Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
குழந்தைகள் அழகாக இருக்க, முதல்ல இத படிச்சு பாருங்க...
குழந்தைகள் ஒரு தேவதை போன்றவர்கள். அதனால் தான் அனைத்த குழந்தைகளும் பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றனர். ஆனால் இந்த நவீன உலகத்தில் என்னதான் குழந்தைகளாக இருந்தாலும், சுத்தமாக இருந்தால் தான் அனைவருக்கும் பிடிக்கும். அதனால் தான் குழந்தைகளை நன்கு சுத்தமாக பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. சில புதிய பெற்றோர்கள் குழந்தைகளை மென்மையாக பட்டுப் போன்று பார்த்துக் கொள்வார்கள். குழந்தைகளுக்கு எந்த ஒரு வலியும் இருக்கக்கூடாது, ஏன் அவர்களை அழுத்திப் பிடிக்கக் கூட விட மாட்டார்கள். அவ்வாறெல்லாம் இருக்க வேண்டியது தான். ஆனால் அவை குழந்தைகளின் பழக்கவழக்கங்களை மாற்றிவிடும்.
எனவே தான், பெற்றோர்கள் குழந்தைகளின் சுத்தம் பற்றிய ஒருசில அடிப்படைகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. உதாரணமாக, இந்த காலத்தில் வீட்டிற்கு யாரேனும் வந்தால், அப்போது குழந்தைகளை தூக்கும் போது, குழந்தை அவர்கள் மீது சிறுநீர் கழித்துவிட்டால், பின்னர் மறுமுறை அவர்கள் குழந்தையை தூக்கவே யோசிப்பார்கள். எனவே இந்த மாதிரியான எண்ணம் மற்றவர்களுக்கு வராமலிருக்க, குழந்தைகளுக்கு எப்போதும் டயப்பரை அணிவிக்க வேண்டும்.
இதுப் போன்ற ஒருசில அடிப்படைகளை அனைத்து பெற்றோர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். இப்போது அந்த அடிப்படைகளை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நகங்களை வெட்டுதல்
குழந்தைகளின் கால்கள் மற்றும் கைகளில் உள்ள நகங்களை வெட்டுவது என்பது மிகவும் கடினமான செயல். ஆனால் கடினம் என்று நினைத்துவிட்டு விடாமல், பொறுமையுடன் அவர்களின் கை மற்றும் கால்களில் உள்ள நகங்களை அடிக்கடி வெட்டிவிட வேண்டும்.

பற்களை சுத்தமாக வைத்தல்
குழந்தைகளுக்கு பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் போதே, அவர்களுக்கு பற்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை துலக்கும் பழக்கத்தை பழக்கிவிட வேண்டும். வேண்டுமெனில் ஆரம்பத்தில் அவர்களுக்கு 'பேபி மௌத் வாஷ்' கூட பயன்படுத்தலாம்.

ஹேர் ஸ்டைல்
குழந்தைகளின் முடியானது எப்போதும் ஒரே போன்று இருப்பதில்லை. அவர்கள் செய்யும் சுட்டித்தனத்திற்கு முடி பேய் போன்று வந்துவிடும். ஆகவே அவர்களுக்கு சரியான ஹேர் ஸ்டைலில் கூந்தலை வெட்டி விட்டு, பராமரித்தால், அழகாக இருக்கும்.

குளிக்க வைத்தல்
குழந்தை தானே என்று வாரத்திற்கு ஒரு முறை குளிப்பாட்டும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டாம். ஏனெனில் இது குழந்தையின் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. எனவே குளிர்காலமாக இருந்தால், வாரத்திற்கு மூன்று முறையும், கோடை காலமாக இருந்தால், தினமும் குளிப்பாட்ட வேண்டும்.

நாற்றமின்றி இருக்க...
குழந்தைகளின் உடலில் இருந்து துர்நாற்றம் வராது என்று நினைக்கிறீர்களா? ஆம். ஆனால் அவர்கள் மீது பால் வாடை வரும். எனவே அவர்கள் பால் குடித்ததும், அவர்களின் வாய், கை போன்றவற்றை கழுவி, பின் பேபி பவுடரை போட்டு விட வேண்டும்.

உடைகள்
குழந்தைகளின் அழகைக் கெடுக்கும் வகையில் இருக்கும் பெரிய உடைகளை அணிவிக்க வேண்டாம். இவை குழந்தைகளின் அழகை கெடுத்துவிடும். எனவே அவர்களுக்கு நல்ல பொருத்தமான, வறட்சியான உடைகளை அணிவிக்க வேண்டும்.

கூந்தல்
குழந்தைக்கு கூந்தல் குறைவாகத் தான் உள்ளது என்று அவர்களுக்கு தலை சீவாமல் இருக்க வேண்டாம். தினமும் மறக்காமல் சீவி விட வேண்டும். இதனால் அவர்களுக்கு கூந்தல் நன்கு வளரும்.

துணி
குழந்தைகள் சாப்பிடும் போது அவர்களது கழுத்திற்கு மறக்காமல், துணியை கட்டிவிட்டு, பின் உணவை ஊட்ட வேண்டும். இதனால் அவர்கள் மற்றும் அவர்களது உடை அழுக்காகாமல் தடுக்கலாம்.

மென்மையான சருமம்
குழந்தைகளுக்கு சருமம் மென்மையாக இருக்கும். ஆனால் மென்மையாகத் தானே உள்ளது என்று சாதாரணமாக இருக்கக்கூடாது. அவர்களுக்கு தினமும் பேபி லோசனை உடலில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

ஷூ
குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் போது மறக்காமல் கால்களுக்கு ஷூக்களை அணிவிக்க வேண்டும். இதனால் அவர்களை எந்த ஒரு கிருமிகளும் தாக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

பிறந்தநாள் உடை
குழந்தைகளை ஆடையில்லாமல் இருக்க விட வேண்டாம். பின் இது அவர்களுக்கு ஒரு கெட்ட பழக்கமாகிவிடும்.

டயப்பர்
குழந்தைகள் தூங்கும் போதும் அல்லது எங்கேனும் வெளியே செல்லும் போதும் டயப்பரை அணிவித்து அழைத்து செல்ல வேண்டும். அதுமட்டுமின்றி யாரேனும் வீட்டிற்கு வந்தாலும், குழந்தைகளுக்கு அணிவித்திருப்பது நல்லது.



Click it and Unblock the Notifications