Latest Updates
-
தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
ராஜ்தானி ரயில் மோதி.. உடல் சிதறி பலியான 8 யானைகள்! அசாமில் அதிர்ச்சி
டெல்லி: அசாமின் ஹோஜாய் மாவட்டத்தில் இன்று அதிகாலை, சாய்ரங்-புது டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் யானை கூட்டம் மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் எட்டு யானைகள் உயிரிழந்தன. ரயிலின் எஞ்சின் மற்றும் 5 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் ஒரு யானைக்குட்டி மட்டும் காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் ரயில் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

என்ன நடந்தது?
மிசோரமின் சாய்ரங்கில் இருந்து, டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலை நோக்கி, நேற்றிரவு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் கவுகாத்தியிலிருந்து, சுமார் 126 கி.மீ தூரத்தில் வந்துக்கொண்டிருந்தபோது, அதிகாலை 2.17 மணியளவில், தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை கூட்டத்தின் மீது மோதியது. மோதிய வேகத்தில் சில யானைகள் ஆங்காங்கே தூக்கி வீசப்பட்டன. ஓரிரு யானைகள் ரயிலின் அடியில் சிக்கியது. இப்படியாக மொத்தம் 8 யானைகள் பலியாகின.
விபத்தும் மீட்பும்
விபத்து குறித்த தகவல் அறிந்தவுடன், ரயில்வே துறையினர் உடனடியாக மீட்பு பணியில் இறங்கினர். யானை மீது மோதிய வேகத்தில் ரயிலின் என்ஜின் மற்றும் 5 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் நல்வாய்ப்பாக பயணிகள் யாரும் உயிரிழக்கவில்லை. சிலருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது. விபத்தில் 8 யானைகள் உயிரிழந்திருக்கிறது என்பதை வனத்துறையினர் உறுதி செய்திருக்கின்றனர். யானைகளின் உடல் பாகங்கள் தண்டவாளங்களில் சிதறியுள்ளது. அதை அப்புறப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால் வடகிழக்கு பகுதிக்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது.
முதற்கட்ட விசாரணை
இந்த விபத்து தொடர்பாக வனத்துறை மற்றும் ரயில்வே துறை விசாரணையை தொடங்கியுள்ளது. ரயில் ஓட்டுநர் தண்டவாளத்தில் யானைகளை பார்த்தவுடன் உடனடியாக அவசர பிரேக்குகளை பயன்படுத்தியிருக்கிறார். இருப்பினும் ரயில் மோதிய வேகத்தில் யானைகள் உயிரிழந்திருக்கின்றன என ரயில்வேதுறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
Credit: Oneindia



Click it and Unblock the Notifications