Latest Updates
-
Tamil Nadu Elections 2026: தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் உள்ள டாப் 5 தொகுதிகள் என்னென்ன தெரியுமா? -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகத்தால் இந்த 3 ராசிகளுக்கு புது சொத்துக்கள் குவியப்போகுதாம்...! -
வீட்ல காய்கறி எதுவும் இல்லையா? டக்குனு இந்த பூண்டு மிளகு சாதத்தை செய்யுங்க... ஆரோக்கியமா, சுவையா இருக்கும்...! -
30 ஆண்டுக்கு பின் நிகழும் சனி-சுக்கிரன் சேர்க்கை: இந்த 3 ராசிகளை பணமும், புகழும் தேடிவரப்போகுதாம்...! -
கேரளா ஸ்டைல் கூட்டுக்கறி ரெசிபி... இதை ஒரு தடவை செஞ்சு பாருங்க... சாதத்துக்கு பெஸ்ட் சைடிஷ் இதுதான்...! -
ராகி பூரியும்.. வெங்காய மசாலாவும்.. - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் தேடிவரும் நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. -
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க...
வேலூர் கலையரசி.. நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன்.. பார்த்த மிக கேவலமான வேலை
வேலூர்: வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த காட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்த கருணாகரன் என்பவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கருங்காலி குப்பம் பகுதியை சேர்ந்த கலையரசி என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 14 வருடம் நன்றாக போன திருமண வாழ்க்கை சந்தேகத்தால் தொலைந்தது. நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை என்ன செய்தார் தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்.
திருமண வாழ்க்கை நன்றாக போவதற்கும், வீணாய் போவதற்கும் மூன்றே காரணங்கள் தான் உள்ளன. சந்தேகம், வேலையிழப்பு ஆகியவை தான் முக்கிய காரணமாக உள்ளது. வேலை இல்லை என்றால், கணவனுக்கும் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்படும். அதேபோல் சந்தேகம் வந்தாலும் தகராறு ஏற்படும். அதேபோல் குடிப்பழக்கமும் முக்கிய காரணமாக உள்ளது. இந்த மூன்றால் தான் பல குடும்பங்கள் அழிகின்றன. வேலூரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த காட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் என்பவருடைய மகன் கருணாகரனுக்கு 43 வயது ஆகிறது. இவர் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கருங்காலி குப்பம் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரின் மகளான 33 வயதாகும் கலையரசி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
சிக்கன் விலை அதிரடியாக உயருகிறது.. திருப்பூர், கோவை, நாமக்கலில் அதிரடி முடிவு
கருணாகரன் டயர் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். தற்போது வேலை இல்லை என கூறப்படுகிறது. வேலை இல்லாமல் வருமானம் இல்லாமல் இருந்ததால் குடும்பத்தில் சண்டை இருந்துள்ளதாம். இந்நிலையில் தன்னிடம் கோபமாக இருப்பதை அறிந்த கருணாகரன், அவரது மனைவி கலையரசியின் நடத்தையில் கருணாகரனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாம். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கலையரசி சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றுள்ளார். நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு பிறகும் மனைவி தூக்கத்திலிருந்து எழுந்திருக்க வில்லை என்று சொல்லப்படுகிறது எழுப்பி பார்த்தும் அசைவின்றி கிடப்பதாக அவரது தந்தைக்கு கருணாகரன் தகவல் கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சென்று பார்த்தபோது கலையரசி இறந்திருப்பது தெரியவந்தது. மகள் திடீரென இறந்ததில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து கலையரசியின் பெற்றோர் பள்ளிகொண்டா போலீசில் புகார் செய்தனர். அதில் தங்கள் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறினார்.
கத்தை கத்தையாக பணம்.. அள்ள அள்ள வந்த தங்க நகைகள்.. 35 கோடி.. அமலாக்கத்துறையே ஆடிப்போச்சு
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் கலையரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கலையரசியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாகரனிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
அதில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அதனை தன்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் மனைவியை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டி நள்ளிரவில் நன்றாக தூங்கிக்கொண்டிருந்த கலையரசியின் கை மற்றும் கால்களில் ஒயரால் மின்சாரத்தை பாய்ச்சி கொன்று விட்டு, காலையில் உடல் நலக்குறைவால் மனைவி இறந்ததாக அவரது பெற்றோரிடம் நாடகமாடியதாக கருணாகரன் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து கருணாகரன் மீது பள்ளிகொண்டா போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர். மனைவியை மின்சாரம் பாய்ச்சி கணவன் கொலை செய்த சம்பவம் வேலூரில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Credit: Oneindia



Click it and Unblock the Notifications











