Latest Updates
-
ஏப்ரலில் 6 முறை உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
பாவக்காயை இப்படி தொக்கு செய்யுங்க.. கசப்பே தெரியாது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க... -
இந்த சட்னியை தினமும் 2 ஸ்பூன் சாப்பிடுங்க.. உடம்பில் இரத்தமும் ஊறும்.. முடி உதிர்வும் குறையும்.. -
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 21 முதல் இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது.. -
பீர்க்கங்காய் வாங்குனா டக்குனு இந்த மாதிரி பருப்பு மசியல் செய்யுங்க... சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும்! -
கோதுமை தோசையும்.. தக்காளி சட்னியும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம்...! -
சனிபகவான்-செவ்வாய் அரிய இணைப்பால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலுக்கு ஏற்ற குளுகுளு வெள்ளரிக்காய் சட்னி ரெசிபி..இப்படி செஞ்சு பாருங்க..இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும் -
Tamil Nadu Elections 2026: தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் உள்ள டாப் 5 தொகுதிகள் என்னென்ன தெரியுமா?
குன்றத்தூரில் பூட்டிய வீட்டுக்குள் புதுமண தம்பதி..காதல் திருமணம் செய்த 9 நாட்களில் நம்ப முடியாத கோலம்
சென்னை: சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை, தளபதி தெருவில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தவர் விஜய் . இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தன்னுடன் இணைந்து பணியாற்றி யுவஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணமான 9 நாட்களில் பூட்டிய வீட்டுக்குள் புதுமண இருந்த கோலம் பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது. இது போன்ற முட்டாள்தனங்களை யாருமே செய்யாதீர்கள்.
திருமணமான புதிதில் கணவன் மனைவி இடையே சிலருக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பு. அப்படி கருத்து வேறுபாடுகள் ஏற்படும் போது, தம்பதிகள் ஈகோ இல்லலாமல் ஒருவரை ஒருவர் புரிந்து பேசி தீர்ப்பது நல்லது. கோபத்தில் அடிப்பது, தவறான செயல்களை ஒருவர் செய்துவிட்டார் என்பதற்காக இன்னொருவரும் செய்வது தவறு.

திருமணம் ஆன புதிதில் இருவருக்கும் இடையே அன்பு பரிமாறும் அதேநேரம், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் நேரமும் அதுதான். அப்போது புரிந்து கொள்ள முயற்சிக்காமல், அவர்களை அடிமையாக்க நினைப்பதோ அல்லது அவசரப்பட்டு முடிவெடுப்பதோ பெரும் தவறு. எந்த சூழலிலும் வாழ்க்கையை முடித்துக் கொள்வது போன்ற முட்டாள்தனங்களை செய்யவே கூடாது. குன்றத்தூரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை, தளபதி தெருவில் 25 வயதாகும் விஜய் என்ற பொறியாளர் வாடகைக்கு வசித்து வந்தார். இவர் சென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், தன்னுடன் பணிபுரிந்து வந்த சாப்ட்வேர் பொறியாளரான யுவஸ்ரீ (24) என்பவரை காதலித்து வந்தார். கடந்த 13-ந் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டு இந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்கள்.
மதுரைக்கு 3000, கோவைக்கு 4000, கன்னியாகுமரிக்கு 4500.. தலை சுற்ற வைக்கும் ஆம்னி பஸ் கட்டணம்
நேற்று இரவு யுவஸ்ரீயின் தங்கை இவர்களது வீட்டுக்கு வந்தார். கதவு உள்புறமாக பூட்டி இருந்தது. நீண்டநேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த குன்றத்தூர் போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கட்டிலில் யுவஸ்ரீ இருந்த கோலம் போலீசை ஆடிப்போக வைத்தது. விஜய், தூக்கில் தொங்கினார். இவர்களை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார், 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் விஜய், யுவஸ்ரீ முகத்தில் தலையணையால் அழுத்தி கொன்று செய்துவிட்டு, பின்னர் தூக்கிட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டாரா? அல்லது குடும்பத் தகராறில் மருந்து குடித்து யுவஸ்ரீ தற்கொலை செய்து கொண்டதை பார்த்து விஜயும் வாழ்க்கையை முடித்துக் கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.காதல் திருமணம் செய்த 9 நாட்களில் சாப்ட்வேர் பொறியாளர் புதுமண தம்பதி எடுத்த முடிவு உறவினர்களையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசு ஊழியர்கள்,ஆசியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி? தொடங்கியது மீட்டிங்.. அமைச்சர்கள் பேசுகிறார்கள்
தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.
Credit: Oneindia



Click it and Unblock the Notifications











