பட்ஜெட்: ஆதிச்சநல்லூர் முதல் பழவேற்காடு வரை- தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்னென்ன?

By Devika Manivannan

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு பிரத்தியேக கவனம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு பல்வேறு திட்டங்கள் வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

எனவே ஒட்டுமொத்த தமிழ்நாடுமே பட்ஜெட்டில் நம் மாநிலத்திற்கு சிறப்பு கவனிப்பு இருக்கும் என எதிர்பார்த்தது. குறிப்பாக நிதி அமைச்சர் இன்று காஞ்சிபுரம் பட்டுப்புடவை உடுத்தி வந்து பட்ஜெட் தாக்கல் செய்தார். எனவே தமிழ்நாட்டுக்கு மாஸ் அறிவிப்புகள் என அனைவரும் பேச தொடங்கினர். ஆனால் எதிர்பார்த்த அளவு பெரிய அறிவிப்புகள் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம்.


budget 2026 union budget 2026 2026 2026

தமிழ் நாட்டுக்காக பட்ஜெட்டில் வெளியான முக்கியமான அறிவிப்புகள் என்னென்ன என்பதை தற்போது நாம் விரிவாக பார்க்கலாம். பூமியிலிருந்து அரிய வகை கனிமங்களை தோண்டி எடுப்பதற்கான பிரத்தியேக Rare Earth Corridors எனப்படும் தொழில் வழித்தடம் தொடங்கப்படும் என அறிவித்தார். அதாவது கனிமங்கள் நிறைந்த ஒடிசா ,கேரளா ,ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பிரத்தியேகமான அரிய வகை கனிமங்களுக்கான தொழில் வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. அரிய வகை கனிம வளங்களை தோண்டி எடுப்பது, பிராசசிங் செய்வது மற்றும் ஆய்வு, உற்பத்தி பணிகள் இதன் மூலம் ஊக்குவிக்கப்படும் என தெரிவித்தார்.

வருமான வரி உச்ச வரம்பில் மாற்றமில்லை!! கோடிக்கணக்கான இந்தியர்கள் ஏமாற்றம்!!

அடுத்ததாக ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் அமைக்கப்படும் என கூறினார். தமிழகத்தின் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட நாடுமுழுவது உள்ள 15 தொல்லியல் இடங்களில் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார். தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான தொல்லியல் இடம் தான் ஆதிச்சநல்லூர்.


நாடு முழுவதும் மலையேற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அவர் அறிவித்தார். இதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் பொதிகை மலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மலையேற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும் என கூறினார்.அடுத்ததாக தமிழ்நாட்டின் பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

நாடு முழுவதும் தேங்காய் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றார். அந்த வகையில் தமிழகம் இதில் முன்னிலையில் இருப்பதால் தேங்காய் உற்பத்தி திட்டத்தில் தமிழ்நாடு பலன் பெறும்.

காஞ்சிபுரம் பட்டு புடவை உடுத்தி பட்ஜெட் தாக்கல்!! நிர்மலா சீதாராமனின் புடவை தேர்வு சொல்வது என்ன?

அடுத்ததாக நாடு முழுவதும் ஏழு நகரங்களில் அதிவேக ரயில் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்தார். இதில் சென்னை - பெங்களூர் , சென்னை - ஹைதராபாத் வழித்தடங்களும் இடம்பெற்றுள்ளன. எனவே சென்னையில் இருந்து பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக ரயில் திட்டங்கள் கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகியிருக்கிறது.

நாடு முழுவதுமே மாவட்டந்தோறும் மாணவிகளுக்கான விடுதிகள் அமைக்கப்படும் என கூறினார். இது தமிழ்நாட்டுக்கும் பொருந்தும் என்பதால் இங்கேயும் அனைத்து மாவட்டங்களிலும் விடுதிகள் வர இருக்கின்றன.

Credit: Goodreturns

Story first published: Sunday, February 1, 2026, 13:31 [IST]
Desktop Bottom Promotion