ஊதியத்தை டபுள் ஆக்கிய தமிழக அரசு.. வெளியான அதிரடி அரசாணை! யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா?

By Rajkumar R

சென்னை: தமிழகத்தில் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான ஊதியம் ரூ.6,000-ல் இருந்து ரூ.12,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி இந்த அரசாணையை தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதேபோல், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி ஊக்கத்தொகை ரூ.1000-லிருந்து ரூ.2000 ஆகவும், வாக்குச்சாவடி மேற்பார்வையாளர் ஊதியம் ரூ.12,000-லிருந்து ரூ.18,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.2026 சட்டசபைத் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளில், வாக்காளர் பட்டியல் புதுப்பித்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இப்பணியின் ஒரு பகுதியாக, SIR (Special Intensive Revision) எனப்படும் கணக்கீட்டு படிவங்கள் வீடு தோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய அல்லது நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


chennai election commission Voter List

பெரும்பாலும் இந்த பணியில் அரசு ஊழியர்களை ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக வருவாய்த் துறை, அங்கன்வாடி, ஆஷா பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே இருக்கும் பணிகளோடு இந்த பணிகளையும் மேற்கொள்வதால் மன உளைச்சல் ஏற்படுவதாகவும், மேலும் பணி அழுத்தம் ஏற்படுவதாக கூறி நேற்று தமிழகம் முழுவதும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமான அரசாணை ஒன்றை தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டிருக்கிறது.

ஏற்கனவே தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின்படி இன்று தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான ஊதியம் இதுவரை 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் அதனை 12,000 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதே போல தற்போது வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் ஈடுபட்டு வரும் பிஎல்ஓ எனப்படும் வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான ஊக்கத்தொகை 1000த்தில் இருந்து 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. மேலும் வாக்குச்சாவடி மேற்பார்வையாளருக்கான ஊதியம் 12 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாக்காளர் பட்டியல் திருத்த பணி மற்றும் தேர்தல் நேரத்தில் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியமும், ஊக்கத் தொகையும் உயர்த்தி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Credit: Oneindia

Desktop Bottom Promotion