Latest Updates
-
தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
வீட்டை விட்டு வெளியேறும் பார்கவி.. சுயநினைவின்றி கிடக்கும் சக்தி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: அன்புக்கரசி தர்ஷன் என்னிடம் தப்பா நடந்து கொண்டான். அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது என்று இருவரும் நெருக்கமாக இருந்த போட்டோவை காட்டுகிறாள். இதைப்பார்த்து ஆத்திரப்படும் தர்ஷினி, இப்படி அசிங்கமா பொய் சொல்றீங்களே, உங்களுக்கே அசிங்கமா இல்லையா, வேண்டுமென்றே நாடகமாடி, இவர்களை சேர்த்து வைக்க பார்க்கிறீர்களா? அதை நான் நடக்க விட மாட்டேன் என சொல்கிறாள். இவ்வளவு பிரச்சனைகள் நடந்து கொண்டே இருக்க தர்ஷன், அவ பொய் சொல்ற, தல வலி மாத்திரை கொடுத்தா அதை சாப்பிட்ட பிறகு எனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை என சொல்கிறான்.
இதைக்கேட்டு ஆத்திரப்படும் அறிவுக்கரசி, அவ மாத்திரை கொடுத்த நீ சாப்பிடுவியா, உனக்கு அறிவு இல்லையா என்று கேட்கிறாள். இதனால், எதுவும் பேசமுடியாமல் என்ன நடந்தது, ஏது நடந்தது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறான் தர்ஷன். இதைப்பார்த்து ஆத்திரப்படும் பார்கவி, என்ன சொல்வது என்று தெரியாமல் கதறி அழுகிறாள். இவ்வளவு பெரிய பழியை தர்ஷன் மீது போட்டு இருக்கிறார்கள். நான் அப்படி செய்யவில்லை என்று தர்ஷன் தானே சொல்ல வேண்டும், ஆனால், அவர் ஏன் அமைதியாக இருக்கான் என வருத்தப்படுகிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடுக்காண ப்ரமோ வெளியாகி உள்ளது, அந்த ப்ரோமோவில் தர்ஷன் எதும் பேசாமல் அமைதியாக இருக்க, அப்போது குணசேகரன், இதற்கு மேல் பார்கவிக்கு இந்த வீட்டில் என்ன வேலை, அவளை வெளியில் போக சொல்லு தர்ஷா என சொல்கிறார். உடனே அறிவுக்கரசி, இப்போ பார்கவி மட்டும் இந்த வீட்டை விட்டு வெளியில் போகவில்லை என்றால், ஜாமினில் தான் வெளியில் வந்து இருக்கேன். உங்களை கொலை செய்துவிட்டு நான் ஜெயிலுக்கு சென்று விடுவேன் என சொல்கிறாள். நிலைமை இப்படி இருக்க, தர்ஷன் என்ன செய்வது என்றே தெரியாமல் அமைதியாக இருக்கிறான். அவரின் அமைதியை பார்த்து பார்கவி வருத்தப்படுகிறாள்.
சக்தியை நெருங்கும் ஜனனி: தென்காசியில் ஜனனி ஒருவரை பின்தொடர்ந்து காரில் சென்று கொண்டு இருக்கிறாள். கார் ஓட்டுநர், அவர் உங்களுக்கு தெரிந்த நபரா, அவருக்கு தெரியாமல் அவரை ஏன் பாலோ செய்ய சொல்கிறீர்கள் என்று கேட்கிறாள். அப்போது ஜனனி, உங்களுக்கு தேவையான காசை நான் கொடுத்து விடுகிறேன் தயவு செய்து அவரை பின்தொடர்ந்து செல்லுங்கள் என சொல்கிறார். அப்போது கார் ஓட்டுநர், பணத்திற்காக இல்லை அவனைப் பார்த்தால் முரட்டுத்தனமான ஆளாக தெரிகிறான். நாளைக்கு ஏதாவது எனக்கு பிரச்சனை வந்தால் நான் என்ன செய்வது என புலம்புகிறார். உடனே ஜனனி, உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது நான் ஒரு பிரச்சனையில் இருக்கிறேன். தயவு செய்து அவரை பின்தொடர்ந்து செல்லுங்கள் என சொல்கிறாள்.
சக்திக்கு என்ன ஆச்சு: மறுபக்கம் சக்தி இரண்டு கைகளும் கட்டப்பட்டது மயங்கிய நிலையில் இருக்கிறான். சக்திக்கு சற்று மயக்கம் தெளிய கைகட்டுகளை அவிழ்த்து விடுங்கள். பாத்ரூம் செல்ல வேண்டும் என சொல்ல அவனுடைய கை கட்டுகளை ராமசாமி மெய்யப்பன் அவிழ்த்து விடுகிறான். உடனே, சக்தி உங்க வீட்டுக்கு வரும் போதெல்லாம் என்னை எதிர்த்து எதிர்த்து பேசுவ, இப்போ எதுவுமே பேசாமல் இருக்க என கிண்டல் அடிக்கிறான். அந்த நேரம் ராமசாமி மெய்யப்பனுக்கு போன் வர, அவன் ஃபோனை எடுத்துக் கொண்டு வெளியே செல்கிறான். அந்த நேரத்தில் சக்தி தனது அருகில் இருக்கும் ஃபோனை கஷ்டப்பட்டு எடுக்கிறான். இதோடு இந்த எபிசோடு முடிந்தது அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்
Credit: Filmibeat



Click it and Unblock the Notifications