சிவகார்த்திகேயன் சென்ற விபத்து.. சாலையில் வாக்குவாதம்.. பராசக்தி ஹீரோ எஸ்கேவுக்கு என்ன ஆச்சு?

By Karunanithi Vikraman

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் பராசக்தி திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதில் ரவி மோகன், அதர்வா ஆகியோர் முக்கியமான ரோலை ஏற்க; ஸ்ரீலீலா ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இதுவரை படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி சூப்பர் ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. அப்படத்தின் இறுதிக்கட்ட பரபரப்பில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் அவர் சென்ற கார் சென்னையில் விபத்தில் சிக்கியது.

அமரன் மாபெரும் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் வேல்யூ எங்கேயோ சென்றுவிட்டது. அவரை நம்பி எப்படிப்பட்ட கதையை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்ற எண்ணத்தையும் அந்த வெற்றி மற்ற இயக்குநர்களுக்கு கொடுத்திருக்கிறது. அப்படித்தான்; சூர்யாவை வைத்து பராசக்தி படத்தை இயக்குவதாக இருந்த சுதா கொங்கரா; அவர் வெளியேறிய பிறகு உடனடியாக சிவகார்த்திகேயனை ஹீரோவாக புக் செய்தார்.


Sivakarthikeyan Met Minor Car Accident in Chennai Here are Full Details
Photo Credit:

என்ன கதை?: இப்படமானது தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த மாணவர்களின் போராட்டத்தை பற்றியும், அப்போராட்டத்தில் உயிரிழந்தவர்களை பற்றியும் அடிப்படையாக வைத்தும் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. படத்தின் டீசர், போஸ்டர்கள் எல்லாம் கூஸ்பம்ப்ஸாக இருக்கின்றன. எனவே முழு படமும் தங்களுக்கு பெரிய விருந்து படைக்கப்போகிறது என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள் எஸ்கே ரசிகர்கள்.

ஜன நாயகன் விஜய்க்கு மாஸான ட்ரிபியூட்.. அடடே காலேஜ் பசங்க பொண்ணுங்க கலக்குறாங்களே!

ஜனவரியில் படம் ரிலீஸ்: படமானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸாகிறது. முதலில் ஜனவரி ஒன்பதாம் தேதிக்குத்தான் பிளான் செய்திருந்தார்கள். ஆனால் அன்றைய தினம் விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸாவதால் எதற்கு வம்பு என்று ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தார்கள். அதேசமயம் விஜய்க்கு போட்டியாக ஒன்பதாம் தேதியோ அல்லது பத்தாம் தேதியோ ரிலீஸானாலும் ஆகலாம் என்ற தகவலும் கடந்த சில நாட்களாகவே ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் நடந்த விழா: படத்துடைய ஷூட்டிங் முடிந்து இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை சுதா கொங்கரா தொடங்கியிருப்பதாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன்புகூட, பராசக்தி படத்தில் போடப்பட்ட செட்டுகளை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காட்சிப்படுத்தியிருந்தது படக்குழு. அந்த விழாவில் சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா உள்ளிட்டோர் பராசக்தி படத்தின் மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்து பேசினார்கள். கண்டிப்பாக இப்படம் தரமான சம்பவம் செய்யும் என்று நம்பப்படுகிறது.

சிவகார்த்திகேயன் கார் விபத்து: மேலும் இப்படம் சிவாவுக்கு 25ஆவது படம் என்பது கூடுதல் ஸ்பெஷல். இந்நிலையில் சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் தனது காரில் சென்றுகொண்டிருந்தார் சிவகார்த்திகேயன். அப்போது வாகன நெரிசல் ஏற்பட்டதால் அவரது கார் முன்னால் சென்ற மற்றொரு கார் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக எஸ்கேவுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. மற்றொரு காரை ஓட்டி சென்ற பெண் சிவாவின் கார் ஓட்டி வந்தவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட; காவல் துறையினர் வந்து சமாதானப்படுத்தி வாகன் நெரிசல் எதுவும் ஏற்படாமல் அங்கிருந்து இரண்டு தரப்பையும் அனுப்பி வைத்தார்கள்.

Credit: Filmibeat

Desktop Bottom Promotion