முன்னாள் கிரிக்கெட் வீரரை மணந்த சம்யுக்தா.. சிம்ப்பிளாக நடந்த இரண்டாவது திருமணம்.. மகனும் இருக்காரு

By Karunanithi Vikraman

சென்னை: நடிகை சம்யுக்தா சண்முகநாதன் தமிழில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவர் முதலில் செய்திருந்த திருமணத்திலிருந்து வெளியே வந்த சூழலில்; முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்தை காதலித்துவந்தார். அனிருதாவும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இரண்டு பேருக்கும் இன்று இரண்டாவது திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.

கோயம்புத்தூரை பூர்வீகமாகக் கொண்டவர் சம்யுக்தா சண்முகநாதன். இவரது பெற்றோர் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆவர். பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை கோவையிலேயே முடித்த அவர்; அடிப்படையில் ஒரு பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறு வயதிலிருந்தே மாடலிங்கில் ஆர்வமாக இருந்த சம்யுக்தாவுக்கு மாடலிங் துறைக்கான கதவுகள் திறந்தன. அதனை பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தார்.

சினிமாவில் என்ட்ரி: மாடலிங்கில் ஜொலித்தால் சினிமாவிலும் நுழையலாம் என்ற விதிக்கேற்ப இவருக்கு கோலிவுட் கதவுகளும் திறந்தன. அதன்படி ஷி, குத்துக்கு பத்து, காஃபி வித் காதல், காரி, குருமூர்த்தி, வாரிசு, மெட்ராஸ் மாஃபியா கம்பெனி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து சினிமாவில் நடித்துவந்தாலும் இதுவரை அவர் எதிர்பார்த்த வெற்றி பெரிய அளவில் கிடைக்கவில்லை. இது ஒருபக்கம் இருக்க பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார் சம்யுக்தா.


Second Marriage for Actress Samyuktha Wedding With Cricketer Anirudha Held Today
Photo Credit:

முதல் திருமணம்: இதற்கிடையே அவருக்கு அவரது பெற்றோர் கார்த்திக் சங்கர் என்பவரை திருமணம் செய்துவைத்தார்கள். கார்த்திக் ஒரு தொழிலதிபர். இரண்டு பேருக்கும் இடையேயான திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்த சூழலில்; கார்த்திக்குக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கார்த்திக் - சம்யுக்தா திருமண வாழ்க்கை பாதியில் முடிவடைந்தது.

அனிருதா ஸ்ரீகாந்த்துடன் காதல்: கார்த்திக்குடனான திருமண வாழ்க்கையிலிருந்து வெளியே வந்த பிறகு தொடர்ந்து சிங்கிளாக இருந்த அவர்; நடிப்பிலும் தனது மகனின் வளர்ப்பிலும் மட்டும் கவனம் செலுத்திவந்தார். சூழல் இப்படி இருக்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரின் மகனும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான அனிருதா ஸ்ரீகாந்த்துடன் காதல் ஏற்பட்டது. அனிருதாவும் ஏற்கனவே திருமணமாகி சில காரணங்களால் அந்த வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தவர்.

பா*ன் படத்தில்தான் நடிக்க முடியாது.. கஜோலை பக்கத்தில் வெச்சுட்டு அஜய் தேவ்கன் அதிரடி.. செம ஃபன்

இன்று நடந்த திருமணம்: இரண்டு பேரின் காதலையும் அறிந்துகொண்ட வீட்டார் உடனடியாக திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தார்கள். அதன்படி அனிருதாவுக்கும் சம்யுக்தாவுக்கும் இன்று சென்னையில் வைத்து சிம்ப்பிளாக திருமணம் நடந்து முடிந்தது. இத்திருமணத்துக்கு இருதரப்பினரின் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார்கள். இத்திருமணத்தில் சம்யுக்தாவின் மகன் ராயனும் கலந்துகொண்டார். திருமணம் நடந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.

Credit: Filmibeat

Desktop Bottom Promotion