும் குழந்தையை சமாதனப்படுத்த பல வழிமுறைகள் உள்ளது; ஒரு பட்டியலே தயார் செய்து விடலாம். உங்கள் குழந்தையின் அழுகைக்கான காரணம் விளங்கவில்லை என்றால் கீழ் கூறிய சியா வழிமுறைகளை பின்பற்றி அழுகையை நிறுத்துங்கள் அல்லது அதன் கவனத்தை திசை திருப்புங்கள்.

ஒரு பாப் இசை கலைஞனாக மாறுங்கள்
அமைதியான தாளம் கொண்ட பாடல்கள் உங்கள் குழந்தைக்கு குஷியை ஏற்படுத்தி அதன் அழுகையை நிறுத்தும். இதை தவிர மற்றொரு வழியும் கூட உள்ளது; அழும் குழந்தையின் கவனத்தை திசை திருப்ப நீங்களே பாடவும் கூட செய்யலாம். இதமாக பேசி அல்லது "ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்" போன்ற இதமான தாலாட்டு பாடல்களை பாடி அவர்களை அமைதி படுத்தலாம்.

ஊசலாட்ட விளையாட்டு
குழந்தையின் அழுகையை நிறுத்த ஊசலாட்ட விளையாட்டில் அதனை ஈடுபடுத்துங்கள். அழுகையை நிறுத்தும் சிறந்த வழிகளில் இதுவும் ஒன்று. அப்படி ஈடுபடுத்தும் போது கொஞ்சம் கொஞ்சமாக அது தன் அழுகையை நிறுத்தி விளையாட்டை ரசிக்க துவங்கி விடும். குழந்தையை உங்கள் முட்டியின் மீது வைத்து, தலையை பிடித்துக் கொண்டு, மெதுவாக இடதிலிருந்து வலது பக்கத்திற்கு மாறி மாறி ஆட்டி விளையாடுங்கள். இல்லையென்றால் அதன் கவனத்தை திசை திருப்ப குழந்தைகளுக்கான உள்ள ஊஞ்சலில் அதனை அமர வைத்து மெதுவாக ஆட்டி விடுங்கள். முக்கியமாக பிறந்த புதிதில் இதனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

ஸ்ட்ரோலரை (இழுபெட்டி) பயன்படுத்துங்கள்
குழந்தையின் அழுகையை நிறுத்த வேறு என்ன செய்யலாம்? உங்கள் குழந்தையை ஒரு ஸ்ட்ரோலரில் படுக்க வைத்து வீட்டிற்கு உள்ளே வளம் வாருங்கள். அப்படி இல்லையென்றால் குழந்தையை அசைந்தாடும் பெட்டியில் அமர்த்தி முன்னும் பின்னுமாக மெதுவாக ஆட்டி விடுங்கள். இதனாலும் கூட அதன் அழுகை நின்று சாந்தமடையும்.

காரில் சுற்றி திரியுங்கள்
அழுகின்ற உங்கள் குழந்தையின் கவனத்தை திசை திருப்ப உங்கள் குழந்தையுடன் உங்கள் காரில் ஒரு ரவுண்டு செல்லுங்கள். உங்கள் குழந்தையை காரின் முன் இருக்கையில் அமர வைத்துக் கொண்டு ஒரே வேகத்தில், சத்தமில்லாமல் மெதுவாக காரை ஓட்டி செல்லுங்கள். அழுகின்ற உங்கள் குழந்தையை கண்டிப்பாக இது சமாதானப்படுத்தும்.

வெதுவெதுப்பான நீரில் குளிக்க வையுங்கள்
வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைத்தால் பல குழந்தைகள் குஷியாகி விடுவார்கள். குளிக்கின்ற நீரில் சிறிது வாசனை திரவியத்தை சேர்த்துக் கொண்டால் இன்னமும் கூட சொகுசாக உணரும். ஓடும் நீரின் சத்தம் குழந்தையின் அழுகையை நிறுத்தும் அதிசயத்தை நீங்கள் அறிவீர்களா? அழுகையை நிறுத்தி அதற்கு குஷியையும் ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

உஷ்ஷ்ஷ்ஷ்
யாருக்குமே குழந்தை அழுவதென்றால் பிடிப்பதில்லை. அதனை கட்டுப்படுத்த அதன் காதருகே 2 இன்ச் தூரத்தில் சென்று உஷ்ஷ்ஷ்ஷ் என்ற சத்தத்தை எழுப்பலாம். இந்த சத்தம் உங்கள் குழந்தையின் அழுகை சத்தத்தை விட அதிகமாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அதனால் உங்கள் சத்தத்தை உணர முடியாது.

உறிஞ்சி விளையாடுங்கள்
கிழுக்கு போன்ற குழந்தையை சமத்தப்படுத்தும் சாதனங்களை பயன்படுத்தியும் கூட உங்கள் குட்டியின் அழுகையை நிறுத்தலாம். அதன் நெஞ்சு பகுதி மற்றும் வயிற்று பகுதியில் உறிஞ்சி அல்லது அழுத்தி அதன் இதயத் துடிப்பை சீராக்குங்கள். அவர்கள் வயிற்றுப் பகுதியையும் இது சாந்தப்படுத்தும்.



Click it and Unblock the Notifications