Latest Updates
-
ரம்ஜான் ஸ்பெஷல் திண்டுக்கல் ஸ்டைல் மட்டன் பிரியாணி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2026 IPL T20-யில் உள்ள டாப் 5 இளம் வீரர்கள்.. சிஎஸ்கே அணியிலும் ஒருவர் உள்ளார்.. யாருன்னு பாருங்க.. -
ஏப்ரலில் 6 முறை உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
பாவக்காயை இப்படி தொக்கு செய்யுங்க.. கசப்பே தெரியாது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க... -
இந்த சட்னியை தினமும் 2 ஸ்பூன் சாப்பிடுங்க.. உடம்பில் இரத்தமும் ஊறும்.. முடி உதிர்வும் குறையும்.. -
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 21 முதல் இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது.. -
பீர்க்கங்காய் வாங்குனா டக்குனு இந்த மாதிரி பருப்பு மசியல் செய்யுங்க... சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும்! -
கோதுமை தோசையும்.. தக்காளி சட்னியும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம்...! -
சனிபகவான்-செவ்வாய் அரிய இணைப்பால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
தங்க நகை கடன்களுக்கு செக் வைத்த ஆர்பிஐ..!! வங்கிகளுக்கு பறந்த உத்தரவு..!! மக்களே கவனம்..!!
2025 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவு உயர்ந்து இருக்கிறது. சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரு லட்சம் ரூபாயை கடந்து வரலாற்று உச்சத்தை எட்டியது. தங்கத்தின் விலை உயர உயர தங்கம் வாங்கும் போக்கு குறைந்தது ஆனால் அதே வேளையில் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்கும் போக்கு மக்களிடையே அதிகரித்திருக்கிறது .
தங்கள் கைவசம் இருக்கக்கூடிய தங்கத்திற்கு இப்போதைய விலையுடன் ஒப்பிட்டால் இதற்கு முன்பு இருந்ததை விட தற்போது அதிக பணம் கிடைக்கிறது என்பதால் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் கைகளில் இருக்கும் தங்கங்களை அடகு வைத்து பணமாக மாற்றி தங்களுடைய தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர் . 2024 ஏப்ரலில் 1.01 லட்சம் கோடியாக இருந்த தங்க நகை கடன்களின் மதிப்பு, 2025 அக்டோபரில் 3.37 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து இருக்கிறது. தொடர்ந்து 18 மாதங்களாக இந்தியாவில் தங்க நகைகளை அடகு வைத்து வாங்கப்பட்ட கடன்களின் அளவு அதிகரித்தே வருகிறது.

வங்கிகள், வங்கிசாராத நிதி நிறுவனங்கள், நகை கடன்களுக்காகவே செயல்படும் நிறுவனங்கள் முன்பை விட அதிகமாக தங்க நகை கடன்களை வழங்குகின்றன. அந்த வகையில் இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஒரு பிரிவாக தங்க நகை கடன் பிரிவு உள்ளது. இந்த சூழலில் தான் இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கும் மிக முக்கியமான ஒரு அறிவுரையை வழங்கியுள்ளது.
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிக ஏற்ற இறக்கத்தோடு இருப்பதை ரிசர்வ் வங்கி சுட்டிக் காட்டி இருக்கிறது. எனவே வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் தங்க நகை கடன் வழங்குவதில் கவனத்துடன் இருக்க வேண்டுமென ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருக்கிறது. வங்கிகள் தங்கத்தின் சந்தை மதிப்பில் 70 முதல் 72% வரை கடன் தொகையாக வழங்கின. இதனை loan-to-value அல்லது LTV ratio என அழைக்கிறார்கள். ரிசர்வ் வங்கியின் இந்த அறிவுரையை தொடர்ந்து அதனை 60 முதல் 65 சதவீதமாக வங்கிகள் குறைத்து விட்டன.
வங்கி அதிகாரிகள் தெரிவித்ததாக தி பைனான்சியல் எக்ஸ்பிரஸ் இது தொடர்பான செய்தியை வெளியிட்டு இருக்கிறது. தங்கம் விலை அதிக ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால் ரிசர்வ் வங்கி இப்படி ஒரு அறிவுரையை வங்கிகளுக்கு அனுப்பி இருப்பதாகவும் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடன் வழங்குவதில் விவேகமாக செயல்பட்டு தங்களுக்கான ரிஸ்க் மேனேஜ்மென்டை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறது.
2026ஆம் ஆண்டில் தங்கம் விலை ரூ.2 லட்சத்தை எட்டுமா? உலக தங்க கவுன்சில் தலைவர் பதில்!!
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பொதுமக்களுக்கு தாங்கள் அடகு வைக்கக்கூடிய நகைக்கு இனி குறைந்த அளவான தொகை தான் கடனாக கிடைக்கும். ஒருவேளை தங்கத்தின் விலை தற்போதுள்ள விலையில் இருந்து 10 லிருந்து 15 சதவீதம் குறைகிறது என்றால் வங்கிகளுக்கு நிலுவையில் உள்ள கடன் மதிப்பு, அடமானம் வைக்கப்பட்ட நகைகளின் மதிப்பை விட அதிகமாகிவிடும்.
பொங்கல் பரிசு அறிவிப்பு எப்போது? ஜனவரி முதல் வாரத்தில் டோக்கன் விநியோகமா? பரபரக்கும் தலைமை செயலகம்!
இதனால் கடன் வாங்குபவர்கள் திரும்ப செலுத்தாமல் போய் வங்கிகள் அந்த நகைகளை ஏலம் விடும்போது கொடுத்த கடனை விட குறைந்த பட்ச தொகையை தான் வசூலிக்க முடியும்.தங்கம் விலையை பொருத்தவரை இந்த ஆண்டில் மட்டும் கடந்த மூன்று மாதத்தில் 20% உயர்ந்துள்ளது. கடந்த ஆறு மாதத்தில் 35 %, இந்த ஓராண்டு காலத்தில் சுமார் 60 சதவீதத்திற்கும் மேலும் உயர்வு கண்டிருக்கிறது .
Credit: Goodreturns



Click it and Unblock the Notifications












