Latest Updates
-
Tamil Nadu Election 2026: தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏன் ஜிகர்தண்டாவை அவசியம் குடிக்கணும் தெரியுமா? -
ரம்ஜான் ஸ்பெஷல் திண்டுக்கல் ஸ்டைல் மட்டன் பிரியாணி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2026 IPL T20-யில் உள்ள டாப் 5 இளம் வீரர்கள்.. சிஎஸ்கே அணியிலும் ஒருவர் உள்ளார்.. யாருன்னு பாருங்க.. -
ஏப்ரலில் 6 முறை உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
பாவக்காயை இப்படி தொக்கு செய்யுங்க.. கசப்பே தெரியாது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க... -
இந்த சட்னியை தினமும் 2 ஸ்பூன் சாப்பிடுங்க.. உடம்பில் இரத்தமும் ஊறும்.. முடி உதிர்வும் குறையும்.. -
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 21 முதல் இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது.. -
பீர்க்கங்காய் வாங்குனா டக்குனு இந்த மாதிரி பருப்பு மசியல் செய்யுங்க... சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும்! -
கோதுமை தோசையும்.. தக்காளி சட்னியும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம்...!
கோவை தங்க நகை அடகு கடைக்கு.. மூன்றாவது முறையாக ஏமாற்ற வந்த சுதா.. ஆடிபோக வைத்த உரிமையாளர்
கோவை: இன்றைக்கு தங்கத்தின் மதிப்பு ஒரு சவரன் ஒரு லட்சம் என்கிற அளவில் உள்ளது. செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி எல்லாம் சேர்த்து பார்த்தால் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வரை இருந்தால் தான் ஒரு சவரன் நகையை வாங்க முடியும் என்கிற அளவில் உள்ளது. தங்க நகை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகையை அடகு வைத்து கடன் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அப்படித்தான் கோவை சரவணம்பட்டியில் நகையை அடகு வைக்க பெண் வந்துள்ளார். அவர் அடகு வைத்து போலி அடகு நகை என்று கூறப்படுகிறது. இதனால் அவருக்கு என்ன நடந்தது என்பதை பாருங்கள்.
தங்க நகை அடகு தான் இன்றைய பல வீடுகளை காப்பாற்றி வருகிறது. பல லட்சம் மக்கள் மூச்சுவிடக்காரணமே தங்க நகைகள் தான். பொருளாதார ரீதியாக மக்கள் நலிவடைந்த போதிலும், தங்க நகைகளை அடகு வைத்து புதிய தொழில் தொடங்குவது அதிகரித்துள்ளது. அதேபோல் தங்க நகையை அடகு வைத்து தங்கள் கல்வி, மருத்துவம், பயணம், செய்முறை, பொருட்கள் வாங்க, வீடு கட்ட பயன்படுத்துகிறார்கள். அதேநேரம் சிலர் போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற முயற்சி செய்கிறார்கள். அதில் சிலர் வெற்றியும் பெறுகிறார்கள். அப்படி செய்த கோவை பெண்ணுக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

கோவை ரத்தினபுரி ஜி.பி.எம்.நகரை சேர்ந்த 53 வயதாகும் ராஜாராம் என்பவர் சரவணம்பட்டி சின்னமேட்டுப்பாளையம் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் நகை அடகு கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரிடம் பலர் அடகு வைத்து பணம் பெற்றுசென்று வருகிறார்கள். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சாம்பல்பட்டியை சேர்ந்தவர் சுதா (39). இவர், கோவை சின்னமேட்டுப்பாளையத்தில் தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார். சுதா, ராஜாராமின் அடகு கடைக்கு சென்று கடந்த டிசம்பர் 8, 9, 12 ஆகிய தேதிகளில் நகைகளை அடகு வைத்து பணம் வாங்கினாராம். நகையை அடகு வைத்தபோது அதனை ராஜாராம் சரியாக கவனிக்கவில்லையாம்.
3 கோடி டேர்ம் இன்சூரன்ஸ் பணம்.. தந்தையை பாம்பை விட்டு கடிக்க வைத்த மகன்கள்.. இறுதியில் ட்விஸ்ட்
இந்த நிலையில் மூன்று நாள் கழித்து சுதா அடகு வைத்த நகைகளை ராஜாராம் ஆய்வு செய்தார். அப்போது அவை போலி நகைகள் என்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சுதா குறித்து விசாரித்துள்ளார். இதற்கிடையே ராஜாராமின் கடையில் போலி நகைகளை அடகு வைக்க சுதா கடந்த 17-ந் தேதி மீண்டும் வந்துள்ளார்.. அவர், 12 கிராம் நகையை கொடுத்து ரூ.90 ஆயிரம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஏற்கனவே போலி நகைகளை அடகு வைத்து பணம் வாங்கிய சுதா மீண்டும் போலி நகையை கொடுத்து பணம் கேட்டதால் ராஜாராம் ஆத்திரம் அடைந்தார்.
ராஜாராம் சுதாவை சரமாரியாக தாக்கினார். பின்னர் அவர் தனது நண்பர் மகேந்திரன் மற்றும் 5 பேருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து உள்ளார். அவர்களும் வந்து சுதாவை தாக்கினர். இதையடுத்து அவர்கள் இரவு 9 மணி அளவில் சுதாவை கடைக்கு பின்புறம் பயன்பாடு இல்லாத வீட்டுக்கு அழைத்து சென்று கையால் அடித்து, கட்டையால் தாக்கினார்களாம். இதில் சுதா மயக்கம் அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதனை செய்த போது சுதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தங்கம் விலை அடுத்த ஆண்டில் 2 லட்சத்தை தொடும்.. ஆடிப்போக வைத்த உலக தங்க கவுன்சில் கணிப்பு
இது பற்றி ராஜாராம், சரவணம்பட்டி சோதனைச்சாவடியில் இருந்த போலீசாரிடம் தெரிவித்து சரண் அடைந்தார். இதையடுத்து சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுதாவின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாராமை கைது செய்தனர். தலைமறைவான அவரது நண்பர்கள் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். போலி நகைகளை அடகு வைத்து பணம் வாங்கிய பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Credit: Oneindia



Click it and Unblock the Notifications











