Latest Updates
-
சனிபகவான்-செவ்வாய் அரிய இணைப்பால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலுக்கு ஏற்ற குளுகுளு வெள்ளரிக்காய் சட்னி ரெசிபி..இப்படி செஞ்சு பாருங்க..இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும் -
Tamil Nadu Elections 2026: தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் உள்ள டாப் 5 தொகுதிகள் என்னென்ன தெரியுமா? -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகத்தால் இந்த 3 ராசிகளுக்கு புது சொத்துக்கள் குவியப்போகுதாம்...! -
வீட்ல காய்கறி எதுவும் இல்லையா? டக்குனு இந்த பூண்டு மிளகு சாதத்தை செய்யுங்க... ஆரோக்கியமா, சுவையா இருக்கும்...! -
30 ஆண்டுக்கு பின் நிகழும் சனி-சுக்கிரன் சேர்க்கை: இந்த 3 ராசிகளை பணமும், புகழும் தேடிவரப்போகுதாம்...! -
கேரளா ஸ்டைல் கூட்டுக்கறி ரெசிபி... இதை ஒரு தடவை செஞ்சு பாருங்க... சாதத்துக்கு பெஸ்ட் சைடிஷ் இதுதான்...! -
ராகி பூரியும்.. வெங்காய மசாலாவும்.. - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் தேடிவரும் நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்..
பொங்கல் பரிசு 2.22 கோடி பேருக்கு ரெடி.. ரேஷனில் 5000?.. ஸ்டாலின் வெளியிடும் சூப்பர் அறிவிப்பு
சென்னை: தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகை இன்று இரண்டு வாரத்தில் வருகிறது. இதையடுத்து 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தலா 22,291 மெட்ரிக் டன் பச்சரிசி, சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. 1,77,22,000 வேட்டி, 1,77,64,000 சேலை கொள்முதல் செய்யப்பட்டு 85 சதவீதம் ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுடன் ரொக்கம் எவ்வளவு கிடைக்கும் என்பது இன்னும் சில நாளில் முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க உள்ளார். அதேபோல் கரும்பு கொள்முதல் குறித்தும் அறிவிக்க உள்ளார்.
தமிழர்கள் முக்கியமான பண்டிகையான தைப் பொங்கல் வரும் ஜனவரி 15ம் தேதி வருகிறது. போகி, தை பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என அடுத்தடுத்து நான்கு நாட்கள் திருவிழா வரும். அப்போது சொந்த ஊரில் மக்கள் கொண்டாடுவார்கள். கிராமங்கள் எல்லாமே திருவிழா மயமாக இருக்கிறது. எங்கு திரும்பினாலும் மைக் செட்டுகளும், விளையாட்டு போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும், சொந்த பந்தங்களுடன் உறவாடுவதும் அதிகமாக இருக்கும்.

தமிழர்களின் மிகப்பெரிய திருவிழாவான பொங்கலை அனைத்து தரப்பினரும் கொண்டாடுவார்கள். அப்படி கொண்டாடும் மக்களுக்காக, பொங்கல் பண்டிகையின் போது தமிழ்நாடு அரசு பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்புடன் ரொக்கப்பணத்தை பொங்கல் பரிசுத்தொகுப்பாக வழங்கி வருகிறது.
தூக்கத்தை கெடுத்திருக்கிறது திருத்தணி.. தேர்தல் ஆதாயம்.. சினிமாவில் பணம் மட்டுமே என்பது.. சாபக்கேடு
கடந்த ஆண்டு மட்டும் பொங்கல் பரிசுடன் ரொக்கம் வழங்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதால் நிச்சயம் பொங்கல் பரிசுடன் ரொக்கமும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதனை அதிகாரிகளோ, அமைச்சர்களோ மறுக்கவில்லை.அதேநேரம் ரொக்கம் குறித்த அறிவிப்பினை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்றும், அது எவ்வளவு என்பது ரகசியம் என்றும் அமைச்சர்கள் கூறி வருகிறார்கள்.
இது ஒருபுறம் எனில், தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு உள்ளடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழக்கம் போல் இந்தாண்டும் வழங்கப்படுகிறது.
பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்காக வீடு, வீடாக டோக்கன் ஜனவரி இரண்டாம் வாரத்தில் வினியோகிக்கப்படும். கடந்த ஆண்டை பொறுத்தவரை ஜனவரி 10-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொள்ளும் வகையில் டோக்கன் வினியோகம் செய்யப்பட்டிருந்தது. அதேபோல் தான் இந்த ஆண்டும் விநியோகம் செய்யப்படும் என தெரிகிறது
சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் வசிக்கும் ஏராளமானோர் பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக பொங்கல் அன்று தான் செல்வார்கள். அவர்கள் டோக்கன் பெற வசதியாக பொங்கல் முடிந்த பின்னரும் பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்படும் என தெரிகிறது. அதேநேரம் கடந்த ஆண்டுகளில் சர்க்கரை அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரொக்கம் வழங்கப்படவில்லை. எனவே இந்த ஆண்டும் வழங்கப்படாது என்றே தெரிகிறது.
இதற்கிடையே வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை வழங்க உள்ளன. அதோடு ரொக்கப்பணமும் வழங்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது என்கிறார்கள்.. அதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த வாரமே அறிவிக்க உள்ளார்.
தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு தற்போது தயாராக உள்ளது. முதலமைச்சர் முறைப்படி அறிவிப்பு வெளியிட்டவுடன், அதன் விநியோகம் உடனடியாக தொடங்கும். வரும் ஜனவரி 10-ம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கி முடிக்கப்படும் என்கிறார்கள்.
தேனியில் தங்க நகையை அடகு வைக்கும் போது செய்த சிறு தவறு.. 12 வருடமாக கனவுடன் காத்திருக்கும் மக்கள்
இதையடுத்து 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தலா 22,291 மெட்ரிக் டன் பச்சரிசி, சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. 1,77,22,000 வேட்டி, 1,77,64,000 சேலை கொள்முதல் செய்யப்பட்டு 85 சதவீதம் ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதனிடையே பொங்கல் பரிசு ரொக்கம் இந்த முறை 5000 கிடைக்கும் என்று மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். குறைந்தது 3000 கிடைக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள்.. எது உண்மை என்று அறிய சில நாள் காத்திருக்க வேண்டும்..
Credit: Oneindia



Click it and Unblock the Notifications











