Latest Updates
-
தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
வேலையை காட்டிய RBI.. தங்கத்தை வைத்து ஆடும் தரமான கேம்.. இந்தியாவின் மிக முக்கியமான மூவ்!
சென்னை: உலக அளவில் மத்திய வங்கிகள் தங்கத்தை மீண்டும் வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன. இதனால் தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கி உள்ளது. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 காரட் தங்கம் விலை ₹12,272 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 காரட் தங்கம் விலை ₹11,249 ஆகவும், 1 கிராம் 18 காரட் தங்கம் விலை ₹9,389 ஆகவும் உள்ளது.
இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில், நிகர அளவில் 220 டன் தங்கத்தை தங்கள் கையிருப்பில் சேர்த்துள்ளன. இதனால் தங்கத்திற்கான தேவை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. கடந்த ஆண்டு அதன் விலை உயர்வு, மத்திய வங்கிகளின் தீவிர கொள்முதல்களால் வேகமாக உயர்ந்தது. உலக தங்க கவுன்சிலின் (WGC) 'தங்க தேவை போக்குகள் Q3 2025' அறிக்கையின்படி, இந்த 220 டன் கையிருப்பு, முந்தைய காலாண்டைக் காட்டிலும் 28% அதிகம்.
தங்கத்தை வாங்கி குவிக்கும் இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை சுமார் 600 கிலோ தங்கத்தை தனது சேமிப்பில் சேர்த்துள்ளது. தொடர்ந்து இந்தியா தங்கத்தை அதிக அளவில் வாங்குகிறது. இதன் மூலம், செப்டம்பர் இறுதி வாரத்தில் மொத்த தங்க இருப்பு 880 டன்களாக அதிகரித்துள்ளது.
செப்டம்பர் 30-ல் முடிவடைந்த காலாண்டில் மத்திய வங்கிகளின் தங்க கொள்முதல், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 10% அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு 199.5 டன்னாக இருந்த கொள்முதல் தற்போது உயர்ந்துள்ளது. தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளாக சரிந்த கொள்முதலுக்குப் பிறகு இந்த உயர்வு குறிப்பிடத்தக்கது. வரலாறு காணாத விலை ஏற்றம் இருந்தபோதிலும், தங்கத்தின் மீது மத்திய வங்கிகளின் தீவிர ஈடுபாட்டை இது காட்டுகிறது.
மத்திய வங்கிகளின் தங்க கையிருப்பு
இந்த ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், மத்திய வங்கிகளின் தங்க கையிருப்பு 634 டன்களாக உள்ளது. இது 2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் வாங்கப்பட்ட 724 டன்களுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவு.
டிஜிட்டல் தங்க முதலீடுகள், அதாவது எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகள் (ETFs) மற்றும் அதுபோன்ற கருவிகள், கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இது 221 டன்களாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 134% அதிகமாகும், மேலும் முந்தைய காலாண்டைக் காட்டிலும் 30% அதிகமாகும்.
தங்கத்தில் உயரும் முதலீடு
கஜகஸ்தான் தேசிய வங்கி மூன்றாவது காலாண்டில் 18 டன்களுடன் மிகப்பெரிய கொள்முதல் செய்த வங்கியாக உருவெடுத்துள்ளது. பிரேசில் மத்திய வங்கி 15 டன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இது 2021-க்குப் பிறகு பிரேசில் மேற்கொண்ட முதல் கொள்முதல் ஆகும்.
உலக தங்க கவுன்சில் அறிக்கையின்படி, மூன்றாவது காலாண்டில் மத்திய வங்கிகள் மேற்கொண்ட தங்க கொள்முதலில் 66% தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த நடைமுறை 2022 ஆம் ஆண்டு முதல் தொடர்கிறது.
உலக மத்திய வங்கிகள் தங்கத்தின் மீது இவ்வளவு தீவிரமாக ஆர்வம் காட்டுவதன் அர்த்தம்.. தங்கம் விலை மேலும் உயரப்போகிறது என்பதே. இதே நிலை தொடர்ந்தால் தங்கம் கண்டிப்பாக உச்சத்தை நோக்கி செல்லும்.
Credit: Oneindia



Click it and Unblock the Notifications