Latest Updates
-
தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
தவெக நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளராக செங்கோட்டையன் நியமனம்? வெயிட்டான 2 பொறுப்புகள் கொடுக்கும் விஜய்
சென்னை: தவெகவில் இணைந்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு, தவெகவில் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் 4 மாவட்டங்களுக்கு அமைப்பு பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சி தலைமைக்கு கெடு விதித்தார். இதனால், கோபம் அடைந்த எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனின் கட்சி பதவிகளை பறித்தார். இதற்கு மத்தியில், பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடந்தது.

இதில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார். அப்போது அவர், கட்சியை ஒருங்கிணைப்பது தொடர்பாக பேசியதாக கூறினார். இந்த சந்திப்பு நடந்த ஓரிரு நாளில் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
அதிமுகவில் கட்சியில் நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே பயணித்த செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில், அவரது அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பது அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. இந்த சூழலில் திடீர் திருப்பமாக கடந்த சில நாட்களாக தவெகவில் செங்கோட்டையன் இணைய உள்ளதாக பேச்சு எழுந்தது.
இதை உறுதி செய்யும் விதமாக நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் மாலையில் தவெக தலைவர் விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைத்து சந்தித்து பேசினார். விஜய்யுடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்திய செங்கோட்டையன் இன்று பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகம் வந்தார். விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில் அவருக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தவெகவினர் மத்தியில் ஏற்பட்டது.
இந்தநிலையில், செங்கோட்டையனுக்கு நிர்வாககுழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 4 மாவட்டங்களுக்கு அமைப்பு பொதுச்செயலாளர் பதவியும் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட இருப்பதாகவும், அதாவது, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் அமைப்பு பொதுசெயலாளராக செங்கோட்டையன் செயல்படுவார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தவெக தலைவர் விஜய் வெளியிட உள்ளார்.
Credit: Oneindia



Click it and Unblock the Notifications