Latest Updates
-
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.. -
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்.. -
Ramzan Eid 2026: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு அஜீரண கோளாறு வரக்கூடாதா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க போதும்.. -
பீன்ஸ் பருப்பு கூட்டு ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு கொடுங்க... பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
ரம்ஜான் ஸ்பெஷல் தெலுங்கானா மட்டன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
விஜயகாந்த் இறப்புக்குத்தான் பிரச்னை.. வி.சேகர் இறப்புக்கு வருவதில் என்ன பிரச்னை?.. அட போங்க வடிவேலு
சென்னை: வைகை புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் வடிவேலு இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறார். இந்த முறை தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டும் தேர்ந்தெடுக்கும் நடிக்கும் அவர் மீது இன்னொரு விமர்சனமும் வைக்கப்படுகிறது. அதாவது தன்னை வளர்த்துவிட்டவர்களை சுத்தமாக கண்டுகொள்வதில்லை என்பதுதான் அது. அவரும் அதற்கேற்றபடிதான் நடந்துகொள்கிறார்.
வடிவேலுவுக்கு பெரிய அறிமுகம் எல்லாம் தேவையில்லை.கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் தனது தனித்துவாமான காமெடி, பாடி லாங்குவேஜ் காரணமாக உச்சத்தில் இருக்கிறார். அவர் நின்றால், நடந்தால், சிரித்தால், பேசினால் என எது செய்தாலும் அதில் காமெடி ஒளிந்திருக்கும். அந்த அளவுக்கு அவரது ரத்தத்திலேயே நகைச்சுவை ஊறியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.
இரண்டாவது இன்னிங்ஸ்: பிஸியாக நடித்துவந்த 14 வருடங்களுக்கு முன்பு அரசியல் மேடை ஏறினார். அவரது கிராஃப் கீழே இறங்கிவிட்டது. ஒருகட்டத்தில் அவரை சினிமாவிலிருந்து ஒதுக்கவே செய்துவிட்டார்கள். அவர் ஒதுக்கப்பட்டாலும் அவரது நகைச்சுவை காட்சிகளை ஒதுக்க முடியவில்லை. எந்த நகைச்சுவை சேனல் ஆனாலும் சரி, மீம்ஸாக இருந்தாலும் சரி அதில் வடிவேலுதான் இருப்பார். இப்படிப்பட்ட சூழலில் அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி பிஸியாக நடித்துவருகிறார்.

விமர்சனங்கள்: அவர் எந்த அளவுக்கு புகழின் உச்சிக்கு சென்றிருக்கிறாரோ அதே அளவுக்கு விமர்சனத்தையும் சந்தித்திருக்கிறார். முக்கியமாக தன்னை வளர்த்துவிட்டவர்களை அவர் சுத்தமாக மதிப்பதில்லை என்பதும், தன்னுடன் நடிக்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளை வளரவிடுவதில்லை என்பதும்தான் அவர் மீது பிரதானமாக வைக்கப்படும் விமர்சனங்கள். அதையெல்லாம் பற்றி அவர் கண்டுகொள்வதில்லை.
விஜயகாந்த் இறப்புக்கு வரவில்லை: வளர்த்துவிட்டவர்களுடன் பேச வேண்டாம். குறைந்தபட்சம் அவர்கள் இறந்தால் வரலாம் அல்லவா. வடிவேலு அதையும் செய்வதில்லை. சின்னக்கவுண்டர் படத்தில் நடித்தபோது வடிவேலு நடிக்கவே கூடாது என்று கவுண்டமணி பிடிவாதம் பிடித்தார். ஆனால் விஜயகாந்த்தான் கவுண்ட்டரை சமாதானம் செய்து சம்மதம் வாங்கினார். தொடர்ந்து தன்னுடைய அடுத்த படங்களிலும் வாய்ப்பு கொடுத்தார்.
Varanasi: ஏற்கனவே லீக்கான அதே டைட்டில் தான்.. மாடு மேல மகேஷ் பாபு.. ராஜமெளலியின் 'வாரணாசி'!
ஆனால் அவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பேச்சுவார்த்தையை பின் நாட்களில் நிறுத்திவிட்டார் வடிவேலு. சில வருடங்களுக்கு முன்பு விஜயகாந்த் இறந்தபோதுகூட நேரில் வரவில்லை. சரி நேரில் அஞ்சலி செலுத்த வந்தால் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறும் என்று அஞ்சியதால் வராமல் இருந்திருக்கலாம். ஆனால் இரங்கல்கூட தெரிவிக்காதது பலரிடமும் வடிவேலுவின் மதிப்பை குறைப்பதாகவே இருந்தது.
வி.சேகருக்கு வருவதில் என்ன பிரச்னை: இந்நிலையில் இயக்குநர் வி.சேகர் இறப்புக்கும் அதேபோல் நடந்துகொண்டிருக்கிறார் வடிவேலு. வடிவேலு திரைத்துறையில் வளர்ந்ததற்கு முக்கிய காரணமானவர்களில் சேகருக்கு பெரிய பங்கு உண்டு. தன்னுடைய விரலுக்கேத்த வீக்கம், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை உள்ளிட்ட படங்களில் வடிவேலுவை பயன்படுத்தியிருந்தார் சேகர். அந்தப் படங்களின் காமெடிகள் வடிவேலுவை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றன.
இப்படி தனது வளர்ச்சியில் பங்கெடுத்த சேகர் மறைந்ததை கேட்டு பதறியடித்து நேரில் வடிவேலு வருவார் என்றுதான் எதிர்பார்த்தார்கள். ஆனால் வைகை புயலோ சைலெண்ட் மோடுக்கு போய்விட்டது. சரி நேரில்தான் வரவில்லை இரங்கல் தெரிவித்து அறிக்கையோ அல்லது குரல் பதிவோ வெளியிடுவார் என்று பார்த்தால் அதுவும் இல்லை. பொதுவாக எந்தப் புயல் ஆனாலும் கரையை கடந்துதானே ஆகவேண்டும். ஆனால் இந்த வைகை புயலோ தனது வளர்ச்சிக்கு காரணமானவர்கள் மறையும்போதுகூட கரைக்கு வரமாட்டேன் என்று அடம் பிடிப்பது அவர் மீது இருக்கும் மதிப்பை குறைக்க செய்துவிடும். இனியாவது வைகை புயல் சில சமயங்களில் இறங்கி வர வேண்டும். இதுதான் அவரது ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
Credit: Filmibeat



Click it and Unblock the Notifications











