Latest Updates
-
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்..
குளிர்காலத்துல குழந்தைகளை பத்திரமா கவனிச்சுக்கோங்க...

* புது அம்மாக்களுக்கு ஒரு முக்கியமான குளிர்கால டிப்ஸ் என்றால் அது இந்த காலத்தில் குழந்தையை வெதுவெதுப்பான சூழ்நிலையில் வைத்திருக்க வேண்டும். பிறந்த குழந்தையின் உடலானது மிகவும் சென்சிட்டிவ்வானது. எனவே அவர்கள் உடலை நோய்கள் எளிதில் தாக்கிவிடும். எனவே இந்த காலத்தில் அவர்களுக்கு வெதுவெதுப்பை அளிக்கும் உடையை உடுத்த வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு குளிரை தாக்காமல் இருப்பதற்கு, தொப்பி, ஜாக்கெட் போன்றவற்றை உடுத்துவித்தால் பிடிக்காது. அவர்கள் அவற்றை அகற்ற நினைப்பார்கள். ஆகவே தொப்பியை போடும் போது, அவர்கள் கழற்றாதவாறு கட்டிவிட வேண்டும்.
* குளிர்காலத்தில் சருமம் வறட்சி அடையும். எனவே குழந்தைகளின் சருமம் மென்மையாகவும், வறட்சியடையாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள ண்டும். மேலும் குழந்தைகளுக்கு டயப்பரை அடிக்கடி மாற்ற வேண்டும். அதுமட்டுமின்றி, அவர்களுக்கு பேபி பவுடரை உடல் முழுவதும் போட்டு விட வேண்டும். இதனால் அவர்களுக்கு அரிப்பு ஏற்படுவதை தடுக்கலாம். உடைகள் அணிவிக்கும் போதோ அல்லது அவர்களுக்கு துணியை பயன்படுத்தும் போதோ ஈரம் இல்லாதவாறு இருக்க வேண்டும். ஏனெனில் அவை குழந்தைகளுக்கு சளி மற்றும் காய்ச்சலை வரவழைத்துவிடும்.
* குழந்தைகளின் சருமமும் குளிர்காலத்தில் மாற்றமடையும். எனவே எதை மறந்தாலும் குழந்தைகளின் குளிர்காலப் பராமரிப்புகளை மறக்க வேண்டாம். ஆகவே எப்போது குழந்தைகளை குளிப்பாட்டிய பின்பு, பேபி மாய்ச்சுரைசரை பயன்படுத்த வேண்டும். அதேப் போல் குளிப்பாட்டுவதற்கு முன்பு, எண்ணெயால் மசாஜ் செய்வதை மறக்க வேண்டாம். அதிலும் வெதுவெதுப்பான எண்ணெயால் மசாஜ் செய்து குளிப்பாட்டினால், குழந்தைகளின் எலும்புகள் வலுவடையும்.
* அதிகமாக வெளியே செல்லாமல், வீட்டிலேயே இருக்க வேண்டும். ஏனெனில் குளிர்காலமானது பிறந்த குழந்தைக்கும் மற்றும் புது அம்மாவிற்கும் ஆரோக்கியமற்றது. தாய்ப்பால் கொடுக்கும் போது குளிர்ச்சியான பொருளை அம்மா குடித்தாலும், அது குழந்தைக்கு சளியை ஏற்படுத்தும். எனவே குழந்தையின் ஆரோக்கியத்திற்காக குளிர்காலத்தில் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது. வேண்டுமெனில் குளிர்காலத்தில் சிறிது நேரம் சூரிய வெளிச்சத்தில் உட்கார்ந்தால், உடலானது வைட்டமின் டி சத்துக்களை உறிஞ்சுவதோடு, சூரியக்கதிர்கள் சருமம் மற்றும் துணியில் உள்ள பாக்டீரியாவை அழித்துவிடும்.
* வறண்ட மற்றும் வெடிப்புள்ள உதடுகள் பெரியவர்களுக்கு மட்டும் தான் வரும் என்று நினைக்க வேண்டாம். சிறிய மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு கூட ஏற்படும். எனவே குழந்தைகளுக்கு, இந்த பிரச்சனை வராமல் இருப்பதற்கு பேபி ஆயில் அல்லது லிப் பாமை தடவினால், உதடுகளில் வறட்சி ஏற்படாமல், உதடுகள் மென்மையாக இருக்கும்.
மேற்கூறியவாறு குழந்தையை பராமரித்து வந்தால், எந்த பிரச்சனையும் வராமல் தடுக்கலாம். வேறு என்ன செய்யலாம் என்று தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
