Latest Updates
-
பீன்ஸ் பருப்பு கூட்டு ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு கொடுங்க... பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
ரம்ஜான் ஸ்பெஷல் தெலுங்கானா மட்டன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
குரு-சந்திரன் உருவாக்கும் கஜகேசரி ராஜயோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் தேடிவரப்போகுது...! -
தமிழ்நாட்டின் ஸ்டார் அரசியல்வாதிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறார்கள் தெரியுமா? -
தேர்தல் பிரச்சாரங்களின் போது ஏன் இளநீர் அரசியல் தலைவர்களின் விருப்பமான பானமாக உள்ளது தெரியுமா? -
கோடை வெயிலால் முகம் டல்லா, கருப்பா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
பாய் வீட்டு சிக்கன் பிரியாணி ரெசிபி... இந்த ரம்ஜானுக்கு இப்படி பிரியாணி செஞ்சு பாருங்க... தாறுமாறா இருக்கும்! -
வெண்டைக்காய் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி மொறுமொறுன்னு சிப்ஸ் செஞ்சு சாப்பிடுங்க..
கண்ணா 3 லட்டு தின்ன ஆசையா? ரூ.1000+6000+லேப்டாப்! டிசம்பரில் லாட்டரி அடிச்ச மாதிரி யோகம்! சூப்பர்!
சென்னை: 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு பெண்கள் மற்றும் இளைஞர்கள் வாக்குகளை கவரும் வகையில், தமிழக அரசு அசத்தலான மூன்று திட்டங்களை செயல்படுத்த உள்ளது. மகளிர் உரிமை தொகை விரிவாக்கம், பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டங்கள் தான் அது. பிப்ரவரிக்கு பின் திட்டங்களை செயல்படுத்த முடியாது என்பதால் வரும் டிசம்பர் மாதத்திலேயே மூன்று பெரிய திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்த உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக அரசு அறிவித்த முக்கிய நலத்திட்டங்கள் அனைத்தையும் விரைவாக செயல்படுத்துவதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டால், புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த முடியாத சூழல் உருவாகுவதால், மகளிர் உரிமை தொகை விரிவாக்கம், பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டங்களை டிசம்பர் மாதத்திற்குள் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக அரசு திட்டங்கள்
கடந்த பட்ஜெட்டில், தமிழக அரசு 2 ஆம் மற்றும் 3 ஆம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு புதிய லேப்டாப் வழங்கும் திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 20 லட்சம் கல்லூரி மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற உள்ளனர். லேப்டாப் தயாரிப்பு பணிகளைச் செய்ய ஏசர், டெல், எச்பி போன்ற முன்னணி நிறுவனங்கள் பொறுப்பேற்றுள்ளன. ஒவ்வொரு லேப்டாப் ஒன்றின் விலை சுமார் ரூ.21,660 ஆக அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏசி காரில் எடப்பாடிக்கு வேர்க்குதாம்..செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்! விளாசிய அமைச்சர் ரகுபதி
மாணவர்களுக்கு லேப்டாப்
முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் நடைபெறும் இந்தத் திட்டத்தில், முதல் கட்டமாக தயாரிக்கப்பட்ட 10 லட்சம் லேப்டாப்கள் அரசிடம் வந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிசம்பர் மாதத்திலேயே இந்தத் திட்டத்தை முதலமைச்சர் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன் பின்னர், மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்.
தினமும் 500 ஸ்பாட் புக்கிங் பாஸ்.. சபரிமலை பெருவழிப்பாதை யாத்ரீகர்களுக்கு குட்நியூஸ்! என்ன ஸ்பெசல்?
மகளிர் உரிமைத்தொகை
'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டத்தின் கீழ் தற்போது 1 கோடி 14 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததால், தகுதி காரணங்களால் விடுபட்ட பெண்களுக்கும் உரிமைத்தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகங்களிலும், சிறப்பு முகாம்களிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தத்தில் 28 லட்சம் பெண்கள் கூடுதல் பயனாளிகளாக சேர்க்க வேண்டும் என மனுக்கள் வந்துள்ளன.
ரூ1000 திட்டம்
இம்மனுக்கள் அனைத்தும் தற்போது இறுதி பரிசீலனையில் உள்ளன. அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கான உரிமைத்தொகை டிசம்பர் 15 ஆம் தேதி முதல் வங்கி கணக்கில் நேரடியாக சேர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டம் மூலம் பெண்கள் வட்டத்திற்குள் பெரிய அளவில் புதிய பயனாளிகள் சேர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு
மற்றொரு மிக முக்கியமான நலத் திட்டம் பொங்கல் பரிசுத் தொகுப்பு. ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு குடும்ப அட்டையாளர் பெறும் பரிசுத் தொகை வழங்கப்படும். ஆனால் 2026 ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால், அரசாங்கம் இந்த ஆண்டில் பொங்கல் பரிசுடன் கூடுதலாக ரொக்கத் தொகையும் வழங்கலாம் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்களிடையே உருவாகியுள்ளது. தமிழகத்தில் 2.27 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன.
மு.க. ஸ்டாலின் அரசு
ஒரு குடும்பத்திற்கு ரூ.3,000 வழங்கினால் அரசுக்கான மொத்தச் செலவு ரூ.6,800 கோடி ஆகும். ரூ.6,000 வழங்கினால் செலவு ரூ.11,620 கோடி ஆகும். அரசுக்கு நிதிச்சுமை இருந்தாலும், தேர்தல் முன்பாக மக்கள் நலனுக்காக கூடுதல் ரொக்கத் தொகை வழங்க வாய்ப்பு அதிகம் என அரசின் உள்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும் இறுதி முடிவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் எடுப்பார் என தலைமைச் செயலக வட்டாரத்தினர் கூறுகின்றனர்.
Credit: Oneindia



Click it and Unblock the Notifications











