Latest Updates
-
தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
பொங்கல் பரிசு தொகுப்பு: ஒரு நாளைக்கு 400 பேருக்கு விநியோகம்!! ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு!!
பொங்கல் பண்டிகை நெருங்க நெருங்க பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பொங்கல் பண்டிகைக்காக தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பில் அரிசி, சர்க்கரை மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்குவதற்காக அரிசி , சர்க்கரை உள்ளிடவை ரேஷன் கடைகளுக்கு பெருமளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரான நந்தகுமார் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் மிக முக்கியமான ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார்.

ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பினை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்குவது தொடர்பான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும், டோக்கன் வினியோகம் குறித்தும் பின்வரும் அறிவுரைகளை பின்பற்றி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி அந்தந்த மண்டலங்களில் செயல்படும் நியாய விலை கடைகளோடு இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளுக்கு ஏற்ப ஜனவரி 2ஆம் தேதிக்குள் டோக்கன்களை அச்சிட்டு விநியோகம் செய்திட தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜனவரி 2ஆம் தேதிக்குள் டோக்கன்கள் அச்சிடும் பணி முடிந்துவிடும்.
மகளிர் உரிமைத் தொகை: ஜனவரி 9ஆம் தேதியே வரவு வைக்கப்படுகிறதா? பொங்கலுக்கு டபுள் ஜாக்பாட்!!
இந்த டோக்கன்களில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற வேண்டிய நாள் மற்றும் நேரம் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரேஷன் கடை ஊழியர்கள் ரேஷன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று இந்த டோக்கன்களை வழங்கிட வேண்டும் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடங்கக்கூடிய முதல் நாளில் முற்பகலில் 100 ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பிற்பகலில் 100 ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்திட ஏதுவாக டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும்.
இரண்டாவது நாட்களில் இருந்து காலையில் 200 பேர், பிற்பகலில் 200 பேர் என மொத்தம் 400 பேருக்கு பொங்கல் பரிசு தொகைக்கு விநியோகம் செய்திட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை எழக்கூடிய வகையிலோ அல்லது அதிக கூட்ட நெரிசல் ஏற்படக்கூடிய வகையிலோ செயல்படக்கூடிய பகுதிகளில் இருக்கும் கடைகளில் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டு உரிய போலீஸ் பாதுகாப்புகள் பெறப்படுவதை உறுதி செய்துவிட வேண்டும் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிலிண்டர் விலை முதல் ரயில் டிக்கெட் வரை ஜனவரி 1 முதல் என்னவெல்லாம் மாறப் போகுது?
தமிழ்நாட்டில் தற்போது 2.2 கோடி ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இருக்கின்றன . இவற்றில் அரிசி கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கும். பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே அனைவருக்கும் பொங்கல் பரிசு கிடைத்திடும் வகையில் ஏற்பாடுகளை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன இடம்பெற உள்ளது, ரொக்கப்பணம் இடம்பெறுமா , அப்படி இடம்பெற்றால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை எல்லாம் முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்.
Credit: Goodreturns



Click it and Unblock the Notifications